நண்பன் பில்கேட்ஸ் உடன் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சந்திப்பு; அப்படி என்ன பேசினாங்க?
தொழிலதிபரும், மஹிந்த்ரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்த்ராவை (Anand Mahindra) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் (Bill gates) நேரில் சந்தித்துள்ளார்.
தொழிலதிபரும், மஹிந்த்ரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்த்ராவை (Anand Mahindra) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் (Bill gates) நேரில் சந்தித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை சந்தித்து பேசியுள்ளார். இரு பெரும் தொழிலபதிபர்களும் எதைப்பற்றி பேசியிருப்பார்கள் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் எழுந்த நிலையில், ஆனந்த மஹிந்திரா சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நடத்தி வரும் , “கேட்ஸ் அறக்கட்டளை” இந்தியாவில், நிதி, சுகாதாரத் துறை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல தளங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ், நேற்று மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அதன் ஆளுநர் சக்தி காந்ததாஸை சந்தித்து பேசினார். அப்போது நிதி, டிஜிட்டல் பரிவர்த்தனை, கடன் வழங்கும் முறை உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவையும் பில்கேட்ஸ் நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, வியாபார ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும், சமூக விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
"மீண்டும் பில்கேட்ஸைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. மேலும், புத்துணர்ச்சியூட்டும் வகையில், எங்களளுடைய முழு உரையாடலும் தகவல் தொழில்நுட்பம் அல்லது எந்தவொரு வணிகத்தைப் பற்றியது அல்ல, ஆனால் சமூகத் தாக்கத்தைப் பெருக்க நாம் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது பற்றி பேசினோன். (எனக்கு இதில் ஓரளவு லாபம் கிடைத்தது; எனக்கு அவரது புத்தகமும் ஆட்டோகிராப் உடன் இலவசமாக கிடைத்தது,” என பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்த்ராவுக்கு பில் கேட்ஸ் பரிசாக அளித்துள்ள அவரது புத்தகத்தில்,
“ஆனந்துக்கு, எனது வகுப்பு தோழனுக்கு வாழ்த்துகள்...” என்று எழுதி ஆட்டோகிராப் போட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் உலகின் முன்னணி தொழிலபதிர்களான இருவரும் ஒரு காலத்தில் வகுப்பு தோழர்களாக இருந்துள்ளனர். ஆம், 1970களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பில் கேட்ஸும், ஆனந்த் மகிந்த்ராவும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். ஆனால், பில்கேட்ஸ் இரண்டு ஆண்டுகளில் தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். ஆனந்த் மஹிந்திரா 17977ம் ஆண்டு பட்டம் பெற்றார். எனவே தொழிலதிபர்கள் என்பதைக் கடந்து, வகுப்பு தோழர்கள் என்ற முறையில் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.