Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

700 அடி நீளம், 794 அறைகள், 11 தளங்கள்; தமிழகத்தின் முதன் சுற்றுலா சொகுசுக் கப்பலில் என்னென்ன இருக்கு?

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கப்பல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்துள்ளார்.

700 அடி நீளம், 794 அறைகள், 11 தளங்கள்; தமிழகத்தின் முதன் சுற்றுலா சொகுசுக் கப்பலில் என்னென்ன இருக்கு?

Saturday June 04, 2022 , 3 min Read

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்துள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக தொடக்கம்:

சொகுசு கப்பல் மூலமாக ஆழ்கடல் பகுதிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பார் என சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இதற்காத தனியார் கப்பல் நிறுவனமான Cordelia நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். இந்த கப்பலில் சென்னையிலிருந்து புதுவை, விசாகப்பட்டினத்திற்கு செல்லலாம்.

Ship

கார்டெலியா க்ரூஸ் (Cordelia Cruise) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொகுசு குரூஸ் லைனர் (Luxury Cruise Liner) ’The Empress’ என்ற கடல்வழி எக்ஸ்பிரஸ் சொகுசுக் கப்பல் ஆழ்கடல் கப்பல் பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி, சென்னை துறைமுகம் தலைவர் சுனில் பாலிவல், கார்டெலியா க்ரூஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜர்கன் பைலாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கடல்வழி எம்பிரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணத்தை தொடங்கி வைக்கும் விதமாக அதற்கான கேடயத்தினை கப்பல் கேப்டன் டேனிஸ் கொரூப்பிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு கப்பல் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கப்பலுக்குள் சென்று அதனை பார்வையிட்டார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில்,

”பல்வேறு புதிய திட்டங்களை சுற்றுலாத் துறையில் புகுத்த திட்டமிட்டு உள்ளோம். சுற்றுலாத் துறையை பொறுத்தவறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. சுற்றுலா துறையை மேம்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு , மிகப்பெரிய ஒரு கனவு இன்று நினைவாகி உள்ளது. தமிழக அரசு பொறுப்பேற்ற நாளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா மிகவும் முடங்கிப் போய் இருந்தது. சாகச சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை சுற்றுலாவில் புகுத்த உள்ளோம். தற்போது சுற்றுலாவை மேம்படுத்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட பல்வேறு சுற்றுலா திட்டங்கள் படிபடியாக நடைமுறைப்படுத்தப்படும்,” எனத் தெரிவித்தார்.
Ship

இந்த சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கப்பல் சேவை அடுத்த 4 மாதத்திற்கு வெற்றிகரமாக செயல்படத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சொகுசு கப்பலின் சிறப்பம்சங்கள்:

Ship
  • கார்டிலியா குரூஸ் (Cordelia Cruise) - சொகுசு குரூஸ் லைனர் (Luxury Cruise Liner) "The Empress" சென்னையிலிருந்து உயர் கடலுக்கு (High Sea) சென்று, திரும்பி சென்னைக்கு வரும் இரண்டு நாள் சொகுசுப் பயணத்தைக் கொண்டுள்ளது.

  • சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு கப்பல் தனது பயணத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறது, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புதுச்சேரியின் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் கப்பல், அன்றை தின இரவு மீண்டும் சென்னை நோக்கி புறப்படும் கப்பலானது திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வந்தடையும்.

  • 700 அடி நீளமும், 11 தளங்களைக் கொண்ட சொகுசுக் கப்பலில் 794 அறைகள் உள்ளன.

  • 10 பெரிய ரெஸ்டாரண்டுகள், கலைநிகழ்ச்சிகள், மதுக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, மலையேற்ற பயிற்சி செய்யும் இடம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
Ship
  • ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கத்தில் கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்காக இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ நடத்தப்படும்.

  • ஒரே நேரத்தில் 1800 பயணிகள் மற்றும் 800 பணியாளர்கள் என 2600 பேர் வரை பயணிக்கலாம்.

  • இரண்டு நாள் பயணமாக ஆழ்கடலுக்கு செல்லும் இக்கப்பல் இரண்டு இரவு, ஒரு பகல் என பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

  • இரண்டு நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 18,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்றார் போல் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  • இரண்டு இரவுகளை சொகுசுக் கப்பலில் கழிக்க ரூ.18 ஆயிரம் என்றால், 5 இரவுகளை கழிக்க ரூ.90 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

  • 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.
Ship
  • காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்படும். குறிப்பிட்ட நேரத்தை தவிர பிற சமயங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என நினைத்தால் கப்பலுக்குள் உள்ள ரெஸ்டாரண்டுகளில் பணம் செலுத்தி சாப்பிட்டுக்கொள்ளலாம்.

  • சொகுசு கப்பலுக்குள் சைவம் மற்றும் அசைவத்திற்கு என தனித்தனி சமையல் அறைகள் உள்ளன. அதேபோல் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களுக்காக தனித்தனி உணவருந்தும் இடமும் உள்ளது.

தற்போது ஒரே ஒரு சொகுசு கப்பல் சேவையை மட்டுமே சென்னை முதல் புதுச்சேரிக்கு ஆரம்பித்துள்ள கார்டிலியா குரூஸ் நிறுவனம் 2025ம் ஆண்டில் ஒரே நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான 3 சொகுசு கப்பலை இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம், ஏற்கனவே விசாகப்பட்டினம், மும்பை, கோவா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் முதன் முறையாக இந்த சொகுசுக் கப்பல் பயண திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.