'கார், ராக்கெட்டை விட ChatGpt ஆபத்தானவை’ - TruthGpt தொடங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!
உலக கோடீஸ்வரர் மற்றும் ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவால் (AI) மனிதகுலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து மீண்டும் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்,
மேலும், ஒரு பிரபலமான சாட்போட்-ஐ எதிர்க்க அவர் தனது சொந்த AI-ஐ உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை இரவு ஃபாக்ஸ் நியூஸ்-இல் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், பிரபல AI சாட்போட் ChatGPT க்கு மாற்றாக தான் ஒரு சாட்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார், அவர்
"TruthGPT என்ற சாட்பாட்டை நான் உருவாக்குவேன். இது பிரபஞ்சத்தின் இயல்பின் உண்மையைத் தேடும் AI ஆக இருக்கும். மனிதகுலத்தைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒரு AI-ஐ உருவாக்கினால் அது அழிப்பதற்கான வாய்ப்பும் குறைவு என்பதே இதன் கருத்து,” என்று மஸ்க் கூறினார்.
ChatGPT அரசியல் ரீதியாக சரியாக இருக்க பயிற்சியளிக்கப்படுகிறது, என்று தான் கவலைப்படுவதாகவும் மஸ்க் கூறினார்.
கார்ல்சனுடனான இரண்டு பகுதி நேர்காணலின் முதல் பகுதியில், மஸ்க் செயற்கை நுண்ணறிவிற்கு ஒழுங்குமுறை தேவையென வாதிட்டார்.
“நான் AI-க்கு மிகப்பெரிய ரசிகன். கார்கள், ராக்கெட்டுகளை விட AI ’மிக ஆபத்தானது’. இது மனிதகுலத்தையே அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது,” என்றார் மஸ்க்.
தனியாக, மஸ்க் X.AI கார்ப் என்ற புதிய வணிகத்தை தொடங்கியுள்ளார் என நெவாடா பிசினஸ் ஃபைலிங் தெரிவித்துள்ளது. நெவாடா மாநிலச் செயலர் அலுவலகத்தின் இணையதளம், இந்த வணிகமானது மார்ச் 9ஆம் தேதி தொடங்கப்பட்டு, மஸ்க்கை அதன் இயக்குநராகவும், அவரது நீண்டகால ஆலோசகர் ஜாரெட் பிர்ச்சாலை செயலாளராகவும் பட்டியலிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எலான் மஸ்க், பல ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு பற்றி வலுவான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இந்தத் துறையில், அவருக்கு சரியான புரிதல் இல்லை என்ற மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்களின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
மஸ்க், ChatGPTக்குப் பின்னால் உள்ள தொடக்க நிறுவனமான OpenAI இன் ஆரம்பகால முதலீட்டாளராக இருந்தார். மேலும், 2015ல் இலாப நோக்கற்ற AI ஆராய்ச்சி ஆய்வகமாக நிறுவப்பட்டவுடன் அதன் குழுவின் இணைத் தலைவராக இருந்தார். ஆனால், மஸ்க் சில ஆண்டுகள் மட்டுமே அங்கு நீடித்தார்.
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அக்குழுவில் இருந்து ராஜினாமா செய்தார், அந்த சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் அவரது டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி ட்ரைவிங் பிரிவை தொடக்க இணைந்தது.
”டெஸ்லா தொடர்ந்து AI-இல் அதிக கவனம் செலுத்துவதால், இது எலானுக்கு ஏற்படக்கூடிய எதிர்கால மோதலை நீக்கும்" என்று OpenAI பிப்ரவரி 2018 வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
நான் பெயரையும் கருத்தையும் கொண்டு வந்தேன், என்று கார்ல்சனிடம் கூறிய மஸ்க், OpenAi இப்போது மைக்ரோசாப்ட் உடன் நெருக்கமாக இணைந்துள்ளது மற்றும் இனி அது இலாப நோக்கமற்றது என்று கூறியுள்ளார்.
2020 வாக்கில் இது பற்றி பகிர்கையில்,
’OpenAI இன்னும் திறந்த விஷயமாக இருக்க வேண்டும்’ என்று மஸ்க் ட்வீட் செய்தார், அதே நேரத்தில், தனக்கு ’கட்டுப்பாடு இல்லை மற்றும் நுண்ணறிவைப் பற்றி எனக்கு மிகக் குறைந்த அறிவு மட்டுமே உள்ளது’ என்று குறிப்பிட்டார்.
நவம்பர் 30 அன்று ChatGPT வெளியான சில நாட்களில், OpenAI சிஇஒ சாம் ஆல்ட்மேனுக்கு மஸ்க் ட்வீட் செய்தார். அதில், “இது பயங்கரமான நல்லது” மற்றும் ChatGPT பற்றி பிரபல செய்தி ஊடகங்கள் எழுதவில்லை, ஏனெனின், அது ஒரு இடதுசாரி வகையல்ல என பதிவிட்டார்.