Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வாங்கியவுடன் பழுதடைந்த கார்: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க BMW நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உச்ச நீதிமன்றம் தெலுங்கானா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து ரூ. 50 லட்சம் பணத்தைப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஆகஸ்ட் 10, 2024 ஆம் தேதிக்குள் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

வாங்கியவுடன் பழுதடைந்த கார்: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க BMW நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Monday July 15, 2024 , 2 min Read

2009-ம் ஆண்டு பழுதடைந்த காரை சப்ளை செய்ததாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிவில் இந்த வழக்கில் இதற்கு முன் தெலுங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய வாகனத்தைக் கொடுக்க உத்தரவிட்டிருந்தது.

இப்போது உச்ச நீதிமன்றம் தெலுங்கானா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ரூ. 50 லட்சம் பணத்தைப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஆகஸ்ட் 10, 2024 ஆம் தேதிக்குள் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Supreme Court

2012 இல், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, பழைய வாகனத்திற்குப் பதில் புதிய வாகனத்தை மாற்றிக்கொடுக்க முன்வந்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. அப்போது அதை புகார் கொடுத்த வாடிக்கையாளர் ஏற்கவில்லை என்றும் இன்றுவரை அந்த வாகனத்தைப் பயன்படுத்தி இருந்தால், அது தேய்மானம் அடைந்திருக்கும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது

புகார்தாரர் செப்டம்பர் 25, 2009 அன்று BMW 7 வரிசை வாகனத்தை வாங்கியிருந்தார், மேலும் செப்டம்பர் 29, 2009 அன்று கடுமையான குறைபாடு கண்டறியப்பட்டு, கார் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

நவம்பர் 13, 2009 அன்று கார் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 16, 2009 அன்று, இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 418 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களுக்காக புகார் பதிவு செய்யப்பட்டது, இது எஃப்ஐஆர் பதிவு செய்ய வழிவகுத்தது. தயாரிப்பாளர், நிர்வாக இயக்குனர் மற்றும் பிற இயக்குனர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

BMW

இந்த வழக்கில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்ச நீதிமன்ற அமர்வு கண்டித்தது, அதாவது, முதல் தகவல் புகார் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ‘ஏமாற்று வேலை’ என்ற புகார் நிரூபிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது தவறு என்றும் மேலும் எஃப். ஐ.ஆர்.இல் பதிவு செய்யப்பட்டது நிரூபிக்கப்படாதது என்று கூறிவிட்டு பிறகு புதிய காரை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததற்கு நியாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதாவது, கார் உற்பத்தியாளர்கள் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 482-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரியது. ஆனால், உற்பத்தியாளர்கள் அப்படிக் கோருவதற்கு நியாயம் இருக்கிறதா என்பதையல்லவா உயர் நீதிமன்றம் ஆராய்ந்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து, ஆந்திர பிரதேச அரசும் புகார்தாரரான ஜிவிஆர் இந்தியா புராஜெக்ட்சும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனரே தவிர உற்பத்தியாளர்கள் அல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம் புகார்தாரர் புதிய வாகனத்திற்கான விருப்பம் இல்லை என்றும் மாறாக பழுதடைந்த காரின் விலைக்கு ஏற்ற தொகையையே வட்டியுடன் இழப்பீடாக பெற விரும்புவதாகத் தெரிவித்தார் என்று கூறி உச்ச நீதிமன்றம் ரூ.50 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.