கொரோனா வைரசுக்கு 50,000 பேர் பலி? சீன கோடீஸ்வரரின் பகீர் தகவல்!
கொரோனோ வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக சீன கோடீஸ்வரர் வெளியிட்டுள்ள தகவலை உறுதிப்படுத்த இரண்டு காரணங்கள் உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனாவின் யூஹானில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பிற பகுதிகளை மட்டுமின்றி 28 நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொத்துக் கொத்தாக உயிர்கள் தினந்தோறும் செத்து மடிகின்றன.
'கொரோனா வைரசால் தற்போது வரை, 1000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மை நிலை வேறு என்று மறுக்கிறார் அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நாள்தோறும் சீனாவில் இருக்கும் எரிமயானங்களின் உடல்கள் எரியூட்டப்படுவதை கணக்கில் வைத்து அவர் கணித்திருப்பதாவது, யூஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாத படி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது.
’தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
வெங்கூய்யின் கணிப்பு சரியாக இருக்க வாய்ப்புகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை இரு விஷயங்கள் உணர்த்துகின்றன. முதலாவதாக சீன சுகாதாரத் துறை, 3.8 கோடி பேர் வசிக்கும் யூஹானில் 50 லட்சம் பேர் மாயமாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 50 லட்சம் பேர் மூலமும் இந்த வைரஸ் பரவக் கூடும். அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில் குவோ வெங்கூய்யின் தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக சீனாவைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றில் சல்பரின் அளவு அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உயிர்ச்சத்து பொருளை எரிக்கும் போது இந்த சல்பரானது வெளியாகும் என்று ட்விட்டர்வாசி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் அணுஉலை, குப்பைக்கிடங்கு, விலங்குகளின் சடலங்களை எரிக்கும் போது மற்றும் தொழிற்சாலைகள் மூலமும் சல்பர் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
கொரோனோ வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக சீன அரசு தொழிற்சாலைகள், மின்ஆலைகள் உள்ளிட்டவற்றை மூடியுள்ளதால் இதில் இருந்து சல்பர் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
காற்றில் சல்பர் அளவு அதிகமாக இருப்பதால் யூஹான் நகரமே புகைமண்டலத்தால் சூழ்ந்திருப்பதாகவும் கருத்துகள் பதிவிடப்படுகிறது. எரிமயானங்களில் உடல்கள் எரிக்கப்படுவதன் மூலம் வெளியாகும் புகைகள் இவை என்றும் கூறப்படுகிறது.
காற்றில் சல்பரின் அளவு அதிகரித்திருப்பதால் 4chan என்ற சர்ச்சைக்குரிய இணையதளம் செய்துள்ள ஆராய்ச்சியில் ஒரு மனித உடல் எரிக்கப்பட்டால் 113 கிராம் சல்பர் டைஆக்சைடு வெளிப்படும் என்றும், தற்போது யூஹானைச் சுற்றியுள்ள பகுதியில் நிலவும் சல்பரின் அளவை ஒப்பிடும் போது 13 ஆயிரத்து 968 உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
யூஹான் எரிமயானத் தொழிலாளி கூறியுள்ளதாக 4chan குறிப்பிட்டுள்ளதில், நாள்தோறும் 100 உடல்களாவது மயானத்திற்கு வருவதாகவும், கொரோனோ வைரஸால் இறந்தவர்களின் உடலை வெகுநேரம் வெளியில் வைத்திருக்க முடியாது என்பதால் உடனுக்குடன் எரித்து வருவதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனோ உயிரிழப்புகளில் சீன அரசுக்கு எதிரான ஆதாரங்களாக வலுப்பெற்றுக் கொண்டே போகிறது. இன்டர்நெட் வாசிகள், தொழிலதிபர்கள் வெளியிடும் கணிப்புகள் அரசாங்கம் கூறுவதை விட அதிக உயிரிழப்புகளாகக் குறிப்பிடப்படுகிறது. தடுப்பு அல்லது நிவாரண மருந்து கிடைக்காமல் நாள்தோறும் உயிரிழப்புகளை சந்திக்கும் சீன மக்களை காப்பாற்றும் மீட்பராக எந்த போதி தருமர் வரப்போகிறாரோ? உண்மை நிலவரம் குறித்து சீனா தனது மவுனம் கலைக்குமா? போன்ற கேள்விகள் மட்டும் நீண்டு கொண்டே போகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்தக் கட்டுரையில் வெளியாகி இருக்கும் தகவல்கள் யுவர் ஸ்டோரி தமிழின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.