பி- சுற்று நிதியாக ரூ.200 கோடி திரட்டியது சென்னை ‘அக்னிகுல் காஸ்மோஸ்’
புதிய நிதியை தற்போதைய தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்குவதற்காகவும், மொபைல் ஏவுதளத்திற்கு முதலீடு மற்றும் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ஏவுதலுக்கான சோதனை ரிக் அமைக்க பயன்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப்பான ’அக்னிகுல் காஸ்மோஸ்’, பி- சுற்றில் ரூ.200 கோடி (26.7 மில்லியன் டாலர்) நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 40 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
இந்த நிதிச் சுற்றில், செலஸ்டா கேபிடல், ராக்கெட்ஷிப்.விசி, அர்த்தா வென்சர் பண்ட், அர்தா செலக்ட் பண்ட், மேபீல்டு இந்தியா உள்ளிட்ட முதலீட்டாளர்களுடன் ஏற்கனவே உள்ல பை வென்சர்ஸ் மற்றும் ஸ்பெஷலே இன்வெஸ்ட் உள்ளிட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.
"நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் தொடர்பான இடர்களின் குறிப்பிடத்தக்க அளவு நீக்கப்பட்ட நிலையை எட்டியிருக்கிறோம். இதன் செயல்முறை, செயல்திறன் குறித்து தெளிவான புரிதல் உள்ளது. இப்போது, எங்கள் கவனம் தனி ராக்கெட் ஏவுதலில் இருந்து வளர்ச்சியை விரிவாக்குவதற்கு மாறியுள்ளது. ஒன்று அல்லது சில ராக்கெட் ஏவுதல் அல்ல, 25 முதல் 50 ஏவுதல் பற்றி யோசிக்கிறோம்,” என்று அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர், சி.இ.ஓ. ஸ்ரீநாத் ரவிசந்திரன் கூறியுள்ளார்.
இந்நிறுவனம் 2017ல் ஸ்ரீநாத் ரவிசந்திரன் மற்றும் மொயின் எஸ்.பி.எம் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஐஐடி மெட்ராசில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், இந்த புதிய நிதியை தற்போதைய தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்குவதற்காகவும், மொபைல் ஏவுதளத்திற்கு முதலீடு மற்றும் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ஏவுதலுக்கான சோதனை ரிக் அமைக்க பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
“அக்னிகுல் நிறுவனத்தின் விண்வெளி நுட்பம், எங்களுடைய இந்தியா சார்ந்த ஆழ் நுட்ப முதலீடு இலக்குடன் இணைந்து அமைந்துள்ளது. நிறுவன நோக்கம், இந்திய விண்வெளி அமைப்பு, கட்டுப்பாடு அமைப்புகள், தொழில்முனைவோர் ஆகியவர்களின் கூட்டு முயற்சியை சுட்டிக்காட்டுகிறது,” என செலஸ்டா கேபிடல் நிர்வாக பாட்னர் அருண் குமார் கூறியுள்ளார்.
2023 ஆகஸ்ட் மாதம், அக்னிகுல் நிறுவனம், தனது அக்னிபான் ஏவு வாகனத்தை, ஸ்ரீரிஹரிகோட்டா விண்வெளி மையத்தில் உள்ள தனியார் ஏவுதள மேடையுடன் ஒருங்கிணைக்கும் பணியை துவக்கியது.
இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, அக்னிகுல் மிஷன் கட்டுப்பாடு மையத்தில் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது நிறுவனம் துவக்க சோதனையை நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. சிக்கலான ஏவு செயல்பாட்டிற்கான தொழில்நுட்ப பொருத்தத்தை இது உணர்த்துகிறது.
அக்னிபான் சிறிய ராக்கெட் 100 எடையை பூமியின் 700 கிமீ சுற்று வட்டபாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கக் கூடிய இஞ்சின் தன்மையை வாகனம் பெற்றுள்ளது.
“இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவுதலை மேற்கொள்வது எங்கள் உடனடி இலக்கு. அதன் பிறகு, வர்த்தக செயல்பாடுகளில் கவனம் செலுத்துவோம். மாதம் ஒன்று அல்லது இரண்டு ஏவுதல்களை திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்கள் வர்த்தக மாதிரியை மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்துகிறோம்,” என்று ஸ்ரீநாத் கூறினார்.
முன்னதாக அக்னிகுல் உலகின் முதல் ஒற்றை பொருள் முப்பரிமான அச்சு இஞ்சின் அக்னிலெட்டை 2021ல் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதற்காக இந்திய அரசிடம் இருந்து 2022ல் காப்புரிமை பெற்றது.
ராக்கெட் இஞ்சினுக்கான உற்பத்தை வசதியையும் கடந்த ஆண்டு துவக்கியது. ஏவுவாகன வளர்ச்சியை இது மையமாகக் கொண்டது. மேலும், உலக அளவில் ஒற்றை வடிவில் ராக்கெட் இஞ்சினை முப்பரிமான முறையில் அச்சிர்டக்கூடிய முதல் நிறுவனமாக விளங்குகிறது.
வர்த்தக விரிவாக்கம்
ஆழ்நுட்பத் துறையில் முதலீடு சுணக்கம் மற்றும் மேக்ரோபொருளாதார தாக்கம் குறைந்திருப்பதாக ஸ்ரீநாத் கருதுகிறார்.
"இந்த புதிய துறையில் நிதி திரட்டும் சூழல், அனுபவம் வாய்ந்த நிறுவனர்கள் எதிர்கொண்ட முறைகளில் இருந்து மாறுபட்டுள்ளது. சவால்களும், சாதகங்களும் இருந்தாலும், இந்த போக்கில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. குறிப்பிட்ட மனநிலை கொண்ட தனிநபர்கள் இந்தத் துறை ஈர்க்கிறது,” என்கிறார்.
இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு இடர் தன்மை பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.
“இந்த வளர்ச்சித் திட்டம் சவாலானது. அதிலும் குறிப்பாக பெரிய அளவில் உற்பத்தி செய்து, தர நிர்ணயம், இன்வெண்ட்ரி நிர்வாகம், கண்காணிப்பு போன்றவற்றில் சவாலானது. எங்கள் அணியை விரிவாக்கம், கொள்திறன் அதிகரிக்க, செயல்முறை, உள்கட்டமைப்பு மேம்பாடு, வளர்ச்சி நோக்கிலான செயல்களுக்கு இந்த நிதியை பயன்படுத்திக்கொள்வோம்,” என்றும் கூறினார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத் | தமிழில்: சைபர் சிம்மன்
3 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை மின் வாகன ஸ்டார்ட் அப் ‘Raptee’
Edited by Induja Raghunathan