உலகின் இளம்வயது பெண் பில்லியனர்: Bumble-ன் மதிப்பு உயர்ந்து 11ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனார் விட்னி!

By malaiarasu ece|16th Feb 2021
உலகெங்கிலும் 40 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பிளாக்ஸ்டோன் குரூப் நிறுவனத்தின் ஆதரவுடன் பம்பிள் டேட்டிங் செயலியின் பங்குகள் கடந்த வியாழக்கிழமை 76% க்கும் மேலாக உயர்ந்தன. 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. நிறுவனத்தின் பங்குகள் நாஸ்டாக்கில் $76 அமெரிக்க டாலருடன் தொடங்கின. அதன் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) ஒரு பங்குக்கு 43 டாலர் என விற்கப்பட்டது.


பம்பிள் மற்றும் பாடூ (Bumble and Badoo) இரு செயலிகளும் டெக்ஸாஸில் உள்ள ஆக்ஸ்டின் நகரத்தைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறது. உலகெங்கிலும் 40 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

Whitney

(Bumble) தலைமை நிர்வாகி விட்னி வோல்ஃப் ஹெர்ட்

நேர்காணல் ஒன்றில்பேசிய பம்பிளின் (Bumble) தலைமை நிர்வாகி விட்னி வோல்ஃப் ஹெர்ட்,

”உலகளாவிய பெருந்தொற்றானது, மக்கள் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளவும், மொபைல் போன் வழியாக புதிய மனிதர்களை சந்திக்கவும் வழிவகுத்துள்ளது,” என்றார்.
அவர்கள் முதலில் டிஜிட்டல் வழியாக புதிய உறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். பின்னர் இந்த டேட்டிங் செயலி உதவியுடன் உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது ஒரு தனித்துவமான மாற்றமாகும். கோவிட் 19 பெருந்தொற்று காலத்திற்கு பிறகும் இந்த போக்கு தொடரும் என நம்புகிறேன்,” என்று வோல்ப் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த பம்பிள் டேட்டிங் ஆப், மற்ற டேட்டிங் செயலிகளைக் காட்டிலும் தனித்துவமானது. காரணம், இதில், ‘வுமன் ஃபர்ஸ்ட்’ என்ற அதன் புதிய அணுகுமுறையால் மற்ற செயலிகளைக் காட்டிலும் இது தனித்துவமாக விளங்குகிறது.

ப்ரீமியம் சந்தாதாரர்களிடமிருந்து செயலிக்கான வருவாய் கிடைக்கிறது. அதன்படி பார்க்கும்போது, கடந்த 2020ம் ஆண்டு முதல் 9 மாதங்களில் இந்த செயலி 376.6 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. பம்பிள் செயலியில் 1.1 மில்லியன் பணம் செலுத்தும் பயனர்கள் உள்ளனர்.

பம்பிள் செயலியின் தலைமை நிர்வாகியான வோல்ஃப் ஹெர்ட் 31 வயதேயான இளம் பெண். பொது நிறுவனத்தை வழிநடத்தும் இளம் பெண் என்ற பெருமைக்கு உரியவர். முன்னதாக அவர், பம்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டிண்டரில் இணை நிறுவனராக இருந்தார். டிண்டரில் நிறுவனர் தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறி அதிலிருந்து வெளியேறினார். குற்றச்சாட்டுகளை மறுத்த டிண்டர், சர்ச்சைக்கு தீர்வு காண சுமார் 1 மில்லியன் டாலரை செலுத்தியது.

Bumble
"இப்போதே நாங்கள் டேட்டிங் வாய்ப்பை உலகளவில் எடுத்துச்செல்வதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். நீங்கள் தேடும் எவரையும் அணுகுவதற்கான தளமாக இது இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்," என்று வோல்ஃப் ஹெர்ட் கூறியுள்ளார்.

Bumble எனும் டேட்டிங் ஆப்-ன் நிறுவனரான விட்னே ஹெர்ட், 31 வயதில் 1.5 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாகியுள்ளார்.


சமீபத்தில் பங்குச் சந்தைக்குள் நுழைந்த bumble ஷேர் மதிப்பு எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது. அதனால் பம்பிளின் மதிப்பு 14 பில்லியன் டாலராக உயர்ந்தது. அந்த மதிப்பின்படி பார்த்தால் விட்னியின் சொத்து மதிப்பு இப்போது 1.5 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 11,000 கோடி.


31 வயதாகும் விட்னே, உலக அளவில் இவ்வளவு பெரிய நிறுவனத்தைத் தலைமையேற்று நடத்தும் வயது குறைந்த பெண் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.