2022ல் கூகுள் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்ட சிறந்த ஆப்’கள் பட்டியல்!

By cyber simman
December 06, 2022, Updated on : Tue Dec 06 2022 08:31:06 GMT+0000
2022ல் கூகுள் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்ட சிறந்த ஆப்’கள் பட்டியல்!
2022ம் ஆண்டில் கூகுள் பிளேஸ்டோரில் பல்வேறு பிரிவுகளில் முன்னணியில் விளங்கிய செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மாணவர்கள் கற்றலுக்கு உதவும் 'குவெஸ்ட்' (Questt) செயலி 2022ம் ஆண்டின் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 'ஷாப்ஸி' (Shopsy) செயலி பயனாளிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான செயலிகள் பல்வேறு பிரிவுகளில் கூகுள் பிளேஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், பிளேஸ்டோரில் சிறந்து விளங்கும் செயலிகளை தேர்வு செய்து வெளியிடப்படுவது வழக்கம்.

playstore

2022ம் ஆண்டில் பிளேஸ்டோரில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய செயலிகளை கூகுள் அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:

குவெஸ்ட் (Questt)

கல்வி நுட்பச் செயலியான குவெஸ்ட் (Questt)- நேவிகேட்டர் பார் லேர்னிங், விளையாட்டுத் தன்மையோடு கற்றலை சாத்தியமாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில், வீட்டுப் பாடங்கள் செய்வதில் இந்த ஆப் உதவுகிறது. இதன் நேவிகேட்டர் அம்சம் மூலம் மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை அறியலாம். ஆசிரியர்களும் இந்த செயலியை பயன்படுத்தி கேள்வி வங்கிகளை உருவாக்கலாம்.

ஷாப்ஸி (Shopsy)

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் Shopsy பயனாளிகள் வாய்ப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் செயலியான இது விற்பனையாளர்களிடம் இருந்து கமிஷன் எதுவும் பெறுவதில்லை. சமூக ஊடகங்களில் மறுவிற்பனை செய்ய இந்த ஆப் உதவுகிறது. பேஷன், அழகுசாதன பொருட்கள் என பலவிதமான பொருட்களை பட்டியலிட்டு விற்பனை செய்யலாம்.

கயால் (Khyaal)

Khyaal நல்லெண்ண செயலி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகன்களுக்கான இந்த செயலி, பிரிபெய்டு கார்டு, தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை அளிக்கிறது.

பேபிஜி (BabyG)

குழந்தைகள் வளர்ச்சியை டிராக் செய்ய உதவும் பேபிஜி செயலி, மறைந்திருக்கும் பொக்கிஷமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் பல்வேறு மைல்கற்களை பெற்றோர்கள் அறியவும் பதிவு செய்யவும் இந்த செயலி உதவுகிறது.


Edited by Induja Raghunathan