நாளை முதல் டி.பி.யை மாற்றச் சொன்ன பிரதமர் மோடி - தேசியக்கொடிக்கு மரியாதை!
தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நினைவுகூறும் வகையில் நாளை முதல் ஆகஸ்ட் 15 மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் இந்திய பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறார். 91வது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா சுதந்திரம் அடைந்து தனது 75வது ஆண்டுகள் நிறைவடைவது தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' ஒரு வெகுஜன இயக்கமாக மாறி வருகிறது எனத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
‘நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுப்போம்,’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான மூவர்ணக் கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளின் சுயவிவரப் படமாக வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில், மஹோத்சவ் ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்து வருவதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் கூறினார்.
"இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, நாம் அனைவரும் ஒரு அற்புதமான மற்றும் வரலாற்று தருணத்தைக் காணப் போகிறோம்," என்று அவர் ஆகஸ்ட் 15 ஐக் குறிப்பிடுகிறார்.
தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நினைவுகூறும் வகையில் நாளை முதல் ஆகஸ்ட் 15 மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில், மஹோத்சவ் ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்து வருவதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் கூறியுள்ளார்.
"இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, நாம் அனைவரும் ஒரு அற்புதமான மற்றும் வரலாற்று தருணத்தைக் காணப் போகிறோம். சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவை காண்பது தற்போதைய தலைமுறையின் அதிர்ஷ்டம்," எனக்குறிப்பிட்டுள்ளார்.
“அடிமைச் சகாப்தத்தில் நாம் பிறந்திருந்தால், இந்நாளை எப்படிக் கற்பனை செய்திருப்போம்,” என்று கூறிய அவர், 'Azadi ka Amrit Mahotsav' நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் வெளிப்படும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், நாட்டு மக்கள் அனைவரும் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்களை முழு நாட்டு பற்றுடன் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்கி அவர்களின் கனவுகளான இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும்,” எனக்கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை உதம் சிங்கின் நினைவுத் தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய பல ரயில் நிலையங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, 24 மாநிலங்களில் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை பல நிகழ்ச்சிகளை நடத்தும் என்றும் கூறினார்.
காமன்வெல்த் போன்ற பல சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய விளையாட்டு வீரர்களையும் பிரதமர் மோடி பாராட்டினார். ஏஸ் ஷட்லர், பி.வி.சிந்து சிங்கப்பூர் ஓபனில் தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார், அதே நேரத்தில் நீரஜ் சோப்ராவும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நாட்டிற்காக வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் என வீரர்களின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
”17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா நடத்தப் போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி அக்டோபரில் நடைபெறும், இது நமது நாட்டு பெண்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்," என்று கூறியுள்ளார்.
தகவல் உதவி - PTI