கடனில் சிக்கியுள்ள Byju's - 500+ பணியிழப்புகள் ஏற்படும் ஆபத்து!
பைஜுஸ் நிறுவனம் கடன் தொல்லையில் சிக்கியிருப்பதால் மேலும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்று அந்நிறுவனம் தொடர்புடைய வட்டாரங்கள் யுவர் ஸ்டோரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.
பைஜுஸ் நிறுவனம் கடன் தொல்லையில் சிக்கியிருப்பதால் மேலும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்று அந்நிறுவனம் தொடர்புடைய வட்டாரங்கள் யுவர் ஸ்டோரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.
பைஜுஸின் பணியாளர் குறைப்பு நடவடிக்கையின் புதிய சுற்றில் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விற்பனையில் உள்ளவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்களும் உள்ளனர்.
பைஜுஸ் கடன் தொல்லையில் சிக்கியிருப்பதாலும் நிதிப்பற்றாக்குறையாலும் தத்தளித்து வருவதோடு அதன் முதலீட்டாளர்களுடனேயே தகராறும் இருந்து வருகிறது என்று சில வட்டாரங்கள் யுவர் ஸ்டோரி ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளது.

பைஜுஸ் டியூஷன் சென்டர் ஊழியர்கள் அதாவது, விற்பனைப் பிரிவைச் சேர்ந்தவர்கள், சில ஆசிரியர்கள் உட்பட ஒருவிதமான நிரந்தரமயமாக்கத்திலிருந்தாலும் அவர்களின் பயன்பாடு ஆகக்குறைந்தபட்சமாக குறுகிப்போய்விட்டதாக இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கற்பித்தலுக்கு மாறுவதற்கான விருப்பத் தெரிவு வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள நேரம் கல்வி மையங்களில் கற்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பைஜுஸ் நிறுவனம் என்ன கூறுகிறது என்னவெனில், இந்த பணி நீக்கமெல்லாம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு அங்கம் என்கிறது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் படி, சுமார் 5000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
"அக்டோபர் 2023 இல் அறிவிக்கப்பட்ட வணிக மறுசீரமைப்புப் பயிற்சியின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம், செயல்பாட்டுக் கட்டமைப்புகளை எளிமைப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் சிறந்த பணப்புழக்க மேலாண்மைக்காகவும் தான் இத்தகைய மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது,” என்று பைஜுவின்இன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் அந்த அறிக்கையில்,
“நான்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்குகள் காரணமாக அசாதாரணமான சூழலை எதிர்கொண்டு வருகிறோம். இதனால் ஒவ்வொரு பணியாளரும் பொருளாதாரச் சூழ்நிலையும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலை இப்படித்தான் இருக்கிறது,” என்று கூறியுள்ளது பைஜுஸ்.
பெங்களூரை தளமாகக் கொண்ட நிறுவனம், அதன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பல சுற்றுகளில் பணிநீக்கங்களை நடத்தியது. மேலும், பணியாளர்களும் மெல்ல மெல்ல வேலையை விட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

பைஜுவின் தற்போதைய பணியாளர் எண்ணிக்கை 12,000 முதல் 13,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 10,000-க்கும் கீழ் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஊழியர்களின் சம்பளத்தை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது பைஜுஸ். ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று நம்புகிறது. மார்ச் மாதத்தில், நிறுவனம் பிப்ரவரி மாத சம்பளத்தையும் தாமதப்படுத்தி, அந்த மாதத்தின் பிற்பகுதியில் அவர்களுக்கு ஓரளவு செலுத்தியது. மீதமுள்ள சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களுக்கு இறுதி செட்டில்மெண்ட்டையும் நிலுவையில் வைத்துள்ளது. ப்ரோசஸ், ஜெனரல் அட்லாண்டிக், சான் ஜுக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மற்றும் பீக் XV உள்ளிட்ட முக்கிய முதலீட்டாளர்களின் குழுவுடன் கருத்து வேறுபாடுகளால் பைஜு கடும் வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) மேல்முறையீடு செய்வதன் மூலம் ஜனவரியில் தொடங்கப்பட்ட $200 மில்லியன் உரிமைகள் வெளியீட்டை ரத்து செய்ய முயன்றதும் பைஜுவிற்கு பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயம் பைஜு முதலீட்டாளர்கள் வைத்த முறைகேடுகள் குறித்த வழக்கில் உரிமைகள் வெளியீட்டின் மூலம் பைஜுவுக்கு வந்த நிதியைத் தனிக் கணக்காக வைத்திருக்க உத்தரவிட்டு அதை பயன்படுத்தவும் தடை போட்டது. ஆகவே நாளை நடைபெறும் விசாரணையில் பைஜு அந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பானால்தான் ஏதாவது தீர்வு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.