Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

பிராண்ட்கள் இன்ஃப்ளுயென்சர்களை ஒப்பந்தம் செய்ய உதவும் சென்னை ஸ்டார்ட் அப்!

சென்னையைச் சேர்ந்த ’பிக்மைஆட்’ நிறுவனம், பிராண்ட்கள் தங்கள் வர்த்தகத்தை விளம்பரம் செய்வதற்காக செல்வாக்காளர்களை ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான மேடையாக விளங்குகிறது

பிராண்ட்கள் இன்ஃப்ளுயென்சர்களை ஒப்பந்தம் செய்ய உதவும் சென்னை ஸ்டார்ட் அப்!

Friday April 22, 2022 , 3 min Read

கோவிட்-19 பாதிப்பு உண்டாக்கிய பொதுமுடக்கம் பல வர்த்தகங்களை பலவிதமாக பாதித்தாலும், புதிய வர்த்தக எண்ணங்கள் உருவாகவும் வழி வகுத்தது.

பொதுமுடக்கத்தின் போது நண்பர்களான, பிரபு தாஸ், சிவகுமார் செல்வராஜ், அருண் போய்ஸ் மற்றும் அருள்ஜோதி குப்புசாமி, யூடியூப் சேனல் ஒன்றை துவக்க விரும்பினர்.

மாறுபட்ட முறையில் செயல்படத் தீர்மானித்தவர்கள் பல வர்த்தக எண்ணங்களை பரிசீலித்து, முற்றிலும் வேறுபட்ட யோசனையாக, ’பிக்மைஆட்’ (PickMyAd) எண்ணத்தை தேர்வு செய்தனர்.

இன்ப்ளுயன்சர் மார்க்கெட்டிங் ஹப் தகவல் படி, செல்வாக்காளர்களுக்கான (influencers) சர்வதேச சந்தை, 2021ல் 13.8 பில்லியன் டாலரில் இருந்து, 2022ல் 16.4 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்ட் அப்
“செல்வாக்காளர் மார்க்கெட்டிங்கில் ஏற்பட்டு வரும் போக்குகளை கவனித்தோம். அதே நேரத்தில், பிராண்ட்கள் செல்வாக்காளர்களால் ஏமாற்றப்படுவது அல்லது செல்வாக்காளர்கள் ஏமாற்றப்படுவது பற்றி பல கதைகளை கேள்விப்பட்டோம்,” என்கிறார் யுவர்ஸ்டோரியிடம் பேசிய பிக்மைஆட் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரபு தாஸ்.

இதுவே அவர்களுக்குத் தேவையான பொறியாக அமைந்தது. இந்த புதிய பரப்பில் நுழைந்த நிறுவனர்கள், பல்வேறு நிறுவனங்கள் தங்கள் விளம்பரத் திட்டங்களுக்கான மேடையை உருவாக்க முயற்சிப்பதை அறிந்தனர். பிராண்ட் தேவை முதல் சரியான செல்வாக்காளர்களை கண்டறிவது வரை சேவை அளிக்க தீர்மானித்தனர்.

2020ல் அவர்கள் பிக்மைஆட் நிறுவனத்தை, பிராண்ட்கள் தங்கள் விளம்பரங்களுக்காக செல்வாக்காளர்காளை ஒப்பந்தம் செய்வதற்கான மேடையாக உருவாக்கினர்.

செயல்பாடு

பிக்மைஆட் நிறுவனம் யூட்டியூப்பில் கவனம் செலுத்துகிறது. எதிர்காலத்தில் இன்ஸ்டாகிராமையும் இணைக்க உள்ளது. இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கியுள்ள மேடையில் பிராண்ட்கள் மற்றும் செல்வாக்காளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதன் பிறகு நிறுவனம் இவற்றை சரி பார்க்கும்.

பதிவு செய்த பிறகு, யூட்டியூப் டைம்ஸ்லாட்டிற்கு ஏற்ப பிராண்ட்கள் செல்வாக்காளர்களை ஒப்பந்தம் செய்து கொள்லலாம். இரு தரப்பிடம் இருந்தும் நிறுவனம் 10 சதவீத தொகையை பெற்றுக்கொள்கிறது.

“செல்வாக்காளர்களுக்கான தடைகளை அகற்ற விரும்புகிறோம்,” என்கிறார் பிரபு.

நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டுள்ள செல்வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் இணைய முகவரியை தங்கள் சேனலில் பகிர்ந்து கொள்ளலாம்.

“பிராண்ட்கள் தரப்பில் அவர்கள் பணத்தை பாதுகாக்க விரும்புகிறோம். பிராண்ட் மற்றும் செல்வாக்காளர்கள் இடையே பாலமாக செயல்படுகிறோம்,” என்கிறார் பிரபு.

ஜிங்கில்பேர்டு, இப்போபே, Giottus, 1hr Bazar உள்ளிட்ட பிராண்ட்களுக்குடன் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.

ஸ்டார்ட்

நிறுவனர் குழு

நிறுவனம் 16 பேர் கொண்ட குழுவாக இருக்கிறது. சி.டி.ஓ அருள்ஜோடி உள்பட ஆறு பேர் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளனர். நிறுவனர்கள் திருச்சியில் தங்கள் பட்டப்படிப்பை முடித்தனர்.

பிக்மைஆட் நிறுவனத்தை துவக்குவதற்கு முன் பிரபு மற்றும் அருள்ஜோடி Calibraint டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர்களாக இருந்தனர். சி.ஓ.இ. சிவகுமார், இந்த குழுவில் இணைந்த நிலையில், Amwhiz Media எனும் மென்பொருள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தைத் துவக்கினர். லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அருண் பின்னர் இணைந்தார்.

இந்த சென்னை ஸ்டார்ட் அப், ஸ்டார்ட் அப் இந்தியா சீட் பண்ட் மூலம் ரூ.20 லட்சம் திரட்டியது. கிஸ்ஃப்ளோ நிறுவன சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் வழிகாட்டுதலையும் பெற்றுள்ளது. VUBIQUITY  நிறுவன சி.டி.ஓ. ஜஸ்டின் பியாடினை முக்கிய முதலீட்டாளராக பெற்றுள்ளது.

2020ல் துவக்கப்பட்டாலும், இதன் மேடை 2022 ஜனவரியில் அறிமுகம் ஆனது. இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளது. பொதுமுடக்க பாதிப்பு மற்றும் நிறுவன சேவையை மாற்றி அமைப்பது வரை இதில் அடங்கும் என்கிறார் பிரபு.

தனது மேடையில் 900 செல்வாக்காளர்களைப் பெற்றுள்ள நிறுவனம் 30 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது தமிழக அளவில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த சந்தை 15 பில்லியன் டாலர் வாய்ப்பு கொண்டதாகவும், 37 மில்லியன் செல்வாக்களர்களை கொண்டதாகவும் அமைந்துள்ளது. நிறுவனத்திற்கான சாத்திய சந்தை 1 மில்லியன் என வைத்துக்கொண்டாலும், பெரிய அளவில் வாய்ப்பிருப்பதாக பிரபு கூறுகிறார்.

தமிழக அளவில் கவனம் செலுத்தினாலும் மற்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

“தெலுங்கு செல்வாக்காளர்களுடன் துவக்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய அளவில் விரிவாக்கம் செய்வோம்,” என்கிறார் பிரபு.

“நிதி நோக்கில் வரம்புகள் உள்ளன. உடனடியாக விரிவாக்கம் செய்ய முடியாது. சில நல்ல வெற்றிக்கதைகளை பெற்ற பின் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்,” என்கிறார் பிரபு.

பிராண்ட்கள் மற்றும் செல்வாக்காளர்களை ஈர்க்க நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலத்தில்: ஐஸ்வர்ய லட்சுமி தமிழில்: சைபர் சிம்மன்