சென்னை Tango Eye நிறுவனத்தை கையகப்படுத்தியது லென்ஸ்கார்ட்!
மூக்கு கண்ணாடி துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லென்ஸ்கார்ட், ஏஐ நுட்பம் சார்ந்த கம்ப்யூட்டர் விஷன் நிறுவனமான டாங்கோ ஐ (Tango Eye ) நிறுவனத்தை கையகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மூக்குக் கண்ணாடி துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ’டாங்கோ ஐ’ (Tango Eye) நிறுவனத்தை கையகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
, ஏஐ நுட்பம் சார்ந்த கம்ப்யூட்டர் விஷன் நிறுவனமானஇதன் மூலம், ஸ்டோர் அனுபவம் மற்றும் சேவை அனுபவத்தை மேம்படுத்த ஏஐ நுட்பத்தை லென்ஸ்கார்ட் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
‘டான்கோ ஐ’ நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டாளரான லென்ஸ்கார்ட் இந்த கையகப்படுத்தல் மூலம், வர்த்தக சிக்கல்களுக்குத் தீர்வு காண மற்றும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உறுதிய வெளிப்படுத்தியுள்ளது.
டாங்கோ ஏஐ நுட்பம் கடைகளுக்குள் சிசிடிபி காட்சிகளை அலசி, வாடிக்கையாளர் வருகை
நிலவரம் தொடர்பான புரிதலை அளிக்கிறது. மேலும், உற்பத்தி ஆலையில், தர சோதனையை தானியங்கிமயமாக்க உதவும்.
”லென்ஸ்கார்ட்டில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கான சேவை அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். Tango Eye ஏஐ நுட்பம் இதற்கு உதவுகிறது. இந்த நுட்பத்தை தற்போது எங்கள் ஆலைகளுக்கும் விரிவாக்கி உள்ளோம்,” என்று லென்ஸ்கார்ட் இணை நிறுவனர், சி.இ.ஓ பியூஷ் பன்சால் தெரிவித்துள்ளார்.
இந்த கையகப்படுத்தல் உத்தி லென்ஸ்கார்ட் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகும். டாங்கோ ஐ நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் மற்றும் கடை இடைமுகத்திற்கு இடையிலான சீரான தன்மை இருக்கும், என்று இணை நிறுவனர் ராம்னீக் குரானா தெரிவித்துள்ளார்.
"ஒரு நிறுவனராக, ஏஐ நுட்பத்தின் நவீன அம்சங்களைக் கொண்டு சிறந்த கம்ப்யூட்டர் விஷன் நுட்பத்தை உருவாக்கியதல் பெருமை கொள்கிறோம். ரீடைல் துறையில் இருந்து தற்போது எங்கள் நுட்பத்தை விரிவாக்குகிறோம். லென்ஸ்கார்ட் பார்ட்னராக, தொழில்நுட்பத்தில் மேலும் முதலீடு செய்ய முடியும்,” என்று டாங்கோ ஐ நிறுனவர், சி.இ.ஓ சுரேன் கூறியுள்ளார்.
TangoEye பற்றி
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு AI ஸ்டார்ட்-அப் ஆகும். இது சில்லறை விற்பனைக் கடைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், விற்பனை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கவும், வீடியோ தரவை செயல்படக்கூடிய நுண்ணறிவுகளாக மாற்றவும் உதவுகிறது. அதிநவீன AI மற்றும் கணினி பார்வைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மூலதனச் செலவின்றி சில்லறை வணிகத் துறையில் நிஜ உலக சவால்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ள டேங்கோ ஐ பிராண்டுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
Edited by Induja Raghunathan