Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஏழு மாநிலங்களில் விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ‘ரகுநாதன் நாராயணன்’

கேடலிஸ்ட் குழுமத்தின் இணை நிறுவனர் ரகுநாதன் நாராயணன், விருத்தியின் மூன்று அடுக்கு முறை மற்றும் உற்பத்தியாளர் சார்ந்த டிஜிட்டல் மேடை வாயிலாக இந்தியாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துவது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

ஏழு மாநிலங்களில் விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ‘ரகுநாதன் நாராயணன்’

Tuesday January 30, 2024 , 4 min Read

பெங்களூருவைச் சேர்ந்த கேடலிஸ்ட் குழுமத்தின் இணை நிறுவனர் ரகுநாதன் நாராயணன் ஏழு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் இவர். விவசாயத்தை ஒரு வாழ்வாதாரமாக மட்டும் அல்லாமல் ஒரு நிறுவனமாகவும் பார்க்கும் மூன்று அடுக்கு முறை மூலம் இதை செய்து வருகிறார்.

இந்த முறை இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவசாயிகள், நீடித்த விவசாய செயல்முறை மூலம் பலனை அறுவடை செய்து வருகின்றனர். மண் வளம், பல்லுயிரியல், தண்ணீர் நிர்வாகம், வருமான உருவாக்கம் ஆகியவை மூலம் வளம் உருவாக்குவதை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நாராயணனை பொருத்தவரை அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பரிவு மற்றும் சமூகத்திற்கு திரும்பி செலுத்தும் எண்ணம் சிறுவயதில் அவரது பாட்டி லட்சுமி பாட்டியிடம் இருந்து கற்ற பாடங்கள் மூலம் விதைக்கப்பட்டது.

Raghunathan Narayanan

தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் மத்திய வர்க குடும்பத்தில் பிறந்த நாராயணன், சிறுவயதில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தனது பாட்டி தங்குவதற்கு இடம் அளித்து, உணவு அளித்ததை பார்த்திருக்கிறார். இது பற்றி கேட்டபோது அவரது பாட்டி,

“நம் கை விரல்களை பார், அவை ஒரே மாதிரி ஒரே அளவில் இல்லை. அனைத்து விரல்களும் தேவை, அவை ஒன்றாக செயல்பட வேண்டும். எல்லோரும் தனித்துவமானவர்கள், மாறுபட்டவர்கள், நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் பலவற்றை செய்யலாம்,” என்று பதில் அளித்ததாக நாராயணன் சோஷியல் ஸ்டோரியிடம் கூறுகிறார்.

பாட்டியின் இந்த கருத்தை அவர் தனது சிறுவயது முழுவதும் ஏற்றுக்கொண்டு, எப்போதும், கொடுப்பதுடன் மரியாதையும் இருக்க வேண்டும் என நம்பியுள்ளார்.

பள்ளி படிப்பு முடித்ததும், சகோதர்கள் பாதையில் அவர் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். கோவை வேளாண் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இந்த பாடத்தின் கள பிரிவு அவருக்கு களப்பணி பற்றியும், அதில் பொறியியல் பங்கையும் உணர்த்தியது.

பொறியியல் படிப்பு முடித்ததும் குஜராத்தின் ஆனந்தில் உள்ள இந்திய கிராமப்புற நிர்வாக கழக்கத்தில் (ஐஆர்.எம்.ஏ) இணைந்தார். இங்கு டாக்டர். வர்கீஸ் குரியனின் தீர்வுகள் சார்ந்த அணுகுமுறையையும், மக்களுடனான தொழில்முறை கூட்டு செயல்பாட்டையும் நேரில் கண்டார்.

“மிகவும் சிக்கலானது இங்கு எளிமையாக இருந்தது,” என்கிறார் நாராயணன்.

அதன் பிறகு, 1994ல் தனது சக மாணவர் சிவகுமாருடன் இணைந்து கேடலிஸ்ட் மேனஜ்மெண்ட் சர்வீசசை துவக்கிய போது, எல்லாவற்றிலும் மனிதர்கள மையமாக வைப்பதை பின்பற்றினார். துவக்கத்தில், ஆலோசனை முறையை பின்பற்றினாலும், அதிலிருந்து அமைப்பு மாற்றம் முறைக்கு மாறி கேடலிஸ்ட் குழுமத்தை உருவாக்கினர்.

Goat rearing unit visit at Vadakjuppatti village, Vadakadu panchayat. Pudukkottai district  Read more at: https://yourstory.com/socialstory/2024/01/changing-lives-farmers-seven-states-three-fold-model-vrutti

இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒன்று, விருத்தி (Vrutti)- இந்த அமைப்பு தனது மூன்று அடுக்கு முறை மூலம் சிறு விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இன்னொன்று ஸ்வஸ்தி – தரமான மருத்துவ வசதி அணுகலை சாத்தியமாக்கி விளிம்பு நிலை சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கம் கொண்டது.

மூன்று அடுக்கு முறை பற்றி நாராயணம் இப்படி விவரிக்கிறார்.  

“முதல் அடுக்கு விவசாயிகளின் மனநிலையில் மாற்றம்- சேவையாளர் என்பதில் இருந்து ஒரு தொழில்முனைவோராக நினைத்து, தனது நிலத்தை ஒரு நிறுவனமாக கருதுவது. இது இரண்டாவது இலக்காகிறது. மூன்றாவதாக அவர்களுக்கு பலன் அளிக்கக் கூடிய சேவைகளை உருவாக்குவது.”

வளர்ச்சி சார்ந்த முறை

அடிப்படையில் இந்த மூன்று அடுக்கு முறை விவசாயிகளை திரட்டி ஒரு விவசாயிகள் தொகுப்பிற்குள் கொண்டு வருகிறது. இந்த தொகுப்பு பின்னர் விவசாயிகள் உற்பத்தி நிறுவனமாகிறது.

160 உறுப்பினர்கள் கொண்ட விருத்தி, இரண்டாம் நிலையில் உள்ளது. களத்தில் உள்ள விவசாயிகளுடன் ஈடுபட்டு, உள்ளூர் வேளாண்- சூழலியல் நிலையை கவனித்து, சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து, மூன்று முக்கிய பயிர்களை தேர்வு செய்கிறது. புதுக்கோட்டையில் நிலக்கடலை, உளுந்து மற்றும் பலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கால்நடை, கோழி வளர்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகளையும் பரிசீலிக்கிறது. மூன்றாவது நிலையில், ஐந்து அல்லது ஆறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, வாழ்வாதார மேம்பாடு திட்டத்திற்காக விவசாயிகளுடன் தொடர்பு கொள்ள செய்யப்படுகின்றன.

இந்த முறையில், முதல் நிலையில், விவசாயிகள், செலவுகளை குறைத்து தங்கள் நிகர வருமானத்தை அதிகரிக்க முடியும். மேலும், உயிரி உரங்களை பயன்படுத்தி, சிறந்த செயல்முறைகளை பின்பற்றி உற்பத்தியை பெருக்க முடியும். முறையான கடன் வசதி மற்றும் அரசு உதவி திட்டங்களையும் நாடலாம். இரண்டாம் கட்டத்தில் விரிவாக்கம் மூலம் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கப்படுகிறது. சந்தை அணுகல் மற்றும் மதிப்பு கூட்டல் மூலமும் விலையை மேம்படுத்த முடிகிறது.

“மூன்று அடுக்கு முறை என கூறும் போது சிறிய விவசாயிகள் லாபத்தை மூன்று நிலையில் உயர்த்துகிறோம். முதல் நிலை செல்வம், இரண்டாம் நிலை உறுதி மற்றும் மூன்றாம் நிலை பொறுப்பு,” என்கிறார் நாராயணன்.

விருத்தி திட்டம் மத்தியபிரதேசத்தில் சோதனை வடிவில் துவங்கி பின்னர் சத்திஷ்கர் மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் சூழலியல் மண்டலம், சந்தை முதிர்வு, சமூக கலாச்சாரம், அரசியல் சூழல் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.

விருத்திக்கான ஆரம்ப ஆதரவு சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பிடம் இருந்து வந்தது. நபார்டு கிராமப்பிற புதுமையாக்க திட்டத்தின் வாயிலாக ரூ.10 லட்சம் அளித்தது. இந்த திட்டம் மூலம் ஏழு மாநிலங்களில் 1,40,000 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே இருந்த வர்த்தக உறவுகளும் சமூக நோக்கில் அமைந்திருந்ததால் துவக்கத்தில் எப்.பி.ஓக்கள் சந்தேகம் கொண்டதாக நாராயணன் தெரிவிக்கிறார்.

“இரண்டு தடைகள் உள்ளன- உறவுகளை உடைப்பது. இரண்டாவது சவால் உறுப்பினர்கள் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாகும். விருத்தியுடன் இணைந்துள்ள ஒவ்வொரு விவசாய உற்பத்தி அமைப்பும், கட்டணம் செலுத்த வேண்டும். காலப்போக்கில் இந்த தடைகளை வெல்ல முடிந்தது,” என்கிறார் நாராயணன்.

வேளாண் சமூகங்களுக்கான வளர்ச்சியை சாத்தியமாக்குபவராக சூழலில் நிலைப்பெற்ற பின் நாராயணன், உற்பத்தியாளர் சார்ந்த டிஜிட்டல் மேடையான உள்ளடக்கிய தொழில்முனைவு மேடையை (PIE) உருவாக்கினார். இது ஓபன் சோர்ஸ் உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. பங்குதார்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது.

இண்டஸ்ட்ரீ, சோசியல் வென்சர் பாட்னர்சுடன் இணைந்து, இந்த மேடை விவசாயிகளையும், பிக்பாஸ்கெட் போன்ற பெரிய வாடிக்கையாளர்களையும், சேவைகள் அளிப்பவர்களையும் (கடன் வழங்குபவர்கள், பயிற்சி அளிப்பவர்கள், சந்தை தகவல்கள், தொடர்பு அளிப்பவர்கள்) இணைக்கிறது. இது விவசாயிகள் குழு, பல வகையான சேவைகளை வெளிப்படையான முறையில் அணுக வழி செய்கிறது.

“இந்த மேடையில் விருத்தியின் 18,000 விவசாயிகள் செயல்படுகின்றனர். மற்றவர்களும் இதில் இணையலாம். ஒவ்வொரு அமைப்புடனும், வளங்கள் அளிக்கும் அமைப்புகளுடன், கூட்டு அமைப்புகள் மற்றும் விருத்து போன்ற அமைப்புகளுடன் இதை இணைக்க உள்ளோம்,” என்கிறார்.

ஒரு கிளிக்கில் விவசாயிகள், பண்னை ஆலோசனை, பண்ணை திட்டம், வாய்ப்புகள், திறன்கள் போன்றவற்றை அறிவது சாத்தியம் ஆக வேண்டும் என்கிறார்.

ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷணன் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan