Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

வீட்டில் இருந்து பணிபுரியும் நீங்கள் ஃபிட்டாக இருக்க சில டிப்ஸ் இதோ!

வீட்டிலிருந்தே பணிபுரியும் நம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் சில குறிப்புகளை வழங்குகிறார், ஃபிட்னஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா கிருஷ்ணஸ்வாமி.

வீட்டில் இருந்து பணிபுரியும் நீங்கள் ஃபிட்டாக இருக்க சில டிப்ஸ் இதோ!

Friday April 24, 2020 , 2 min Read

இன்று லாக்டவுன் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் வீட்டிலிருந்து பணிபுரியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய நகரங்களில் இந்த முறை பெரும்பாலானோருக்கு பரிச்சயமில்லாத ஒன்று. இதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டமைப்பு சார்ந்தும் பல்வேறு சவால்களை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.


இதுதவிர பணியையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமாளிப்பதும் சமன்படுத்துவதும் நம் முன்னே இருக்கும் முக்கிய சவாலாகும். வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழலில் நம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் சில குறிப்புகளை வழங்கியுள்ளார் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆலோசகரான ஷீலா கிருஷ்ணஸ்வாமி.

fitness

வீடுதான் ஜிம்!

வீட்டில் இருந்து பணிபுரியும் சூழலில் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறான உடையை அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் அணியும் உடை காரணமாக உடற்பயிற்சி செய்வதில் சமரசம் செய்துகொள்ளவேண்டாம், மளிகைப் பொருட்களை எடுத்து வைக்கும்போதும் ஃபிரிட்ஜில் பொருட்களை எடுத்து வைக்கும்போதும் அவற்றைக் கொண்டு தசைகளுக்கு பயிற்சியளிக்கலாம். அந்த பொருட்களை தலைக்கு மேல் தூக்கி கைகளை கீழே இறக்கலாம். இரண்டு கைகளிலும் இதேபோன்று செய்வதால் தசைகளுக்கு சமமாக பயிற்சியளிக்கப்படும்.

பணிகளுக்கிடையே அவ்வப்போது சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். லேப்டாப்பில் பணிபுரியும்போது தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம்.

திரைத்தொடர்கள் அல்லது திரைப்படங்கள் பார்க்கும்போது சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு கைகளையும் கால்களையும் அகல நீட்டி குதிப்பது, புஷ் அப் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம். உடலின் நிலைத்தன்மை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி பந்து வாங்கிக்கொள்ளலாம். சோஃபாவில் உட்கார்ந்துகொள்வதற்கு பதிலாக இந்த பந்தில் உட்காரலாம். மொபைல் பயன்படுத்தும்போது நடந்தவாறே பயன்படுத்துவதால் கூடுதல் கலோரியைக் குறைக்கமுடியும்.

பொழுதுபோக்கு

உங்களுக்கு நடனமாட பிடிக்கும் என்றால் உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டவாறே நடனமாடுங்கள். நடனமாடுவது உடலுக்கு நல்லது. சிறந்த கார்டியோவாஸ்குலர் பயிற்சி.

இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும். அடுத்ததாக வீட்டை சுத்தப்படுத்தலாம். பிடித்த பாட்டைக் கேட்டவாறே இந்தப் பணியை மேற்கொள்ளலாம். ஒரு பாட்டு முடிவதற்குள் ஒரு சிறு பணியை முடிப்பது என்பது போன்ற இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக பிரித்து திட்டமிட்டுக் கொள்ளலாம்.

யோகா செய்வதும் உங்களது உடல் மற்றும் மன நலனிற்கு சிறந்தது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் யோகா மேட் மட்டுமே. அதேபோல் இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம். வயலின் வாசிப்பதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 175 கலோரிகள் எரிக்கப்படும். வீடியோ கேம் விளையாடலாம். ஒவ்வொரு முறை விளையாட்டில் தோல்வியடையும்போதும் குறைந்தபட்சம் 10 புஷ் அப் செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளலாம்.

ஸ்நாக்ஸ்

வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடத் தோன்றும். இந்த நேரத்தில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் வகைகளைத் தவிர்த்துவிட்டு உடலுக்கு சத்தான உணவு வகையைத் தேர்வுசெய்ய வேண்டும். பாதாம் எடுத்துக்கொள்ளலாம். இது வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும் என்பதால் உணவு இடைவெளியில் இதை சாப்பிடலாம்.

உடல் எடையை முறையாக நிர்வகிப்பதில் பாதாம் பங்களிப்பது குறித்து லீட்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அதிகக் கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும் என்று ஆழ்மனதில் தோன்றும் விருப்பத்தை பாதாம் குறைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே உடல் எடையை முறையாகக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு பாதாம் சரியான தேர்வாக இருக்கும்.
sheel krishnaswamy

ஃபிட்னஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா கிருஷ்ணஸ்வாமி

ஆரோக்கியத்தை கண்காணிக்கவும்

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ளலாம். அல்லது ஸ்மார்ட்போன் செயலியின் உதவியுடன் பதிவு செய்துகொள்ளலாம். இரவு சாப்பிட்டு முடித்த பிறகு நீங்கள் நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்த உணவின் கலோரிகளைக் கணக்கிடலாம். அந்த கலோரிகளை அடிப்படையாகக் கொண்டு தேவைபட்டால் உங்களது டயட்டை மாற்றியமைக்கலாம்.


இதற்கென பிரத்யேகமாக பல ஆப்கள் உங்கள் போனில் உள்ளது. அல்லது டைரியில் குறிப்பெடுத்துக்கொள்ளலாம். உங்களது உணவு வழக்கத்தைப் புரிந்துகொள்ள இது நிச்சயம் உதவும். எப்போது, என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை குறித்துக்கொள்ளுங்கள். மறந்துபோக வாய்ப்புள்ளது என்பதால் அவ்வப்போது குறித்துக்கொள்வது சிறந்தது.


கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா