தொற்று நோய் அபாயம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

தொற்று நோய் அபாயம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

Tuesday December 08, 2015,

3 min Read

ஹரி பாலாஜி, வி.ஆர். தேசிய ஆலோசகர், பேரிடர் மேலாண்மை கூறும் வழிமுறைகள்:


imageஉடனடி நடவடிக்கைகள்

குளோரின் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தல்

 • வெள்ளத்தால் ஏற்படும் தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய் அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல் மிகவும் அவசியம்.
 • குடிநீரில் கிருமிகளை நீக்க குளோரின் பெருமளவில் பயன்படுகிறது. இது தண்ணீரால் பரவும் நோய்களுக்குக் காரணமான கிருமிகளை (க்ரிப்டோஸ்போர்டியம் - Cryptosporidium parvum oocysts, மைக்கோ பாக்டீரியா - Mycobacteria species போன்ற கிருமிகளைத் தவிர்த்து) அழிக்கக் கூடியது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சில மில்லி கிராம் குளோரினைக் கலந்தால் 30 நிமிடங்களில், அந்தத் தண்ணீர் நோய்களை அழிக்கக் கூடியதாக மாறுகிறது. குடல் நோய்களுக்குக் காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை 99.99 சதவீதம் வரையில் அழிக்கிறது.
 • பொதுவாக தண்ணீரை சுத்திகரிக்க நீர்ம வடிவிலான சோடியம் ஹைபோகுளோரைட், திட வடிவிலான கால்சியம் ஹைபோகுளோரைட் மற்றும் பிளீச்சிங் பவுடர் (எலுமிச்சை குளோரைட், கால்சியம் ஹைட்ராக்சைடு கலவை, கால்சியம் குளோரைட் மற்றும் கால்சியம் ஹைபோகுளோரைட்) போன்றவை பயன்படுகின்றன.
 • தண்ணீரில் உள்ள பாக்டீரியா போன்ற உயிரிகளின் அளவுக்குத் தகுந்தாற்போல் குளோரின் தேவைப்படுகிறது. இது தவிர சூழலுக்குத் தகுந்தாற்போலும் தேவைப்படும் குளோரின் அளவு மாறுபடும். 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் எஞ்சியுள்ள குளோரின் லிட்டருக்கு 0.2ல் இருந்து 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டும். இது ஹெபடைடிஸ் ஏ எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது.
 • பெரிய அளவில் நோய் செயலிழப்புக்கு ஹெபடைடிஸ் ஏ தடுப்பு மருந்தைப் பயன்படுத்தல் பரிந்துரைக்கப்படுவதில்லை. கழிவு நீர் சுத்திகரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் நோய் தொற்று அபாயம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
 • ஹெபடைடிஸ் ஏ திடீரென்று பெருமளவு பரவும் சூழலில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது. அதே சமயத்தில் இம்யூனோகுளோபுலின்ஸ் எனப்படும் தடுப்பு முறை பரிந்துரைக்கப்படுவதில்லை. உடலில் உள்ள ஆன்டி எச்ஏவி ஐஜிம் (anti-HAV IgM) மூலம் ஹெபடைடிஸ் ஏ கிருமியின் தீவிரம் கண்டறியப்படுகிறது.

மலேரியா தடுப்பு

கொசு ஒழிப்பு: வெள்ளம் வந்ததும் தண்ணீரில் கொசுக்கள் பெருகி விடுவதில்லை. எனவே கொசு தடுப்புக்கு நமக்கு போதுமான அவகாசம் இருக்கும். கொசு மருந்து அடித்தல், ஐடிஎன்எஸ் விநியோகித்தல் போன்றவை நன்கு அறியப்பட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகள். இது போன்ற நடவடிக்கைகள் கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

ஆரம்ப நிலையில் கண்டறிதல்: நோயாளிகளின் வாராந்திர கணக்கீடு அவசியம், சோதனைக் கூட அளவிலான நோய் கண்டறிதல் அவசியம் (ஒரே ஒரு சதவீதம்தான் மலேரியா இருப்பதாக கண்டறியப்பட்டாலும்) உடனடியாக மலேரியா பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இலவச மருத்துவம்: பால்சிப்பாரம் மலேசியா பரவுகிறது எனக் கண்டறியும் பட்சத்தில் ஆர்ட்டிமிசினின் மருந்துகள் அடங்கிய சிகிச்சையைத் தொடங்குதல் அவசியம். உடனடியாக காய்ச்சலைக் கண்டறிதல் மற்றும் மருத்துவ சேவைகளின் மூலம் உட்கிடைப் பகுதிகளில் நோய் இறப்புகளைத் தவிர்க்கலாம்.

சுகாதாரக் கல்வி

நல்ல சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவித்தல். பாதுகாப்பான உணவைத் தயார் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கொதிக்கவைத்த அல்லது குளோரின் கலந்த குடிநீரைப் பயன்படுத்தல். மலேரியாவை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை செய்தல் அவசியம். காய்ச்சல் வந்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சையை உறுதி செய்தல் வேண்டும்.

சடலங்களைக் கையாளுதல்

பெரிய அளவில் மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் நோய் பாதித்த உடலைக் கண்டறிய முடியாது போய்விடலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் கூட்டாக உடல்களைப் புதைத்தல் உசிதம் எனக் கருதப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை உடனடியாக புதைக்க அல்லது எரித்து விட வேண்டும் எனவும் இல்லையானால் நோய் பரவும் எனவும் நம்பப் படுகிறது. இது தவறானது. சமூகச் சடங்குகளைப் புறந்தள்ளி விட்டு, சத்தமில்லாமல் உடலை புதைத்தல் அல்லது எரித்தல் கூடாது.

இறந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கே உரித்தான இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சடங்கு இருக்கும். அவர்களுக்குரிய சம்பிரதாயங்களை உரிய கவுரவத்துடன் செய்வதற்குரிய இடங்கள் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.

இடுகாடு அல்லது சுடுகாடுகள் போதாத நிலை ஏற்பட்டால், மாற்று இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

இறுதிச் சடங்குக்குத் தேவையான விறகு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இறந்தவர்களின் உறவினர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சடலங்களைக் கையாளும் தொழிலாளர்கள்

 • குடிநீருக்கான நிலத்தடி நீர் ஆதார இடத்தில் இருந்து குறைந்த பட்சம் 30 மீட்டர் தொலைவில் மயானம் இருக்க வேண்டும். புதை குழியின் அடி மட்டம் நிலத்தடி நீர்மட்டத்திற்கு மேல் குறைந்த பட்சம் 1.5 மீட்டர் மேலே இருக்க வேண்டும். அது 0.7 மீட்டர் கரைதிறனில்லா பகுதியாகவும் (unsaturated zone) இருத்தல் அவசியம். மயான பூமியில் உள்ள தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது.
 • உடல் கழிவு மற்றும் ரத்தம் போன்ற விஷயங்களில் சர்வதேச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் அவசியம்
 • கையுறை பயன்பாட்டை உறுதி செய்தல் வேண்டும்.
 • சடலங்களைக் கையாள்பவர்கள் சாப்பிடும் முன்பு சோப்பு போட்டு கைகழுவுவது அவசியம்.
 • உபகரணங்கள் மற்றும் வாகனங்களில் நோய்க் கிருமிகளை நீக்குதல் அவசியம்.
 • (காலரா நோய் தவிர்த்து) நோயாளிகள் சடலத்தை புதைக்க அல்லது எரிப்பதற்கு முன், கிருமி அழிப்பு நடவடிக்கைகள் அவசியல்லை. பணியாளர்கள் ஹெபடைடிஸ் பி தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

நீண்ட கால நடவடிக்கைகள்

சட்ட மற்றும் நிர்வாக விஷயங்கள்

பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலை திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உள்ளூர் முதல் தேசம் வழியாக சர்வதேச அளவிலான கண்காணிப்பை மேம்படுத்தல். குழாய் தண்ணீர் தர முறைமை மற்றும் கண்காணிப்பை ஊக்குவித்தல். உயர்தர சுகாதாரத்தை நடைமுறைப்படுத்தல் அவசியம்.

தொழில் நுட்ப விஷயங்கள்

தண்ணீர் சுத்திகரித்தல் மற்றும் துப்புரவை மேம்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புத் திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தல் மிக அவசியம்.

மேலும் விவரங்களுக்கு: HariBalaji , தேசிய ஆலோசகர், பேரிடர் மேலாண்மை, 8939037925

தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா