உங்கள் டேட்டா உங்கள் உரிமை...!
சமீபத்தில் நடந்த முகநூல் தகவல் கையாடல் உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முகநூலில் உள்ள தகவல்களை தவறாக மற்றும் தெரியாமல் பயன்படுத்தப்பட்டது உண்மை தான் என்று ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணையதள உலகில் தகவல்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்று என்றாலும், ஒருவருடைய எந்த தகவல் பயன்படுத்தப்படுகின்றது என்பதை தெரிந்துகொள்வது அவரது உரிமை ஆகும்.
எந்த தகவல்களை எல்லாம் பிறர் பயன்படுத்தப்படுகின்றனர், அதில் நாம் எதை தடுக்க முடியாது என்பதை விளக்குவது தான் இந்த கட்டுரை.
கூகிளின் Myactivity
இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் தேடல், கூகிள் ஆகும். பெரும்பாலானவர்கள் கூகிள் நிறுவனத்தின் பல சேவைகளை பயன்படுத்துகின்றனர். கூகிள் மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும், கூகிள் நிறுவனம் ஒரு அப்ளிகேஷனில் பதிவு செய்கின்றது. அது தான் ’My activity’. கூகிள் கணக்கில் நுழைந்து, பின்னர் இந்த முகவரியை (https://myactivity.google.com/) கிளிக் செய்தால், உங்கள் கூகிள் வரலாறு முழுவதும் வரும். எந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும், வேண்டாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். Activity control மூலம் நீங்கள் எந்த எந்த தகவல்களை பதிவு செய்ய விரும்புகிறீர்கள் என்று தேர்வு செய்துகொள்ளலாம்.
Facebook data
முகநூலில் நீங்கள் பகிரும் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக் நிறுவனம் பதிவு செய்து கொள்ளும். முகநூல் நிறுவனம் உங்களின் எந்த எந்த தகவல்களை பதிவு செய்துள்ளார்கள் என்பதை நீங்க தெரிந்து கொள்ளலாம். உங்கள் கணக்குக்குச் சென்று, General settings இல் உங்களின் முகநூல் டேட்டாவை பதிவு இரக்கம் செய்துகொள்ளலாம். உங்களின் தகவல்களை, உங்களின் மின் அஞ்சலுக்கு (Registered email) ஃபேஸ்புக் நிறுவனம் அனுப்பி வைக்கும். அதன் மூலமாக உங்கள் கணக்கின் மொத்த கணக்கு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
Do Not Disturb (DND)
பலருக்கும், பல வங்கிகளில் இருந்து அடிக்கடி Credit card மற்றும் கடன் தொடர்பாக அழைப்புகள் வரும். இதற்குக் காரணம், நாம் பயன்படுத்தும் sim card நிறுவனங்கள் தான். நம் தகவல்களை ஒரு நல்ல தொகைக்கு விற்றுவிடுவார்கள். இதை தவிர்க்க வேண்டும் என்றால், Do not disturb (DND) என்பதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மேலே கூறியுள்ள வழிகள் மூலம் உங்களின் தகவல்களை ஒரு அளவிற்கு பாதுகாத்துக்கொள்ள முடியும். முற்றிலுமாக தகவல்களை பாதுகாப்பது என்பது முடியாத ஒன்று என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு புரிந்து கொண்டால், இணையதள வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கட்டுரையாளர்: பிரவீன் குமார், ஒரு மென்பொறியாளர் மற்றும் பேச்சாளர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது.