'leadership 2.0' - செயல்களையும் மனிதர்களையும் உணர்ச்சிகள் மூலம் இணைக்கும் தலைமைத்துவம் மாநாடு!
"Leadership 2.0" அதாவது தலைமைத்துவம் என்ற தலைப்பில் 'ஸ்பிரிட் சம்மிட்' நடத்திய மாநாட்டின் சுருக்கம் இங்கே பிரத்யேகமாக வரையறுக்கப்படுகிறது.
தலைமைத்துவம் மாநாட்டின் சிறப்புகள்
தொழில்நுட்பத்துறையில் வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு, இந்த மாநாடு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. மன அழுத்தம், அச்சம், பரபரப்பு - இதற்கிடையே வாழ்க்கையை வாழும் நபர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் உணர்ச்சிகள் மிகப்பெரிய குறைகளாக இருக்கிறது. இது போன்ற உணர்ச்சிகளைக் கையாண்டு, அதிலிருந்து வாழ்க்கையைத் தெளிவாக வாழ்வதற்கான வழிமுறைகளை இம்மாநாட்டில் குறிப்பிடப்பட்டது.
ப்ரூஸ் லிப்டன் மற்றும் அருண் ஜெயின் அவர்களின் உரைகள், பங்கேற்பாளர்களின் வாழ்வின் தரத்தை நிச்சியமாக உயர்த்தும் வகையில் இருந்தது. மனதிற்கும் உடலுக்கும் இருக்கம் இணைப்பு, பணிபுரியும் இடத்தில் தேவைப்படும் இரக்கம், ஆழ்மனதிற்கு தேவையான அம்சங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய ப்ரூஸைத் தொடர்ந்து, அருண் ஜெயின் உணர்வின் இன்றியமையாத அம்சங்களை எடுத்துரைத்தார்.
உணர்ச்சிகளுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு
மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட துறைகளில் தேர்ச்சி பெற்ற ப்ரூஸ் லிப்டன் கூறியதாவது...
"மனதை இயல்பான போக்கில் விடவேண்டுமே தவிர, ஒரு செயலி போன்று விதிகளைப் போட்டுவிடக்கூடாது", என்றார்.
அன்பும், அச்சமும், எதிர்மறையாக இருக்கும் நிலையில், மூலையின் செயல்பாட்டிற்குத் தேவையானதை மனமும் உணர்ச்சிகளுமே தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவர் கூறிய பல கூற்றுகள், இக்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகத் திகழ்ந்தது. மன அழுத்தத்துடன் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இவர் கூறியதை நிச்சியமாக பின்பற்ற வேண்டும்.
குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும் போது இவர் கூறியதாவது :
"உங்களது மன அழுத்தத்தை உங்கள் குழந்தைகளிடம் செலுத்தாதீர். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமும், தலைமைத்துவமும் இருக்கிறது என்று உணரும் போது மட்டுமே, நீங்கள் சிறந்த பெற்றோர் ஆக முடியும்".
உணர்வுகளின் முக்கியத்துவம்
போலாரிஸ் நிறுவனத்தின் அருண் ஜெயின், தன் வாழ்க்கையில் கற்ற பாடங்களைச் சிறப்பாகத் தெரிவித்தார்.
"ஆக்கம், ஆக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் சிந்தனைகளை உபயோகித்த நாம், உணர்வுகளின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறோம். இதுவே ஒவ்வொரு நிறுவனமும் கவனிக்க வேண்டிய தலைப்பு",
என்று உரையைத் தொடங்கிய அவர், அறிவை, உணர்வுக்கு பாதிப்பு ஏற்படாமல் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினார்.
முதலாவதாக, ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய சாதனைகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பிரிவுகளைத் தடுக்கும். இரண்டாவதாக, குரு கோபிந்த் சிங்கைப் போன்று ஞானத்தை உபயோகப்படுத்த வேண்டும், அதுவே வெற்றிக்கான வழி.
இவர் கூறிய இந்த இரண்டு அம்சங்களும், ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
"நாம் அனைவரும் இணைந்து ஒரு சிறந்த பண்பாட்டை வளர்ப்போம்", என்று பெருமிதத்துடன் உரையை முடித்தார்.
யுவர்ஸ்டோரியின் கருத்து
இன்றைய காலத்தில், நாம் என்ன செய்கிறோம் என்று தெரிவிக்க சமூக ஊடகச் செயலிகளை உபயோகப்படுத்துகிறோம். ஆனால், நம் மூளையும், அதனுடன் இணைந்த உணர்ச்சிகளுமே சிறந்த ஒரு செயலியை போல என்பதை மறந்துவிட்டோம். இந்த மாநாடு இவற்றை எடுத்துரைத்தது மட்டுமல்லாமல், வழிகாட்டுவதற்கான நோக்கை பல்வேறு பயிற்சிகளுடனும், உரைகளுடனும் எடுத்து சொல்லியது. நிச்சியமாக இது போன்ற மாநாட்டிலிருந்து வெளிவரும் போது, உணர்ச்சிகளுடன் கூடிய சிறந்த தலைவர்களாக அமைவதற்கான வாய்ப்புகள் ஏராளம் !