இனி பிக்பாஸ்கெட் டெலிவரியும் வேகம், பெயரும் புதுசு - ‘சூப்பர் சேவர்’ என பெயர் மாற்றம்!
பிக்பாஸ்கெட்டின் மளிகை சாமான் டெலிவரி சேவையை சூப்பர்சேவர் என்று டாட்டா பிராண்ட் மாற்றம் செய்துள்ளது. வர்த்தக பிரிவு bbnow என்றே இருக்கும், அதிவிரைவு சேவையான ஒதுக்கப்பட்ட நேரத்தில் செய்யப்படும் டெலிவரி சேவைக்கான பிராண்ட் மட்டுமே சூப்பர் சேவர் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
டாடா நிறுவனத்தின் மளிகை சாமான் டெலிவரி ஸ்டார்ட்அப்பான 'பிக்பாஸ்கெட்' (
) தனது ஒதுக்கப்பட்ட (Slotted) டெலிவரி சேவையை மட்டும் ‘சூப்பர்சேவர்’ என்று மறுவடிவமைத்துள்ளது. இதன் மூலம், ஆர்டர் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்ய முடியும் என்று நிறுவனம் உத்திரவாதம் அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுப்பதோடு கூடுதலாக பொருட்களுக்கு 5% சேமிப்பும் இதில் வழங்கப்படுகிறது.வியாழக்கிழமையன்று டாடா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றுவிடலாம். முன்பை விட அதிக அளவிலான பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்களுடைய உடனடி மளிகை சாமான் டெலிவரியான bbnow வாடிக்கையாளர்களின் தேவையை சில நிமிடங்களில் தீர்த்து வைப்பதற்காக சிறப்பான டெலிவரி சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது. உங்களுக்கு ஏதேனும் மளிகைப் பொருட்கள் உடனடியாகத் தேவைப்பட்டாலோ அல்லது அதிக அளவிலான பொருட்களை ஆர்டர் செய்வதென்றாலோ பிக்பாஸ்கெட்டின் 'சூப்பர் சேவர்' நல்ல தேர்வாக இருக்கும் ஏனெனில் இதில் பொருட்கள் விரைவாக வாடிக்கையாளருக்கு கிடைப்பதோடு அதிக சேமிப்பையும் வழங்கும்," என்று பிக்பாஸ்கெட் செயல் இயக்குனரும் இணை நிறுவனருமான ஹரிமேனன் தெரிவித்துள்ளார்.
மளிகை சாமான்கள் டெலிவரியில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது பிக்பாஸ்கட். அத்தியாவசியப் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் திட்டத்துடன் 2021 நவம்பரில் பிக்பாஸ்கெட் விரைவு வர்த்தகத் துறையில் காலெடுத்து வைத்தது. டாடா குழுமத்தின் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட டாடா டிஜிட்டல் மளிகை பொருட்கள் டெலிவரி தளத்தில் 64% பங்குகளை தன்வசம் வைத்திருந்தது.
மளிகைப் பொருட்கள் டெலிவரி சேவையில் உள்ள ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ மற்றும் சோமாடாவின் பிளிங்கிட், அமேசானின் அன்றைய நாளே மற்றும் அடுத்த நாள் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு போட்டியாக பிக்பாஸ்கெட் விரைவு வர்த்தகத் தளத்தில் இருக்கிறது.
ஜெப்டோ, பிளிங்கிட் மற்றும் ஸ்விக்கி உள்ளிட்டவை 2021ல் குறிப்பிடும்படியான லாபத்தை பெற்றதன் விளைவாக விரிவாக்க திட்டங்களில் அவை கவனம் செலுத்தின. 2025ல் இந்த சந்தையின் அளவு 15 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புள்ளியியல் ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் கணித்துள்ளது.