சென்னை eplane நிறுவன வாகனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து சான்றிதழ் கிடைத்தது!
இபிளேன், தனது புதுமையான பறக்கும் மின் வாகனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், இந்த வகை விமான சான்றிதழை பெறும் முதல் இந்திய தனியார் நிறுவனமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
eplane கம்பெனி, தனது புதுமையான பறக்கும் மின் வாகனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், இந்த வகை விமான சான்றிதழை பெறும் முதல் இந்திய தனியார் நிறுவனமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இபிளேன் கம்பெனி, செங்குத்தாக மேலெழுந்து, தரையிறங்கும் மின்வாகன விமானத்தை (eVTOL) உருவாக்குகிறது. நிறுவனத்தின் மின்வாகன விமானம் e200X தற்போது சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக சான்றிதழ் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவிடிஓஎல் ரக வாகனங்களுக்கு கிடைத்துள்ள சான்றிதழ், இபிளேன் நிறுவனம் மற்றும் இந்திய விமான போக்குவரத்து துறைக்கு முக்கிய மைல்கல்லாக அமைவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவிடிஓஎல் ரக வாகன செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை ஏற்படுத்துவதன் மூலம் மின்விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும் இது அமைவதாக நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. e200X வாகனம் பாதுகாப்பு மற்றும் செயல்முறைக்கான உயர் தரத்தை கொண்டிருப்பதையும் இது உணர்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான வடிவமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான அம்சங்களில் நிறுவனம் தொடர்ந்து இயக்குனரகத்துடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் வாகனத்திற்கு இயக்குனரகத்தின் சான்றிதழ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானத்துறைக்கான முக்கிய மைல்கல் இது,“ என்று இபிளேன் நிறுவனர் சத்யா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
"கடந்த 2023ம் ஆண்டு டிஜிசிஏ- விடம் இருந்து வடிவமைப்பு அனுமதி பெற்ற பிறகு கடந்த 18 மாதங்களில் இதற்காக நிறுவனம் செலவிட்டுள்ளது. மின் விமான வாகனத்திற்கான செயல்முறை உள்கட்டமைப்பு வசதியில் கவனம் செலுத்தி வந்தது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சான்றிதழ் முலம், இந்தியாவில் மேம்பட்ட விமான போக்குவரத்தில் (AAM இபிளேன் நிறுவனம் தனது முன்னிலையை வலுவாக்கியுள்ளது. நிறுவனம் சான்றிதழ் பெற்ற விமான டாக்சி சேவைகளை வழங்கக் கூடிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவதற்கும் இந்த சான்றிதழ் வழிவகுக்கிறது.
e200X வாகனம் 15 முதல் 1900 கிமீ வரையான தொலைவிற்கு சுற்றுச்சூழல் நட்பான போக்குவரத்து சேவையை வழங்கக் கூடியது. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும். அவசர கால சேவைகளில் முக்கிய பங்காற்றக்கூடியது.
இந்நிறுவனம் தனது வாகன சேவையை 2026ம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தியால், இபிளேன் நிறுவனம் நிறுவப்பட்டது. நகரங்களுக்கு இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan