‘கொரோனா’ பெயரில் தீங்கு விளைவிக்கும் இந்த 14 சைட்டுகளை தவிர்த்திடுங்கள்!
எச்சரிக்கை: கொரோனா பெயரில் பல புதிய வெப்சைட்டுகள் மற்றும் மெயில்கள் வருகின்றன. அவை நம் தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது. ஜாக்கிரதை மக்களே...
இன்று உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தொழிலாளி வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள ஒரே வார்த்தை ‘கொரோனா’.
எந்தெந்த நாடுகளை நோய்தாக்கம் சென்றடைந்துள்ளது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்? எத்தனை பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன? சோதனை முடிவுகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் என்னென்ன? பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் எவ்வாறு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது? கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது? கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? இப்படி கொரோனா தொடர்பான கேள்விகள் நம் அனைவரின் மனதிலும் நீண்டுகொண்டே போகிறது.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களும் விரிவடைந்துகொண்டே போகிறது. மக்கள் இந்த நோய்தாக்கம் குறித்து பீதியடைந்துள்ளதால் இவற்றிற்கு விடை தேட முற்படுகின்றனர். இது மனித இயல்பே. ஆனால் இந்த செயல்முறையில் நாம் சற்றே கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
இன்று எந்த ஒரு இணையதளத்தை பார்வையிட்டாலும் கொரோனா தொடர்பான இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் தலைப்புகளைப் பார்க்கமுடிகிறது. அதேசமயம் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியது.
கொரோனா வைரஸ் தொடர்புடைய தலைப்புகள் அதிகம் பார்வையிடப்படுவதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலரது தனிப்பட்ட தகவல்கள் கைப்பற்றப்படும் ஆபத்து உள்ளது. கொரோனா பெயரில் பல ஸ்பேம் மெசேஜ்கள், மெயில்கள் அனுப்பப்படுகிறது. அவற்றை திறந்து படித்தால் நமது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கை தேவை.
கீழே பட்டியலிடப்பட்டுள்ள கொரோனா தொடர்பான இணையதளங்கள் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்புள்ளதால் அவற்றை அணுகவேண்டாம்.
1. coronavirusstatus.space
2. coronavirus-map.com
3. blogcoronacl.canalcero.digital
4. coronavirus.zone
5. coronavirus-realtime.com
6. coronavirus.app
7. bgvfr.coronavirusaware.xyz
8. coronavirusaware.xyz
9. coronavirus.healthcare
10. survivecoronavirus.org
11. vaccine-coronavirus.com
12. coronavirus.cc
13. bestcoronavirusprotect.tk
14. coronavirusupdate.tk
கொரோனா வைரஸ் தொடர்பான முழுமையான, நம்பகமான விவரங்களை உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
இதுதவிர இந்தியாவில் கொரோனா தொடர்பான தகவல்களை +91-11-23978046 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். அல்லது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையத்தை அணுகலாம். அல்லது [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தெரிந்துகொள்ளலாம்.