Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘வீட்டில் இருந்து பணி... அய்யோ கொடுமை...’ WFH பற்றி பதிவிட்ட பிரபலங்கள்!

சமீபத்தில் சச்சின் பன்சல் WFH sucks என்று ட்வீட்டி இருந்தார். அவர் மட்டும் அல்ல மேலும் பலரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என பார்ப்போம்.

‘வீட்டில் இருந்து பணி... அய்யோ கொடுமை...’ WFH பற்றி பதிவிட்ட பிரபலங்கள்!

Friday March 20, 2020 , 3 min Read

முதலில் WFH  என்றால் என்ன என்று கூறிவிடுகிறேன். ‘Work from home’ என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே இந்த மூன்றே எழுத்து மந்திரம். உலகம் முழுவதும் ஹாஷ் டேக் ஆக மாறி பலரும் இதை பயன்படுத்தத் துவங்கினர். அவர்கள் மனக் குமுறல்களை அதன் மூலம் வெளிப்படுத்தினர்.


அது மட்டுமல்ல, WFH setup என்ற ஹாஷ்டேக்கும் பிரபலமாக பகிரப்பட்டது. தங்கள் வீடுகளில் சவுகர்யமாக அமர்ந்து வேலை பார்க்க தாங்கள் எவ்வளவு சிரமப்படுகிறோம் எனவும் பல மக்கள் பகிர்ந்தனர்.

wfh

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவரவர் வீட்டில் இருந்து வேலைகளை செய்யவும் என பல நிறுவனங்கள் கூறியுள்ளன. இதன் மூலம் எவ்வளவு தொழில்நுட்பம் பல துறைகளில் முன்னேறியுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். 

பல மாதங்களுக்கு முன்பாக ஒரு நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு கொடுக்கக் கூடிய பெரும் வசதி என்பது அவர்கள் தேவைக்கு ஏற்ப வேலை செய்ய அனுமதிப்பதே என்று பில் கேட்ஸ் கூறி இருந்தார். 

இதை ஹார்வர்ட் பல்கலையில் நடந்த ஒரு ஆய்வும் வழிமொழிகிறது. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கிருந்தும், எந்த நேரத்திலும் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு நிறுவனத்திற்கு மிகவும் விசுவாசமான, குறைந்த சம்பளமாக இருந்தாலும் அதிக வேலை செய்யும் பணியாளர்கள் கிடைக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. 


ஆனால் இப்படிப்பட்ட வேலை செய்யும் கலாச்சாரத்திற்கு எதிரானவராக இருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.  நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் 

"புதிய சிந்தனைகள் என்பது தீடிர் என நிகழும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களில் இருந்து கிடைப்பவை. ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள், அவர் என்ன செய்கிறார் எனக் கேட்பீர்கள். அது உங்களை ‘வாவ்’ என கூறவைக்கும். பின்னர் அதைப் பற்றிய தங்களது தரப்பு யோசனைகள் உங்கள் மனதில் ஓடத்துவங்கும்," என்று கூறியுள்ளார்.

சரி இந்த வீட்டில் இருந்து பணி செய்வது குறித்தி இந்திய தொழில்முனைவர்கள் கருத்துகளைக் காண்போம்


கிரெட்  நிறுவனத்தின் குணால் ஷா,

“WFHல் மீட்டிங்குகள் ஆன்லைனில் சீக்கிரம் முடிவடைவதால் வேலை செய்ய பல மணி நேரம் கிடைக்கின்றது. இந்த சோசியல் டிஸ்டன்சிங்’ என்பது நம்மை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.  இதனால் அதிக வேலைகளை செய்யமுடிகிறது," என்கிறார்.


ஸிரோதா நிறுவனர் நிதின் காமத் வீட்டில் இருந்து வேலை செய்வது மிகவும் சிரமம் என கதறுகிறார்.

“வீட்டில் இருந்து வேலை செய்யும் என் நண்பர்கள் பலர் சொகுசாக, ஜாலியாக இருப்பார்கள் என எண்ணி இருந்தேன். அயோ இது மிகவும் கஷ்டம், நான் அதிகமாக வேலை செய்கிறேன், சாப்பிடுகிறேன், தூக்கமே இல்லை, உடற்பயிற்சியும், இது மன அழுத்தத்தை தருகிறது. மீண்டும் வேலைக்கு செல்ல துடிக்கிறேன்...” என்று பதிவிட்டார்.


ஆனால் ஃபிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் அதற்கு நேர்மாறாக, “WFH சக்ஸ் (கொடுமை) ...” என்கிறார்.


சச்சின் மட்டுமல்ல ஒரு குழுவாக பணிபுரிவது போல வேறு எதுவும் உங்களை வேலை செய்ய உத்வேகம் கொடுக்காது. மேலும் எல்லா வேலைகளும் வீட்டில் இருந்து செய்யக்கூடியவை அல்ல என்று பலர் கூறியுள்ளனர். 


இன்னர் செஃப் நிறுவனர் ராஜேஷ் சாஹானி, எவ்வாறு வீட்டில் இருந்து வேலை செய்வதை எளிமையாக்குவது என கூறியுள்ளார்.

"10 நிமிட நடை, 40 நிமிட வேலை, பின்னர் 10 நிமிட சூர்ய நமஸ்கார், இவ்வாறு 8 மணிநேரம் அயராது உழைக்கலாம்,” என்கிறார். 

COVID 19 காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வதை பல நிறுவனர்கள் ஆதரிக்கின்றனர்.  அப்கிராட் துணை நிறுவனர் ரோனி ஸ்க்ருவாலா கூறுவது,

“இதில் அதிக வேலை நடக்கும் மற்றும் பணியாளர்கள் இடையே கருத்து மாற்றம் மேம்படும்,” என்கிறார்.

சென்னையை சார்ந்த விஜய் ஆனந்த் தன் கருத்துக்களை பதிவிடுகையில்,

“திறமைக்கு இடம் என்பது பொருட்டு அல்ல. உலகம் அதனை இப்போது உணரும்,” என்கிறார்.

உலகம் முழுவது COVID 19 காரணமாக 7000த்துக்கும் அதிகமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இத்தாலி திடீர் என தங்கள் நாட்டில் இறப்பவர்கள் என்ணிக்கை  அதிகமாகியுள்ளதாகக் கூறுகிறது.


175000 பேர் இதுவரை இந்த தொற்று நோய் காரணமாக பாதிக்கப்  பட்டுள்ளனர். நமது நாட்டில் சுகாதார அமைச்சகத்தின் கணக்குப் படி பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 197 மட்டுமே. 


இதனால் தான் பல நாட்டின் அரசுகள் தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்துகின்றன. 

இதன் மூலம் நல்ல மாற்றம் நிகழும் என நம்புவோம். 


ஆங்கில கட்டுரையாளர் : ராஷி வர்ஷனே | தமிழில்: கெளதம் தவமணி