90 சதவீத வெற்றி விகிதம் கொண்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி!
மாடர்னா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி, முதல் கட்ட சோதனையில் 94.5 சதவீத வெற்றி விகிதம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நம்பிக்கை தரும் செய்தி வெளியாகியுள்ளது. 'மாடர்னா' (Moderna) நிறுவனம் தனது தடுப்பூசி சக்தி மிக்கதாக இருபதாகத் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தொடர்ந்து நடத்தி வரும் ஆய்வின் முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசி 94.5 சதவீத வெற்றி விகிதத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம், Pfizer Inc நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி செயல்திறன் மிக்கதாக இருப்பதாக அறிவித்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. இரண்டு நிறுவனங்களும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கான உரிமம் பெற முயன்று வருகின்றன.
இந்த மைல்கல் வரவேற்கத் தக்கது என்று கூறியுள்ளர் மாடர்னா நிறுவன தலைவர் டாக்டர்.ஸ்டீபன் ஹாகே. இரண்டு நிறுவனங்களிடம் இருந்து ஒரே மாதிரி முடிவு வந்திருப்பது மேலும் நம்பிக்கை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த பெருதொற்றை நிறுத்தக்கூடிய தடுப்பூசி சாத்தியம் மற்றும் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பலாம் எனும் நம்பிக்கையை இது அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மாடர்னா நிறுவனத்தால் மட்டும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும், உலக தேவை நிறைவேற்ற மேலும் பல தடுப்பூசிகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று உலகில் 13 லட்சம் பேருக்கு மேல் பலி வாங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 245,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
தற்போதைய நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, மாடர்னா அல்லது Pfizer தடுப்பூசியை அவசரத் தேவைக்காக பயன்படுத்த அனுமதித்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் பகுதியளவில் தடுப்பூசி கிடைக்கலாம். இரண்டு தடுப்பூசிகளுமே பல வார இடைவெளியில் இரண்டு முறை எடுத்துக்கொள்ளபட வேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு என 20 மில்லியன் தடுப்பூசி தயாரிக்க மாடர்னா திட்டமிட்டுள்ளது. Pfizer மற்றும் அதன் பங்குதாரரான ஜெர்மனி நிறுவனம் BioNTech உலக அளவில் 50 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
மாடர்னாவின் தடுப்பூசி, 30,000 தன்னார்வளர்கள் மத்தியில் சோதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், இந்த ஆய்வில், இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கு பிறகு தொற்று பெற்ற 95 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இவர்களில் ஐந்து பேர் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் பிளேசிபா விளைவால் பாதிப்பு உண்டானதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு தொடர்கிறது. நோய் தொற்று கண்டறியப்பட்டு கணக்கில் கொள்ளப்படும் போது, தடுப்பூசியின் பாதுகாப்பு விகிதம் மாறலாம் என மாடர்னா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் சொல்ல முடியாத நிலை உள்ளது. மற்ற தடுப்பூசிக்கும் இந்த நிலை பொருந்தும்.
எனினும் இந்த சோதனையில் நம்பிக்கை தரும் விஷயங்கள் இருப்பதாக ஆய்வு நடத்திய சுயேட்சை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் தற்போது 11 தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன. மாடர்னா மற்றும் Pfizer-BioNTech நிறுவன தடுப்பூசிகள் mRNA vaccines ரகத்தைச்சேர்ந்தவை.
இவை கொரோனா கிருமிகளால் செய்யப்படவில்லை என்பதால், இதன் காரணமாக தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, தடுப்பூசி வைரசுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதற்கான நல்ல பலன் ஆச்சர்யம் அளிக்கிறது.
கொரோனா தடுப்பூசிகள், மற்ற புளு காய்ச்சல் தடுப்பூசி போல 50 சதவீத பலன் மட்டுமே அளிக்கலாம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இது தவிர தடுப்பூசிகளை விநியோகிப்பதும் சவாலாக அமையலாம்.
செய்தி- பிடிஐ