மின்சார கார் e-Tron 2020 இறுதிக்குள் அறிமுகம்: Audi அறிவிப்பு!
இறக்குமதி உயர்வை மீறி திட்டமிட்டப்படி தனது மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளளது Audi நிறுவனம்.
ஜெர்மனி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), பட்ஜெட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டிருப்பதை மீறி, e-Tron என்ற தனது மின்சார எஸ்.யு.வி வாகனத்தை இந்தியாவுக்குத் திட்டமிட்டப்படி கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாட்டரி பைசல் தொடர்பாக கட்டுப்பாட்டு விதிகளில் தெளிவு தேவை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் எங்கள் திட்டத்தில் எந்த தாக்கமும் செலுத்தப் போவதில்லை. மின்மயமாக்காலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. e-Tron நிச்சயம் கொண்டு வருவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிகழ்வும்,” என்று ஆடி நிறுவன இந்தியத் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்தார்.
2020-21 பட்ஜெட்டில், மின்சார வாகனங்கள் இறக்குமதி மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பதை அடுத்து, இ-டிரான் அறிமுகத் திட்டத்தை நிறுவனம் மாற்றியுள்ளதா எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இறக்குமதி மின்சார வாகனங்கள் மீதான வரி தற்போதைய 25 சதவீதத்தில் உர்ய்ந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதி அளவிலான பயணிகள் வாகனத்தின் வரி 15 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகின்றன.
"எப்படி இருந்தாலும் 100 சதவீத இறக்குமதி இ-டிரானை கொண்டு வர இருக்கிறோம். நாங்கள் இருக்கும் பிரிவில் இறக்குமதி வரிகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன,” என்று தில்லான் தெரிவித்தார்.
இ-டிரான் அதிக எண்ணிக்கை காராக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். “அரசு தரப்பில் இறக்குமதி கணிசமாக குறைக்கப்படாத வகையில் நாங்கள் ஆயிரக்கணக்கில் கார்களை விற்கப்போவதில்லை,” என்றும் தெரிவித்தார்.
இந்த வாகனத்தை இந்தியாவிலேயே தயாரிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“தேவையான எண்ணிக்கை விற்பனை எட்டும் வரை இந்தியாவில் உற்பத்தி செய்வது கடினம். இந்தியாவில் உற்பத்தி செய்ய குறைந்தபட்ச அளவிலான விற்பனை எண்ணிக்கையாவது வேண்டும். அதுவரை அதிக வரியுடன் இறக்குமதி வாகனத்தை விற்பனை செய்வோம்.
அதிக இறக்குமதி வரி காரணமாக வரம்புகள் சில இருந்தாலும், தில்லி போன்ற சில மாநிலங்களில் மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி குறைவு மற்றும் மகாராஷ்டிராவில் பதிவு கட்டணம் இல்லை போன்ற சாதகங்கள் உள்ளன என்றார்.
மின்சார வாகன அறிமுகத்திற்கு முந்தைய தயாரிப்பு முக்கியம் என்று கூறியவர் நிறுவனம் இப்போது, ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் உதிரிபாகங்களை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக கூறினார்.
மின்சார வாகனங்கள் பாட்டரிகளை பைசல் செய்வது தொடர்பாக கட்டுப்பாடு அம்சங்கள் தெளிவாக இல்லை என்று அவர் கூறினார்.
"இன்று இதற்காக ஏதேனும் விதிகள் உள்ளனவா? எனக்குத் தெரியவில்லை. இவற்றை இந்தியாவிலேயே பைசல் செய்யலாமா அல்லது உற்பத்தி நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமா? இது போன்ற கேள்விகள் உள்ளன,” என்றார்.
மின்சார எஸ்.யு.வி வாகன அறிமுகத்திற்கான தயாரிப்பு பற்றி குறிப்பிடும் போது, “இந்த காரை கொண்டு வரும் போது, இது தொடர்பான எங்கள் ரிஸ்க் மற்றும் வாய்புகளை அறிந்திருக்க விரும்புகிறோம். என்ன இருக்கிறது, என்ன இல்லை எனத்தெரிய வேண்டும். இதை தான் இப்போது ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்’ என்றார்.
மின்சார வாகனங்கள் தவிர, ஹைபிரிட் வாகனங்களையும் அரசு ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்