'அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது' - சீரம் நிறுவனம்!
AstraZeneca ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. இதன் செயல்திறன் முடிவுகள் கூட 60-70 சதவிகிதமாக உள்ளன, என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"AstraZeneca ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. இதன் செயல்திறன் முடிவுகள் கூட 60-70 சதவிகிதமாக உள்ளன. கோவிட் வைரஸூக்கு எதிராக போராடாக்கூடிய தடுப்பூசியாக இது இருக்கும்,” என்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.
இந்த தடுப்பு மருந்தை, நம் நாட்டில் சோதனை செய்து, விநியோகிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த, இந்திய சீரம் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்து, 90 சதவீதம் பலன் அளிக்கக் கூடியது என, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் உற்பத்தியில் சிறிய பிழை நிகழ்ந்ததாக, ஆக்ஸ்போர்டு பல்கலையும், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் தெரிவித்தன. இது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் COVID-19 தடுப்பூசியின் ஆரம்ப முடிவுகள் குறித்து கேள்விகள் எழுந்ததால் தடுப்பூசி குறித்து சீரம் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஆஸ்ட்ராசெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சீரம் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும் அனைத்து நெறிமுறைகளையும் கண்டிப்புடன் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவில் சோதனை முறைகள் சீராக நடைப்பெற்று வருவதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தடுப்பூசி பாதுகாப்பானது. சிறந்த பலன் அளிக்க கூடியது. 60 - 70 சதவீதம் பலன் அளிக்கக் கூடியது. மக்கள் பொறுமை காக்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. பல்வேறு வயதினருக்கு, பல்வேறு விதமான அளவில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்போது மருந்தின் செயல் திறனில் லேசான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. நாம் பதட்டமடையாமல் பொறுமையுடன் இருக்கவேண்டும். இதுவரை எந்த பிரச்னையுமில்லை. தேவைப்பட்டால் அறிக்கை அளிப்போம்.”
இந்த வார தொடக்கத்தில், இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் COVID-19 தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளின்போது, 70 சதவிகிதம் பயனுள்ளதாகவும், கொரோனா வைரஸை அழிக்ககூடிய நம்பிக்கையான முடிவுகளையும் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கட்டுரை தொகுப்பு: மலையரசு