Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ரூ.4 கோடி மதிப்பில் உயர்ந்த நிறுவனத்தின் பின்னணியில் திருச்சி இளைஞர்களின் வெற்றி வியூகம்!

ரூ.4 கோடி மதிப்பில் உயர்ந்த நிறுவனத்தின் பின்னணியில் திருச்சி இளைஞர்களின் வெற்றி வியூகம்!

Monday June 06, 2016 , 3 min Read

மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம், குடும்பம், குழந்தைகள்... அவ்வளவுதான் லைப் செட்டில் என்று இருந்துவிடாமல், நம்மால் முடிந்ததை நாம் சாதித்து காட்ட வேண்டும் என்ற தன்னார்வத்துடன், ஜார்ஜ் கிறிஸ்டோபர் மற்றும் சுரேஷ் குமார் தாங்கள் பணிபுரிந்து வந்த Cisco நிறுவன வேலையை விட்டு, அதில் கிடைத்த H1 விசா வாய்ப்பையும் மறுத்துவிட்டு, தொழில்முனைவர் ஆனார்கள். இன்று வருடத்திற்கு நான்கு கோடி ரூபாய் வருவாய் காணும் நிறுவனத்தின் நிறுவனர்கள் இந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள். 3 மாத கைக்குழந்தையுடன் இருந்த ஜார்ஜ் குடும்பத்துக்கும், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருந்த சுரேஷுக்கும் தொழில்முனைவில் ஈடுபட எடுத்த முடிவு சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் தங்கள் கனவை நோக்கிய பயணத்தின் ஆரம்பம் அதுவே என்று திடமாக இருந்தனர்.

ஜார்ஜ் கிறிஸ்டோபர் மற்றும் சுரேஷ் குமார்  

ஆப்ஸும் அவார்ட்ஸும்

2012 இல் இவர்கள் முதலில் சென்னையில் தொடங்கிய "மாக் ஆப் ஸ்டுடியோ" (MacAppStudio) என்ற ஆப் (APP) டெவலாப்மென்ட் நிறுவனம், iOS, Android, windows, Mac OSX என்று பவ்வேறு துறைகளுக்காக இதுவரை 120 ஆப்ஸை உருவாக்கியுள்ளது. 

தினசரி வரவுசெலவுகளை மேற்கொள்ளுதல், வேலைகளை நினைவூட்டுதல், கோப்புகளை (filesஐ) அதன் வகைப்படி பிரித்து ஸ்மார்டாக அடுக்குவது, விருப்பங்களை அழகாய் கேட்டு எழுதிக்கொண்டு வைத்தல் போன்ற சுவாரஸ்யமான செயலிகளை தயாரித்து உள்ளனர். மூன்று மில்லியன் பதிவிறக்கத்துடன் இவர்களது ஆப்ஸ், தினசரி நான்கு லட்சம் பேரால் பயன்படுத்தப்படுகிறது.

இவர்களது வெற்றிக்கு 'இன்டெல் ப்ளாக்பெல்ட்ஸ் விருது' மற்றும் 2010, 2011-க்கான 3 'இன்டெல் டெவலப்பெர்ஸ் ஆப் சேலன்ஜஸ் விருது'டன் 1,00,000 டாலரைப் பரிசுதொகையை வென்றுள்ளது இவர்களது தயாரிப்பு. மேலும், X86 ப்ரோசெசருக்காக மேம்படுத்தப்பட்ட ஆப்ஸை, கூகுள் ப்ளேவில் ஆப் ஸ்டோர் ஒன்றை உருவாக்கித் தருமாறு இன்டெல் இவர்களிடம் கேட்டுக்கொண்டது.

முதலீடாக முன்னேற்றத்தைக் கண்டது

2014 ஆகஸ்ட் முதல் இவர்கள், Fortune பத்து நிறுவனங்கள் உட்பட, 30 வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்துள்ளனர். "எங்களது உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பும் தயாரிப்பும் கொண்ட செயலிகளை, சக கம்பனிகளை விட பத்து இருபது மடங்கு அதிகமாக விற்பனை செய்கிறோம்", என்று கூறுகிறார் 34 வயதுள்ள திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரியின் B.Tech பட்டதாரியான சுரேஷ்.

வெற்றிப்படியில் அடுத்தப்படியாக இவர்களது ஆப்ஸ், மாக் ஆப் ஸ்டோரின் முதலிடத்தைப் பிடிக்க முன்னேறிக் கொண்டு இருந்த சமயத்தில், நல்ல மார்க்கெட்டிங் இல்லாததால் வருவாய் சற்று நிலைகுலயத் தொடங்கியது.

அப்போதுகூட ஏற்பட்ட செலவை ஈடுகட்ட முதலீட்டாளர்களை நாடுவதை விடுத்து, அதற்குப் பதிலாக சிறந்த ப்ராடக்ட் தயாரிப்பதிலே குறியாய் இருந்தோம்," என்றார் சுரேஷ்.

நிறுவனம் தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகள், ஜார்ஜும், சுரேஷ்வும் மட்டுமே பணிகளை செய்து செயல்ப்பட்டனர். இருவர் மட்டுமே இணைந்து குறைந்த மின்னழுத்ததில் 1mbps இன்டர்நெட் ஸ்பீடில் ப்ராடக்டுகளைத் தயாரித்துள்ளனர்.

இன்று, இருவரும் மாக் அப்ப் ஸ்டுடியோ (MacAppStudio), ப்ளூ இன்னோவேன்ஸ் (BlueInnovations), ராக்கெட் X லேப்ஸ் (Rocket X Labs) ஆகிய மூன்று நிறுவனங்களின் அதிபதிகள். 2012 இல் நிறுவப்பட்ட 'ப்ளூ இன்னோவேன்ஸ்', ரியல்சென்ஸ் மற்றும் இரண்டு பயனை ஒன்றிலே கொண்ட சாதனங்கள் தயாரிக்கிறது. இது Androidக்கான X86 போன்றவையை உள்ளடக்கியுள்ளது. இன்டர்நெட் ப்ரோடக்ட்களையும் சேவைகளையும் உருவாக்கும் ஆய்வுக்கூடமான 'ராக்கெட் X லேப்ஸ்', 2016 ஜனவரி -இல் தொடங்கப்பட்டது.

வெற்றியின் வழிகள்

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, மாக் ஆப் ஸ்டுடியோ முதலில் செயலியை வடிவமைத்து, அதன் முதல் பதிப்பை உருவாக்கும். பிறகு, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மேம்படுத்தலும் மாற்றங்களும் செய்து, முழுமையான இன்டிகிரேஷன் டெஸ்ட் செய்து, சரிப்பார்ப்பதற்காக அனுப்பப்படும். 

"மேலும் பல சிறப்பு அம்சங்களை ஆப் அப்டேட் செய்யச்செய்ய சேர்த்து விடுவோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஆப் எப்படி முன்னேறுக்கிறது என்பது தெளிவாக புரியும்," 

என விளக்கமளித்தார் 35 வயதான கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் இன்ஜினியரிங் பட்டதாரியான ஜார்ஜ்.

மாக் ஆப் ஸ்டுடியோ குழு 

தயாரிப்பு நேரத்தைச் சேமிக்க, முன்னாலே வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கூறுகளை மறுபடியும் பயன்படுத்தி செய்யும் வரைமுறையை இவர்கள் பின்பற்றுக்கிறார்கள். இவர்களது சென்னையில் உள்ள ஸ்டார்ட்அப் தற்போது 42 ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறது.

வருவாய் விகிதம்

கடந்த வருடம், மாக் ஆப் ஸ்டுடியோ, 141 சதவித வருடாந்திர வளர்ச்சியோடு, நான்கு கோடி வருமானத்தை எட்டியுள்ளது. இந்த வருடத்தில் இவர்களது ஆப்ஸ் 10 மில்லியன் பயனாளிகளுடன், நிறுவனத்தின் வருவாய் 16 கோடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.

தற்போது, ஆன்லைன் சார்ந்த ஸ்கூல் மேனஜ்மென்ட் சிஸ்டம்சில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் இடையே நல்ல தொடர்ப்பை உண்டாக்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. அத்துடன், புத்தகங்கள், கேம்ஸ், ஆப்ஸ் அடங்கிய பள்ளி பாடத்திட்டங்கள் கொண்ட 'மை ஸ்கூல் டாப்' (MySchoolTab) என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறையின் கற்பிக்கும் கருவியையும் வெளியிட்டுள்ளனர்.

ஆப் டெவலப்மென்ட் சந்தை நிலவரம்

ஜூன் 2016 க்குள் இன்டர்நெட் உபயோகப்படுத்துபவர்கள் எண்ணிக்கை 462 மில்லியனை அடையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் பணம் செலுத்தி பயன்படுத்தப்படும் ஆப்ஸின் வருவாய் 317.6 மில்லியன் டாலராக உயரவும் வாய்ப்புள்ளது. 

ரியல் என்ட்டர்ப்ரைசஸ் மற்றும் ஆப் டெவலப்பிங் நிறுவனத்தை இணைக்கும் சந்தை நிறுவனமான 'கான்ட்ராக்ட் ஐஃயு' (Contract IQ)-இன் நிறுவனர், அஷ்வின் ராமசாமி கூறுகையில், 

"நாங்கள் பேட்டி எடுத்த 60 சதவவீத டெவலப்மென்ட் ஸ்டுடியோசில், மொபைல்கள் தான் தங்களது ஐம்பது சதவிதத்திற்கும் மேற்பட்ட வருவாயைத் தருவதாக கிட்டத்தட்ட 65 சதவிதம் பேர் கூறியுள்ளனர். ஸ்டார்ட்அப்ஸ் தான் 50 சதவிதம் ஆப் டெவலப்மென்ட் தேவையைப் பூர்த்திச்செய்கிறது" என்றார்.

ஓபன் X செல் (Open X Cell), சோர்ஸ்பிட்ஸ் (Sourcebits), கான்ச்டன்ட் இன்போ சொளுஸன்ஸ் (Konstant Infosolutions), டெக்அஹெட் (TechAhead), க்யு பர்ஸ்ட் (Q Burst) முதலிவை இந்தியாவின் மொபைல் ஆப் டெவலாப்மென்ட் கம்பெனிகளாகும். தொழில் வர்த்தக செய்திகள் அளிக்கும் Deloitte நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2017க்குள் அதிகளவிலான மொபைல் ஆப் டெவலப்பரஸ் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் காண உள்ளது.

இணையதள முகவரி: MacAppStudio

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்