Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பில் கேட்ஸ் இனி இரண்டாவது உலகப் பணக்காரர் கிடையாது...

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அமேசான் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெசோஸ் 124 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம் வகிக்கிறார்.

பில் கேட்ஸ் இனி இரண்டாவது உலகப் பணக்காரர் கிடையாது...

Wednesday July 24, 2019 , 2 min Read

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் ஏழு வருட வரலாற்றில் முதல் முறையாக மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறவில்லை.

பில் கேட்ஸ் 107 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.வி.எம்.எச் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் 108 பில்லியன் டாலர் மதிப்புடன் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமேசான் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெசோஸ் 124 பில்லியன் டாலர் மதிப்புடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2018-ம் ஆண்டு ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் பட்டியலில் பெசோஸ் மதிப்பு 151 பில்லியன் டாலரை எட்டியது.

1

பெர்னார்ட் அர்னால்ட் 1984-ம் ஆண்டு ஆடம்பர பொருட்கள் சந்தையில் நுழைந்தார். LVMH நிறுவனத்தின் பாதியளவு பங்குகளை 70 வயதான இந்த பிரான்ஸ் முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபர் வைத்துள்ளார். 2018-ம் ஆண்டின் கிரிஸ்டியன் டியோரின் நிதி வெளியீட்டின்படி இந்நிறுவனத்தின் வருவாய் 2018-ம் ஆண்டில் 46.8 பில்லியன் யூரோவாக இருந்தது.


இந்நிறுவனம் லூயிஸ் வியூட்டன் தோல் பொருட்கள், TAG Heuer வாட்ச், Dom Perignon சாம்பெயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. பெர்னார்ட் அர்னால்ட் Hermes நிறுவனத்தின் 8.6 சதவீத பங்குகளையும் Carrefour நிறுவனத்தின் 1.9 சதவீத பங்குகளையும் வைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் குறிப்பிடுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி 51.3 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தப் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் இவர் அதிக மதிப்புடையவர் ஆவார்.

2016-ம் ஆண்டு ’ப்ரேக்த்ரூ எனர்ஜி வென்சர்ஸ்’ (BEV) அமைப்பதற்காக இவர் ஜெஃப் பெசோஸ், ஜாக் மா, பில் கேட்ஸ் மற்றும் சிலருடன் இணைந்தார். இது க்ளீன் எனர்ஜியில் புதுமைகள் படைத்து பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்காக ஒரு பில்லியன் டாலர் வரையிலும் நிதி வழங்குவதற்கான முயற்சியாகும்.


ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ வாரன் பபெட் 81.9 பில்லியன் டாலர் மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார். Geico, Clayton Homes, Dairy Queen ஆகியவை நெப்ராஸ்காவைச் சேர்ந்த இந்நிறுவனத்திற்குச் சொந்தமானவை. அத்துடன் இந்நிறுவனத்திற்கு கொக்கோகோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பங்குகள் உள்ளன.


இந்தப் பட்டியலில் அடுத்தபடியாக ஃபேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் 78.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இடம்பெற்றுள்ளார். ஃபேஸ்புக்கில் உள்ள 13 சதவீத பங்குகள் வாயிலாகவே அவரது பெரும்பாலான வருவாய் இருப்பதாக 2019 ஏப்ரல் மாத பங்குச் சந்தை நிலவரம் தெரிவிக்கிறது.


உலகின் மிகப்பெரிய ஆடை சில்லறை வர்த்தக நிறுவனமான இண்டிடெக்ஸ் (Inditex) நிறுவனத்தில் 59 சதவீத பங்கிற்கு உரிமையாளரான அமான்சியோ ஆர்டெகா 66.2 பில்லியன் டாலர் மதிப்புடன் பட்டியலின் ஆறாவதாக இடம்பெற்றுள்ளார்.