Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

தடுப்பூசி மருந்துகள், அவசரநிலை பொருட்களை வழங்கும் ட்ரோன்கள்: Blue Dart-ன் புதிய முயற்சி!

இறுதி நிலையில் தடுப்பூசி வழங்கலில் காணப்படும் சவால்களை சமாளிக்க நுண்ணறிவுமிக்க ஸ்மார்ட் ட்ரோன் டெலிவரி தீர்வுக்காக புளூ டார்ட் மெட்-எக்ஸ்பிரஸ் கன்சார்டியத்தை தொடங்கியிருக்கிறது

தடுப்பூசி மருந்துகள், அவசரநிலை பொருட்களை வழங்கும் ட்ரோன்கள்: Blue Dart-ன் புதிய முயற்சி!

Saturday May 15, 2021 , 3 min Read

இந்தியாவின் முன்னணி எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குநரும், டாய்ட்சு போஸ்ட் டிஹெச்எல் குரூப் (DPDHL)-ன் ஒரு அங்கமுமான புளூ டார்ட், இந்தியாவில் தொலைதூர பகுதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் வழியாக தடுப்பூசி மருந்துகளையும், அவசரநிலை பொருட்களையும் வழங்குவதற்காக, புளூ டார்ட் மெட்-எக்ஸ்பிரஸ் கன்சார்டியத்தை நிறுவியிருக்கிறது.


தெலங்கானா மாநில அரசு, வேர்ல்டு எக்னாமிக் ஃபோரம், நிதி ஆயோக் மற்றும் ஹெல்த்னெட் குளோபல் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்படும் ‘மெடிசின் ஃபிரம் தி ஸ்கை’ என்பதன் ஒரு அங்கமாக புளூ டார்ட் மெட்-எக்ஸ்பிரஸ் கன்சார்டியம் இருக்கும்.

blue dart

தெலங்கானா மாநிலத்தில் பரிசோதனை அடிப்படையில் ட்ரோன் விமானங்களை வானில் இயக்குவதற்கு அவசியமான விதிவிலக்குகள் மற்றும் உரிமைகளை இச்செயல்திட்டத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) வழங்கியிருக்கிறது.

வினியோக மையத்திலிருந்து குறிப்பிட்ட அமைவிடத்திற்கு செல்லவும் மற்றும் திரும்ப வரவும் உடல்நல பராமரிப்பு பொருட்களை (மருந்துகள், கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள், இரத்த யூனிட்டுகள், நோயறிதல் பரிசோதனை மாதிரிகள் மற்றும் உயிர்காப்பதற்கான பிற சாதனங்களை) பாதுகாப்பான, துல்லியமான மற்றும் நம்பகமான முறையில் பிக்-அப் மற்றும் டெலிவரி செய்வதில் ஒரு மாற்று லாஜிஸ்டிக்ஸ் வழிமுறையாக இதை மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்.

வழங்கல் சங்கிலி தொடர் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது மீது பொறுப்புறுதி கொண்டிருக்கும் புளூ டார்ட், இப்பெருந்தொற்றை வெல்வதற்காக கடுமையாக போரிட்டு வருகிறது.


தெலங்கானாவிற்குள் தற்போதுள்ள சுகாதார பராமரிப்பு லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதற்காக ஒரு இம்மெர்சிவ் டெலிவரி மாதிரியை புளூ டார்ட் மெட்-எக்ஸ்பிரஸ் ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தும். மருத்துவ கிடங்குகள் மற்றும் இரத்த வங்கிகளிலிருந்து ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC), சமுதாய சுகாதார மையங்கள் (CHC), இரத்த சேமிப்பு பிரிவுகள் ஆகியவற்றிற்கும் மற்றும் PHC/CHC-களிலிருந்து மத்திய நோயறிதல் பரிசோதனையகங்களுக்கும் டெலிவரிகள் மேற்கொள்ளப்படுவதை இந்த மாதிரி ஏதுவாக்கும்.


இப்பெருந்தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டிற்கு உதவ இயல்வது குறித்து பெருமைப்படும் புளூ டார்ட்-ன் நிர்வாக இயக்குநர் பால்ஃபர் மேனுவல்,

“கோவிட்-19 பரவத் தொடங்கி ஒரு ஆண்டு முடிந்துவிட்டது; எனினும், நிகழ்நேரத்திலேயே தீர்வுகள் அவசியப்படுகிற புதிய சவால்கள் கோவிட்-19க்கு எதிரான நமது யுத்தத்தில் தொடர்ந்து தோன்றிவருகின்றன. லாஜிஸ்டிக்ஸ்-ன் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் வழங்கல் சங்கிலித்தொடர் கட்டமைப்பின் அவசியத்தை இப்பெருந்தொற்று ஒவ்வொருவருக்கும் கற்பித்திருக்கிறது.

ஒரு பெரு நிறுவனமாக எதிர்கால தொழில்நுட்பத்தை புளூ டார்ட் எப்போதுமே முன்கூட்டியே செயல்படுத்தி வந்திருக்கிறது. இத்திறன் தான், இப்பெருந்தொற்றை எதிர்த்து சமாளிப்பதற்கும் மற்றும் வளர்ச்சியை நோக்கி முன்னேறவும் எங்களுக்கு உதவியிருக்கிறது. நாடெங்கிலும் 35,000க்கும் அதிகமான இடங்களுக்கு எங்களது சேவை சென்றடைகின்ற நிலையில், தடுப்பூசி மருந்துகளை இன்னும் தொலைதூர பகுதிகளுக்கும் டெலிவரி செய்ய வேண்டிய அவசியத்தை நடப்பு சூழல் உருவாக்கியிருக்கிறது,” என்று கூறினார்.
1

புளூ டார்ட்-ன் CMO மற்றும் பிசினஸ் டெவலப்மென்ட் துறையின் தலைவர் கேத்தன் குல்கர்னி, தடுப்பூசி மருந்துகளை டெலிவரி செய்வதற்கு ஆளில்லா ட்ரோன் விமான சேவைகளை பரிசோதனை முயற்சியாக புளூ டார்ட் பயன்படுத்துவது குறித்து பேசுகையில்,

“பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் குறைவான செலவில் ட்ரோன் டெலிவரி விமானச் சேவைகளை ஏதுவாக்குவதே இந்த கன்சார்டியத்தின் நோக்கமாகும். திறன்மிக்க அமைப்பு முறைகளை இது கொண்டிருப்பதால், தற்போதுள்ள லாஜிஸ்டிக்ஸ் செலவை குறைக்க இது உதவும்; அத்துடன், உடல்நல பராமரிப்பில் லாஜிஸ்டிக்ஸ் சேவையை விரைவானதாகவும் மற்றும் திறன்மிக்கதாகவும் இது ஆக்கும்.

ட்ரோன் விமானச் சேவை செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு உரிய அனுமதிகளும், உரிமைகளும் வழங்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.


உண்மையிலேயே இத்தருணத்தில் இது அத்தியாவசியமான தேவையாகும். இந்த மானுடமானது மிக மோசமான பாதிப்பை இக்காலகட்டத்தில் எதிர்கொண்டு வருகிறது. தான் செயல்படுகிற பகுதிகளில் சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை திரும்ப வழங்குவது மீது உறுதிபூண்டிருக்கிறது. எப்போதுமே முன்னோடியாக செயலாற்ற தயார் நிலையில் புளூ டார்ட் இருக்கிறது,” என்று கூறினார். 


கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் தேசத்திற்கான தனது ஆதரவை புளூ டார்ட் தொடர்ந்து நிலையாக வழங்கி வருகிறது. தேசத்தின் வர்த்தக ஏதுவாக்குனராக, இந்நாட்டில் வாழ்க்கை சீர்குலையாமல் இருப்பதை புளூ டார்ட் உறுதிசெய்திருக்கிறது. நாடெங்கிலும் இன்றியமையா பொருட்கள் உரிய நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்வதன் மூலம் இதை புளூ டார்ட் மேற்கொள்கிறது.