Chennai Angels இடமிருந்து நிதி பெற்றுள்ளது கேன்சர் துறையில் இயங்கும் Avammune Therapeutics
ஆவாமுனே தெரபடிக்ஸ் நிறுவனம் (Avammune Therapeutics Inc), இம்யூனோ ஆன்காலஜி ஆய்வுக்காக, தி சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றுள்ளது.
'ஆவாமுனே தெரபடிக்ஸ் நிறுவனம்' (
), இம்யூனோ ஆன்காலஜி ஆய்வுக்காக, 'The Chennai Angels' நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றுள்ளது. இந்த நிதி, நிறுவனத்தின் தரம் வாய்ந்த ஆன்காலஜி, Auto-immune கோளாறுகள் தொடர்பான மருந்து ஆய்வுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புற்றுநோயை எதிர்கொள்ள உடலின் நோய் எதிர்ப்பு திறனை பயன்படுத்திக்கொள்வதை அடிப்படையாகக் கொண்ட ’Immuno Oncology' கடந்த சில ஆண்டுகளாக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் அடிப்படையில், பல மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த மருந்துகள் வரம்பு கொண்டதாகவும், விலை மிக்கதாகவும் அமைகின்றன.
“புற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் உடலில் முதல் அடுக்கு நோய் எதிர்ப்பு பாதுகாப்பை பயன்படுத்திக்கொள்ளும் புதிய வகை மருந்தை உருவாக்கி வருகிறோம். தற்போதைய மருந்துகளுக்கு உள்ள எதிர்ப்பு தன்மையை சமாளிக்க இவை உதவும்,” என்று ஆவாமுனே முதன்மை விஞ்ஞான அதிகாரி டாக்டர்.ஆதித்ய குல்கர்னி கூறியுள்ளார்.
“நிறுவனத்தின் தொழில்நுட்ப மேடை ஆய்வுகளில் பல்வேறு விலங்கு மாதிரிகளில் நிரூபமனம் ஆகியுள்ளது. இந்த நிதி மூலம் பாதுகாப்பு ஆய்வுகளை பூர்த்தி செய்ய இருக்கிறோம். அடுத்த ஆண்டு கிளினிகல் சோதனைக்கு தயார்கிறோம்,” என்று நிறுவன் சி.இ.ஓ அருண்.பி.பாபையா (Arun B. Papaiah) கூறியுள்ளார்.
ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுடன் இணையும் சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த ஆய்வின் அடுக்க கட்ட வளர்ச்சி தொடர்பாக நிறுவனம் முன்னணி மருந்தக நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
“மருந்து கண்டுபிடிப்பில் நிருபிக்கப்பட்ட திறமை கொண்ட குழுவை Avammune நிறுவனம், கொண்டுள்ளது. புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீறி இந்த நோய் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை பலிவாங்கி வருகிறது. இந்நிலையில், இத்துறை தொடர்பான ஆய்வில் இந்நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என சென்னை ஏஞ்சல்ஸின் முதன்மை முதலீட்டாளர் மற்றும் மேத்தா மல்டி ஸ்பெஷாலட்டி மருத்துவனமனை இயக்குனர் சமீர் மேத்தா கூறியுள்ளார்.