அவசரக் கடனுதவி திட்டம் திவாலாகும் நிலையில் இருந்த 13.5 லட்சம் சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றியது!
சிறு தொழில் நிறுவனங்கள் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள 2020 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அவசர கால கடனுதவி உறுதி திட்டம் 13.5 லட்சம் நிறுவனங்களை திவாலாகாமல் காப்பாற்றியதாகவும், 1.5 கோடி வேலை வாய்ப்புகளை காப்பாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.
சிறு தொழில் நிறுவனங்கள் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அவசர கால கடனுதவி உறுதி திட்டம் 13.5 லட்சம் நிறுவனங்களை திவாலாகாமல் காப்பாற்றியதாகவும், 1.5 கோடி வேலை வாய்ப்புகளை காப்பாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ), கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள் உதவும் வகையில் அவசரகால கடனுதவி உறுதி திட்டம் (ECLGS) அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
பல்வேறு துறையினர் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள உதவும் வகையில் 2020 மே மாதம் நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து 20 லட்சம் கோடி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கடனதவி உறுதி திட்டம் அமைந்ததது.
"கடனுதவி உறுதி திட்டத்தின் மூலம் 13.5 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டதாக மதிப்பிடுகிறோம். இவற்றில் 93.7 சதவீத கணக்குகள் சிறு மற்றும் குறு தொழில்களைச் சேர்ந்தவை,” என எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
மொத்தமாக பார்க்கும் போது 1.8 லட்சம் கோடி எம்.எஸ்.எம்.இ கணக்குகள் வாரா கடனாக மாறுவது தடுக்கப்பட்டது என்றும், வாராகடனாக மாறுவதில் இருந்து காக்கப்பட்ட நிலுவையில் உள்ள எம்.எஸ்.எம்.இ கடனில் இது 14 சதவீதம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
"எங்கள் ஆய்வுபடி, இந்த நிறுவனங்கள் வாரா கடனாக மாறியிருந்தால் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வேலை இழந்திருப்பார்கள். இதன் மூலம் கடனுதவி திட்டம் ஆறு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளன,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜாராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக பலன் பெற்றதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி உடைய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், ஆர்வம் உள்ள குறு நிறுவனங்கள் முத்ரா திட்ட நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, தேசிய கடன் உறுதி அறக்கட்டளை நிறுவனம் மூலம் கூடுதலாக 4.5 லட்சம் கோடி கடனுதவி உறுதி அளிக்கப்பட்டது.
இதற்காக அரசு ரூ.41,600 கோடி நிதியை உருவாக்கி அடுத்த மூன்று ஆண்டுகளில் செலவிட திட்டமிடப்பட்டது.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவி அறக்கட்டளையை சீரமைப்பது பற்றியும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
"அமெரிக்க சிறு வர்த்தக நிர்வாகம் போல, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவி அறக்கட்டளை திட்டத்தை நிர்வகிக்க தனி அமைப்பை நிறுவுவதன் மூலம் இதை செய்யலாம். 90 சதவீத நிறுவனங்கள் குறுந்தொழில் பிரிவில் உள்ள நிலையில், இந்த கடனுதவி ரூ.2 கோடி வரை உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்,” என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
செய்தி-பிடிஐ