Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

ரூ.600 கோடி வருவாயை இலக்காகக் கொண்டு வளரும் சென்னை லிப்ட்ஸ் நிறுவனம்!

2018 ல் துவக்கப்பட்ட, வீடுகளுக்கான லிப்ட் தயாரிப்பு நிறுவனம் நிபவ் ஹோம் லிப்ட்ஸ், ரூ.250 கோடி வருவாயை எட்டியுள்ளது. வெளி நிதி இல்லாமல், இந்தியா, மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

ரூ.600 கோடி வருவாயை இலக்காகக் கொண்டு வளரும் சென்னை லிப்ட்ஸ் நிறுவனம்!

Friday October 27, 2023 , 3 min Read

மக்கள், நோக்கம் மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ’எலைட் எலிவேட்டர்சின்’ அங்கமான நிபவ் ஹோல் லிப்ட்ஸ் (Nibav Lifts) நிறுவனம் இயங்குவதாக அதன் சி.இ.ஓ விமல் ஆர் பாபு தெரிவிக்கிறார்.

நிறுவன நோக்கமும் தெளிவாக இருக்கிறது: வசதியை மட்டும் அல்ல, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு வழி செய்யும் புதுமையான இல்ல லிப்ட்களை வழங்குவது!

லிப்ட்

2018ல் துவக்கப்பட்ட நிறுவனம் இப்போது 2023ல், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் 2,000க்கும் மேற்பட்ட லிப்ட்களை விற்பனை செய்து, 23 நிதியாண்டில் ரூ.119 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் ரூ.42 கோடியை விட மூன்று மடங்காகும். தற்போது, நிறுவன வருவாய் ஆர்டர் அடிப்படையில் ரூ.395.21 கோடியாக உள்ளது.

எனினும், எண்ணிக்கை மட்டும் அல்ல கவனிக்க வேண்டியது. துவக்கம் முதல் சுயநிதியில் செயல்படும் இந்நிறுவனம், புதுமையான வடிவமைப்பு மற்றும் வாக்குவன் லிப்ட் மூலம் ஐரோப்பிய தரச்சான்றிதழை முதலில் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.

"எலிவேட்டர் தயாரிப்பில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது மிக முக்கியம். சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு எங்கள் புதுமையான லிப்ட்களை அறிமுகம் செய்த போது, இந்திய நிறுவனம் ஒன்று இத்தகைய தயாரிப்பை அளிப்பது பற்றி அவர்களுக்கு ஆச்சர்யம் உண்டானது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் விமல் பாபு கூறினார்.

இந்தியா உற்பத்தி மையமாக அறியப்பட்டாலும், சர்வதேச அளவில் பாதுகாப்பு அம்சங்களுக்காக அங்கீகரிக்கப்படவில்லை, இதை தான் மாற்ற விரும்புகிறோம், என்கிறார்.

பொருத்தமான லிப்ட்

விமல் பாபுவுக்கு தொழில்முனைவு புதிதல்ல. இதற்கு முன் அவர், 2008ல் நிபவ் ஐடி சொல்யூஷன்ஸ் (பின்னர் எலைட் எலிவேட்டர்ஸ்) நிறுவன இயக்குனராக இருந்தார். நிறுவனம், வர்த்தக மற்றும் குடியிருப்பு லிப்ட்களை உற்பத்தி செய்கிறது.

“எங்கள் வீட்டிற்கு அழகியல் நோக்கில் சிறப்பாக உள்ள லிப்டை தேடிய போது தான் நிபவ் நிறுவனத்தை துவக்கும் தேவை உண்டானது. உள் அலங்காரத்துடன் பொருத்தமாக அமைவதோடு பாதுகாப்பாகவும் விளங்கும் லிப்டின் தேவையை உணர்ந்தோம். எனினும், இந்தப் பிரிவில் எந்த நிறுவனமும் இல்லை. இதே துறையில் எங்களுக்கு அனுபவம் இருந்ததால், இதில் நுழைய தீர்மானித்தோம்,” என்கிறார்.

நிபவ் ஹோம் லிப்ட்ஸ் வாக்குவம் லிப்ட்களை உற்பத்தி செய்கிறது. இவை வழக்கத்தில் இருந்து மாறுபட்ட லிப்ட்கள். இவற்றில் கால் பெல்ட் கிடையாது, ஆற்றலுக்கான வலுவான அமைப்பு கொண்டவை. எனவே, இவற்றுனுள் எந்த கட்டுமான பணியையும் நிர்மாணிக்க தேவையில்லை.

"எந்த பக்கச்சுவர், காலம் அல்லது ஆதரவு அமைப்பை கட்டுமானம் செய்யத்தேவையில்லை. ஷாப்ட் மற்றும் கேபின் ஒரே இடத்தில் தயாரிக்கப்படுவதால், அதிக அளவு ஷாப்ட்-கேபின் பரப்பு சாத்தியமாகிறது,” என விளக்குகிறார்.
லிப்ட்

இந்திய தயாரிப்பு

நிபவ் ஹோல் லிப்ட்ஸ் நிறுவனம் சென்னையில் உற்பத்தி ஆலை கொண்டுள்ளது. மேலும் கனடா, ஆஸ்திரேலியாவில் சிறிய அசெம்பிளி வசதி கொண்டுள்ளது.

"நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு லிப்டும் வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றுவதால், வெவ்வேறு இடங்களுக்கு குறித்த நேரத்தில் லிப்ட்களை அனுப்ப இந்த மையங்கள் கொண்டுள்ளோம்,”என்கிறார்.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்ததும், லிப்டை அளிக்க 2 முதல் 3 மாதங்கள் ஆகிறது. நிறுவன லிப்ட்களின் விலை ரூ.9.9 லட்சத்தில் இருந்து, ரூ.28 லட்சம் வரை ஆகிறது. மலேசியா, ஆஸ்திரேலிய மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருப்பு கொண்டுள்ளது.

இந்த லிப்ட்களுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் 79 சதவீதம் இந்தியாவில் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், ஒரு சில ஸ்பெயினில் இருந்து தருவிக்கப்படுவதாகவும் விமல் பாபு கூறுகிறார். தயாரிப்பில் உள்ளூர் பொருட்கள், சர்வதேச இறக்குமதியில் கலைவையை இது அளிக்கிறது.

2022 முதல் 2027 காலத்தில் இந்தியாவில் எலிவேட்டர் மற்றும் எஸ்கலேட்டர் சந்தை ஆண்டு அடிப்படையில் 8.9 சதவீதம் வளர்ச்சி அடைய இருப்பதாக டெக்னாவியோ அறிக்கை தெரிவிக்கிறது, இதன் சந்தை அளவு 784.24 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், ஸ்டாக் எலிவேட்டர்ஸ், CIBES Lifts உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. இந்த சந்தையில் விமல் பாபு அதிக வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார். அடுக்கு மாடி விடுகளை கொண்டவர்கள் அல்லது தங்கள் வாழ்விடத்தை மேம்படுத்த விரும்புகிறவர்களை இந்நிறுவனம் இலக்கு வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

நிபவ் ஹோல் லிப்ட்ஸ் அமெரிக்க சந்தையில் நுழையவும் திட்டமிட்டுள்ளது. இது நிறுவன வருவாய் ரூ.600 கோடியை எட்ட வேண்டும் எனும் இலக்கை அடைய உதவும். இந்தியாவில் 35 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளதாக விமல் பாபு கூறுகிறார்.

வளர்ச்சி மற்றும் சவால்கள் பற்றி குறிப்பிடுபவர், வாடிக்கையாளர்களுக்கு லிப்ட் விலையை குறைப்பது நோக்கம் என்கிறார். இதற்காக தீவிர ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதில் சவால்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

புதுமையான லிப்ட்களை பரவலாக்க நிறுவனம், நிதி வசதி வாய்ப்புகளையும் வாடிக்கையாளர்க்கு வழங்கத்துவங்கியுள்ளது.

ஆங்கிலத்தில்: பாலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan