Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Innovation Challenge - சென்னை போக்குவரத்தை மேம்படுத்தும் தீர்வுகள் - மாணவர்கள், ஸ்டார்ட் அப்'களுக்கு அழைப்பு!

சென்னை பெருநகரின் போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு காணும் மற்றும் போக்குவரத்து சூழலை மேம்படுத்தும் சேவைகளுக்கான யோசனைகளை வழங்க, மாணவர்கள், வல்லுனர்கள், ஸ்டார்ட் அப்கள் பங்கேற்பதற்கான நகர்புற நகர்வு சவால் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

Innovation Challenge - சென்னை போக்குவரத்தை மேம்படுத்தும் தீர்வுகள் - மாணவர்கள், ஸ்டார்ட் அப்'களுக்கு அழைப்பு!

Thursday March 13, 2025 , 2 min Read

சென்னை பெருநகரின் போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு காணும் மற்றும் போக்குவரத்து சூழலை மேம்படுத்தும் சேவைகளுக்கான யோசனைகளை வழங்க, மாணவர்கள், வல்லுனர்கள், ஸ்டார்ட் அப்கள் பங்கேற்பதற்கான நகர்புற நகர்வு சவால் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) இணைந்து சென்னைப் பெருநகர போக்குவரத்து சார்ந்த சிக்கல்களை சமாளிக்க 'நகர்ப்புற நகர்வு (Urban Move – Open innovation Challenge)' என்ற புத்தாக்க சவாலை அறிவித்துள்ளது.

TN Startup

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சென்னை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர் செயலாளர், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு உறுப்பினர் செயலாளர் ஐ.ஜெயக்குமார், மற்றும். சிவராஜா ராமநாதன், இயக்க இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர், StartupTN ஆகியோரின் முன்னிலையில் இந்த முயற்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

புத்தொழில் நிறுவனங்கள் (Startups), போக்குவரத்து நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்கள், GIS வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் இந்த சவாலில் பங்கேற்கலாம்.

பொதுப் போக்குவரத்து சார்ந்த துல்லியமான தகவல்கள் இல்லாதது, தனியார் வாகனங்களின் பெருக்கம் காரணமாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது உட்கட்டமைப்பு மற்றும் சாலைகள் நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த தரவுத்தளம் இல்லாதது உள்ளிட்ட முக்கியமான போக்குவரத்து சிக்கல்களைத் தீர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்னைப் பெருநகரத்தில் போக்குவரத்து சூழலை மேம்படுத்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்ட தீர்வுகளை வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சவால் ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

1.    சென்னை பொது போக்குவரத்துக்கான திறந்த நிலை வலைதள வரைபடம் உருவாக்குதல்.

2.    செயலி இல்லா பொது போக்குவரத்து பயணச்சீட்டு விநியோக முறையை உருவாக்குதல்.

3.    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கைபேசி மூலம் போக்குவரத்து சார்ந்த நகர்ப்புற உட்கட்டமைப்பு தகவல்களை சேகரித்தல்.

4.    போக்குவரத்து மேலாண்மைக்கு உதவ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வாகன போக்குவரத்து தகவல்களை சேகரித்தல்.

5.    ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயலி மூலம் மேற்பரப்பு உட்கட்டமைப்புகளான வழிமுறைகள், மின் இணைப்புகள், கழிவுநீர் அமைப்புகள் சார்ந்த தகவல்களை சேகரித்தல்.

பங்கேற்பாளர்கள் இணையதளத்தில் மார்ச் 28, 2025-க்குள் பதிவு செய்து விண்ணப்பிக்கவும்.

இந்த புத்தாக்க சவாலில் வெற்றிபெறுபவர்களுக்கு நிறுவனம் தொடங்குவதற்கான ஆதரவு, வழிகாட்டுதல், வாய்ப்புகள், அரசு துறைகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் மற்றும் CUMTA உடன் இன்டர்ன்ஷிப் (Internship) வாய்ப்புகள் முதலானவற்றை பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் இந்த புத்தாக்க சவாலை பற்றி  தெரிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க, [https://cumta.tn.gov.in/openinnovationchallenge] என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


Edited by Induja Raghunathan