கால்நடை காதலன்; நடந்து சென்று சிகிச்சை - வீடற்ற செல்லப் பிராணிகளின் மருத்துவர்!

By YS TEAM TAMIL|6th Jan 2021
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

2020ம் ஆண்டு பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் ஆண்டாக இருந்தாலும், பல நல்ல உள்ளங்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களின் உன்னதமான பங்களிப்பையும் வெளிகொண்டுவந்திருக்கிறது.


அப்படி ஒருவராகத்தான் இருக்கிறார் இந்த கால்நடை மருத்துவரும். வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் இவரின் செயல் பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் வேன் ஸ்டவார்ட் வேன். இவருக்கு, சிறுவயது முதலே செல்லப்பிராணிகள் மீது அளவற்ற அன்பு. அவற்றை பாதுகாப்பாகவும், அன்புடனும், அரவணைப்புடனும் பார்த்துக்கொள்வார் வேன். அதை அவர் விரும்பிச் செய்வார்.

ஸ்டவார்ட் வே

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளைத் தத்தெடுத்து வளர்ப்பார். நியூ மெக்ஸிகோவில் வளர்ந்தவர், தனது பள்ளிப்படிப்பையும் அங்கேயே முடித்தார். பின்னாளில் கால்நடை மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்தவர், கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி பெற்றார்.


கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளால் திடீரென ஓரங்கட்டப்பட்ட விலங்குகளுக்கு, இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஸ்டீவர்ட் விரும்பினார். இப்போது அவர் வீடற்ற மக்களின் விலங்குகளுக்கு மீட்பராகி வருகிறார்.


தற்போது கலிபோர்னியா சாலைகளில் காலார நடந்து செல்லும் வேன், வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கிறார். இலவசமாக மருத்துவம் பார்ப்பது மட்டுமில்லாமல் செல்லப்பிராணிகளுக்குத் தேவையான மருத்து, உணவு, தடுப்பூசிகள், போன்ற தேவைகளுக்கும் தனது சொந்த பணத்தை செலவு செய்து உதவி வருகிறார்.

அதுமட்டுமின்றி, கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாக வேண்டிய நோய்களான பல்சிதைவு, தீவிர உடல்நலக்குறைவு ஆகியவற்றுக்காக செல்லப்பிராணிகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்களுக்கு சென்று சிகிச்சை பார்க்கிறார்.
ஸ்டவார்ட் வே

இதுபோன்ற பெரிய அளவிலான பாதிப்புகள், மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகக்கூடிய அறுவை சிகிச்சைகள், உடலின் உட்பகுதியின் பாதிப்புகள் ஆகியவற்றுக்காக கிரவுட் ஃபண்டிங் முறையை உருவாக்கியுள்ளார். இதற்காக GoFundMe என்ற பக்கத்தை ஏற்படுத்தி மற்ற மக்களின் உதவியையும் பெற முயற்சித்து வருகிறார் வேன். 


வீடற்றவர்களின் உண்மையான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னும் நேரம் எடுக்கும் என்ற நிலையில், வீடற்று கிடக்கும் செல்லப்பிராணிகளை கவனித்து, அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார் வேன் ஸ்டவார்ட்.


வாழ்த்துகள் வேன்!


தகவல் உதவி- indiatimes | தொகுப்பு: மலையரசு