நிதி வெற்றி எப்போது சாத்தியம்? - குணால் ஷாவின் வியத்தகு ரகசியம்!
‘தனக்காக சுயநல நோக்கத்துடன் சம்பாதிப்பவர்களை விட பிறரைப் பணம் சம்பாதிக்க வைப்பதை நேசிப்பவன் கூடுதல் சம்பாத்தியம் பெறுகிறான்’ - இது குணால் ஷாவின் மேற்கோள் மட்டுமல்ல, வெற்றி தரும் தாரக மந்திரமும் கூட.
‘தனக்காக சுயநல நோக்கத்துடன் சம்பாதிப்பவர்களை விட பிறரைப் பணம் சம்பாதிக்க வைப்பதை நேசிப்பவன் கூடுதல் சம்பாத்தியம் பெறுகிறான்’ - இது குணால் ஷாவின் மேற்கோள் மட்டுமல்ல, வெற்றி தரும் தாரக மந்திரமும் கூட.
இந்திய ஸ்டார்ட்-அப் பொருளாதார அமைப்பில் குணால் ஷா என்ற பெயர் பிரசித்தமானது. நிதித் துறையில் வெற்றி அடைய வேண்டும் எனில் குணால் ஷாவின் மேற்கண்ட அறிவுரையை கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்.
ஒரு ஏஞ்சல் முதலீட்டாளராகவும்,
-இன் நிறுவனராகவும், ‘ஃப்ரீசார்ஜ்’ தளத்துக்குப் பின்னால் உள்ள மூளையாகவும் கருதப்படும் குணால் ஷா வணிக உலகின் உயர்வு மற்றும் தாழ்வுகளை தனக்கேயுரிய புத்திசாலித்தனத்துடன் வழிநடத்தி வெற்றி கண்டவர். இவரது நிதி வெற்றி எளிமையானது, ஆனால் ஆழமானது.தனக்காக சம்பாதிப்பவரை விட பிறரைச் சம்பாதிக்க வைப்பவர்தான் அதிகம் சம்பாதிக்கிறார் என்பது குணால் ஷாவின் வெற்றித் தாரக மந்திரம்.

CRED founder Kunal Shah
முதல் பார்வைக்கு இவரது இந்த அறிவுரை எதிர்மறையாகத் தொனிக்கலாம். ஏனெனில், தொழில்முனைவோரின் பயணம் என்பது என்ன? சொந்த முதலீட்டில் லாபம் சம்பாதிப்பதுதானே. அப்படியிருக்கையில் பிறரைச் சம்பாதிக்க வைப்பவன் தனக்காகச் சம்பாதிப்பவனை விட அதிகம் சம்பாதிக்கிறான் என்ற இவரது தத்துவம் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற கேள்வி பிறப்பது இயல்பு.
குணால் ஷா இந்த மரபான பார்வையைத்தான் நிராகரிக்கிறார். மற்றவர்களுக்காக சொத்துகளை சம்பாதித்துக் கொடுப்பதே தனக்கான நீண்ட கால வெற்றியைக் கொடுக்கும் என்பதுதான் குணால் ஷாவின் பார்வை.
அதாவது, உங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர்களுக்காக பணம் ஈட்டுவது என்ற வகையில் இவர்களது நம்பிக்கையையும் மதிப்பையும் பெறுவது நம் சொந்த செல்வச் சேர்ப்புக்கு வழிவகுக்கும் என்கிறார் குணால்.
நம்பிக்கை, மதிப்பை உருவாக்குதல்!
நம்பிக்கை மற்றும் உண்மையான மதிப்பை பெற்றுத் தருவதன் மூலம் உறவுகளைக் கட்டமைப்பது என்பது குணால் ஷாவின் பாதை. ஷாவின் மேற்கூறிய மேற்கோளின் சாராம்சமும் இதுவே.
வர்த்தக உலகில் ஒரு தொழில்முனைவோர் அல்லது ஒரு தொழிலதிபர் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்களை நம்பி முதலீடு செய்பவர்களின் நலன்களுக்காகவே செயல்பட்டால், அவர்களின் செல்வ வளங்களைப் பெருக்க வழிவகை செய்தால் அந்தத் தொழிலதிபருடன், தொழில்முனைவோருடன் மக்கள் பிரிக்க முடியா நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
இத்தகைய உறவுப் பாலம், உறவுக் கட்டுமானம் உடனடியாக லாபங்களைப் பெற்றுத் தராது. இது ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. ஒரு நீண்ட கால விசுவாசத்தை உருவாக்கி பிணைக்கிறது. இதனால் நீடித்த வருவாய் கிட்டுகிறது.

குணால் ஷாவின் வெற்றி:
நிதியளவில் வெற்றி பெறுவதில் ஷாவின் அணுகுமுறை தனித்துவமானது. CRED மூலம் குணால் ஒரு தளத்தை உருவாக்கினார். இது பயனாளர்களின் நல்ல, நேர்மையான நிதி நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கிறது. மேலும், அவர்கள் பணத்தைச் சேமிக்க உதவுகிறது.
அதேபோல், ஃப்ரீசார்ஜ் என்னும் தளம் மொபைல் ரீ-சார்ஜ் மற்றும் பில்களுக்கான பணம் செலுத்துதல் போன்ற பயனாளர்களின் அன்றாட வேலையை எளிதில் செய்து கொடுக்கின்றது.
இந்த இரண்டு தொழில்களிலுமே குணால் ஷா வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை உருவாக்குவதில் ஷா கவனம் செலுத்தினார். இதுதான் இவரது வர்த்தகத்தை கொழுந்து விட்டு வளரச் செய்வதற்கான இடுபொருள்.
மற்றவர்களுக்காக மற்றவர்களைப் பணம் சம்பாதிக்க வைப்பது என்பது பல காரணங்களுக்காக வெற்றியடையும். இது புதுமையைப் புகுத்த ஊக்குவிக்கும். வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தித் தருவதில் புதிய வழிகளை நாடியபடியே இருக்கும். நல்லெண்ணத்தை வளர்த்தெடுக்கும்.
இன்றைய போட்டிச் சந்தையில் ‘குட்வில்’ என்பது மிக முக்கியமானது. மேலும், இது தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களைத் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ள தலைவர்களாக, வழிகாட்டிகளாக அவர்களை நிலைநிறுத்திக் கொள்ள பெரிய அளவில் உதவுகிறது.
குணால் ஷாவின் இந்த புதிய அணுகுமுறை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்த நம் எண்ணப்போக்குகளையும் மாற்றியமைக்க வல்லது. மற்றவர்களின் நிதி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி அவர்களது அசையா நம்பிக்கையை முதலீடாக பெற்று விட்டால் நமது பொருளாதார வளமும் உயர்வடையும்.
நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் செல்வங்கள், நிதியாதாரங்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வழிமுறைகளைக் காட்டி அவர்களை வளப்படுத்தி தானும் வளம்பெறும் புதிய வர்த்தக ஒளியைப் பாய்ச்சியதுதான் குணால் ஷாவின் வெற்றிக்குக் காரணம்.

தோல்வி முதல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது வரை: ஊக்கம் அளிக்கும் எலன் மஸ்க் பொன்மொழிகள்!