சுத்த காற்றின் விலை ரூ.2500 - தாய்லாந்து பண்ணை விவசாயியின் புதிய யுக்தி!
காற்று மாசு மக்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதை சரியாக யோசித்த தாய்லாந்து நபர் ஒருவர், தனது பண்ணையில் கிடைக்கக்கூடிய சுத்தமான காற்றிற்கு விலை நிர்ணயம் செய்து அதனை புதிய விற்பனையாக மாற்றியுள்ளார்.
சுத்தமான காற்றின் விலை ரூ.2500; தாய்லாந்தைச் சேர்ந்த பண்ணை விவசாயியின் புதிய யுக்தி!
காற்று மாசு மக்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதை சரியாக யோசித்த தாய்லாந்து நபர் ஒருவர், தனது பண்ணையில் கிடைக்கக்கூடிய சுத்தமான காற்றிற்கு விலை நிர்ணயம் செய்து அதனை புதிய விற்பனையாக மாற்றியுள்ளார்.
உலக அளவில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து, பெருகி வரும் நகரமயாமக்கல், சாலைகள் விரிவாக்கம் போன்ற காரணங்களால கணக்கில் அடங்காத மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதோடு, மறுபுறம் காற்று மாசு அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன. இதனால் தாய்லாந்து போன்ற வனப்பகுதி அதிகமுள்ள நாட்டில் கூட காற்று மாசு அதிகரித்து வருகிறது. எனவே தாய்லாந்து அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர்,
’தூய காற்று வேண்டுமா என் பண்ணையில் வந்து தங்கிக்கொள்ளுங்கள் ஒருநாளைக்கு ரூ.2500 மட்டுமே கட்டணம்,’ என வித்தியாசமான முறையில் கல்லா கட்டி வருவது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காற்றின் விலை ரூ.2500:
தாய்லாந்தை சேர்ந்த டசிட் கச்சாய் என்ற 52 வயது விவசாயி தனது பண்ணையில் கிடைக்கூடிய சுத்தமான காற்றை அங்கு வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
முதல் ஒரு மணி நேரத்திற்கு காற்றை அவர் 2500 ரூபாய்க்கு (அதாவது 1000 தாய் பாட் (Thai Bhat) ) விற்கிறார். அங்கு தங்கும் இடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
அவரது பண்ணை பு லென் கா தேசிய பூங்காவின்(Phu Laen Kha National Park) அருகில் அமைந்துள்ளது. காடுகள், மலை மற்றும் நீரோடைக்கு அருகே அமைந்துள்ளது இவரது அழகான பண்ணை சுத்தமான காற்றிற்கு பெயர் பெற்றது. இங்கு கச்சாய் தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் ஆசியன் லைஃப் என்ற சுற்றுச்சூழல் குழுவையும் நடத்தி வருகிறார்.
“ஏசியன் லைஃப் அமைப்பின் செயலாளர் என்ற முறையில், சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும், காற்றின் தரத்தை மேம்படுத்த உதவவும் உறுதியாக இருக்கிறேன். "ஃபு லென் கா பள்ளத்தாக்கின் மையத்தில் உள்ள எனது பண்ணையில் காற்றின் தரம் மிகவும் சுத்தமாக இருப்பதால், ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 பாட் விலையில் விற்க முடியும் என்று நான் நம்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
கச்சாய் தனது பண்ணையில் காற்று தூய்மையாகவும் சுத்தமாகவும் இருப்பதாகக் கூறுகிறார். குறிப்பாக நகரத்தின் மாசு மற்றும் புகை மூட்டத்திலிருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இந்த இடம் சரியான தேர்வாகும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இலவசமாக தங்கலாம். ஆனால் அவர்கள் அங்கு வருவதற்கு முன்பே ஒரு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
"இயற்கையை அழிப்பதை உங்களால் நிறுத்த முடியாவிட்டால் இங்கு வரவேண்டாம்," என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாய்லாந்தில் காற்று மாசு:
கச்சாய் ஒரு காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் ஆர்வலர் என்பதால், காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக பணியாற்றுகிறார். சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார கவலையாக மாறியுள்ளது, காற்றில் உள்ள ஆபத்தான மாசுபாடுகளின் அளவு அதிகரித்து மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தாய்லாந்தில் காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்கள் தொழில்துறை உமிழ்வுகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் விளை நிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது போன்றவையாகும். இந்த மாசுபடுத்திகள் சுவாச பிரச்சனைகள் முதல் புற்றுநோய் வரை பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
தாய்லாந்தில் காற்றில் உள்ள மிகவும் ஆபத்தான மாசுபாடுகளில் ஒன்று துகள்கள் ஆகும், இது நுரையீரலில் உள்ளிழுக்கப்படும் மற்றும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் சிறிய துகள்களால் ஆனது. துகள்களின் நீண்ட கால வெளிப்பாடு இதய நோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் காற்று மாசுபாட்டின் சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தொழில்துறை உமிழ்வுகள் மீதான கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் தூய்மையான போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.