கூகுள் தேடல்– அறிந்ததும் அறியாததும்!
இதுவரை கூகுள் தேடலின் மூலம் பல்வேறு இணைப்புகளை பதிலாகப் பெற்றிருப்போம், ஆனால் அதுமட்டும் இன்றி பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு கூகுளை பயன்படுத்தலாம். பின் வரும் பத்திகளில் கூகுளின் மேம்பட்ட சேவைகளைப் பற்றிப் பார்ப்போம்.
இன்றைய உலகில் பலருக்கு இணையம் இதயமாக மாறிவிட்டதில் கூகுள்; அவர்களின் பார்வை புலனாக மாறிவிட்டது.
கூகுள் என்பதை ஒரு தேடு பொறி இயந்திரமாக மட்டும் பார்க்காமல் ஒரு நண்பரை போல பார்த்து பழகுவது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பின் வரும் சேவைகளை பயன்படுத்திப் பார்க்க www.google.com என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும், இதில் சில சேவைகளை பயன்படுத்த நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்திருக்க வேண்டும்.
கணிப்பான் (Calculator) :
கூகுள் தேடலில் மிக எளிமையாக கணக்கீடுகளை கையாள முடியும். நாம் கணக்கிட வேண்டிய எண்களையும் அதற்கான குறியீடுகளையும் நாம் கூகுளில் பதிவிடும் பொழுது அதற்கான விடையை நொடி நேரத்தில் பதிலளித்துவிடும்.
உதாரணமாக , 1000 * 1000 என பதிவிட்டு தேடுதலை தொடங்கும் போது 1000000 என்று பதிலளிக்கும்...
காலநிலை வழிகாட்டி (Weather Forecast) :
இன்றைய நாளின் காலநிலையை அறிந்துகொள்ள வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. கூகுளின் வழியாக வீட்டிற்கு உள்ளே இருந்தும் தட்பவெப்ப நிலையை காண முடியும். நமது ஊரின் வானிலை அறிவியலர் ரமணன் ஓய்வு பெற்று விட்டாலும் கூகுளின் சேவையை நாம் பயன்படுத்தி வானிலை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக , weather chennai
நுகர்வோர் குறைதீர்ப்பு (customer care) :
பல்வேறு நிறுவனங்களின் நுகர்வோர் குறைகேட்கும் துறையின் தொலைபேசி எண்களையும், அருகில் உள்ள அலுவலக முகவரிகளையும் கூகுள் தேடலில் தெரிந்துகொள்ள முடியும்.
உதராணமாக: sony customer care number
மொழிபெயர்ப்பாளர் (Translator) :
கூகுளை பல்மொழி அறிந்த மொழி பெயர்ப்பாளனாக பயன்படுத்த முடியும். உங்களுக்கு விருப்பமான மொழியில் உங்கள் தகவல்களை பகிர இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும், மொழி தெரியாத வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு நாட்டிற்கு நாம் செல்லும் போது இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் .
உதாரணமாக: hello in tamil
விளையாட்டாய் ஒரு சேவை :
நேற்றைய கிரிக்கெட் ஆட்டத்தின் முடிவினை நீங்கள் பார்க்கத் தவறி விட்டிருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
Who won yesterday's cricket match? என பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம் .
உதாரணமாக , இந்திய அணி கடைசியாக விளையாடிய போட்டியின் முடிவை தெரிந்து கொள்ள , Who won in last T20 match?
நேரம் காப்பாளர் (World Timer) :
நம்மிடம் இருக்கும் கடிகாரம் நமது ஊரின் நேரத்தை மட்டும் காட்டும் ஆனால் கூகுளின் மூலம் உலகின் எந்தவொரு நாட்டின் தற்போதைய நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம் .
உதாரணமாக, time அல்லது time in chennai, time in usa என பதிவிட்டு தெரிந்துகொள்ளலாம் .
நாட்காட்டியில் நிகழ்வுகளை திட்டமிட (Planner) :
உங்கள் நண்பர்களுடன் இந்த வார இறுதியில் திரைப்படத்திற்கு செல்வதாக இருந்தால், இதை இப்படியே ஆங்கிலத்தில் கூகுள் தேடலில் பதிவிட்டால் கூகுள் தானாகவே இந்த நிகழ்ச்சியினை உங்கள் நாட்காட்டியில் பதிவு செய்து உங்களை நினைவூட்டும்.
உதாரணமாக, create an event, movie with friends on Saturday 6 Pm
நினைவூட்டல் (Reminder) :
மறதி – இன்று எல்லோருடைய மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இது எல்லை மீறும் போது பல தொல்லைகளும் நம்மை மீறுகிறது .
நீங்கள் நேரம் தவறி காலை உணவை உட்கொள்பவராக இருப்பின், நீங்கள் இதுபோன்ற நினைவூட்டல்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
உதாரணமாக, remind me to eat breakfast at 8am
உங்களின் தேவைக்கேற்ப நினைவூட்டல்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
இந்த சேவையை பயன்படுத்த நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்திருக்க வேண்டும்.
புகைப்படத் தேடல் (Photo search) :
நீங்கள் இதற்கு முன்பு வெளியூர்களுக்கு சென்று எடுத்த புகைப்படத்தினை தேடி எடுக்க சிரமப்பட வேண்டாம், இதற்கு முன்பு எடுத்த படத்தினை கூகுளின் எதாவது ஒரு சேவையில் (google photos, google plus) பதிவேற்றி இருந்தால் மிக எளிதாக நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியும் .
உதாரணமாக: show me my pictures at Chennai
இது நீங்கள் சென்னையில் எடுத்த புகைப்படத்தினை உங்களுக்குக் காட்டும்.
படம் பார்க்க உதவும் நண்பன் :
உங்களுக்கு அருகில் உள்ள திரை அரங்கில் என்ன படம் திரையிடப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். உடனே கூகுளில் which movies playing nearby என பதிவிட்டால் உங்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் .
வெளிநாட்டு பணத்தின் மதிப்பை கணக்கிட (Currency calculator):
வெளிநாட்டு பணத்தின் மதிப்ப நமது நாட்டு பணத்துடன் ஒப்பிடுவதில் சிரமப் படுகிறீர்களா ? இதோ உங்கள் வினாவிற்கு விடயை நொடியில் பெற்றிடுங்கள்.
உதாரணமாக, 500 அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை கணக்கிட convert $500 to INR என பதிவிடவும் .
இது போன்ற பல பயனுள்ள சேவைகளை கூகுள் நமக்கு வழங்குகிறது.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
ஐடி பணியாளர்களின் வாழ்க்கை– உங்கள் எதிர்பார்ப்புகளும் நீங்கள் எதிர்கொள்வதும்!
மொபைல் போன் பயன்பாட்டிற்கு அடிமை ஆகிவிட்டீர்களா? அதிலிருந்து விடுபட சில டிப்ஸ்!