மாவோயிஸ்ட் பகுதிகளின் ஆபத்துகளைத் தாண்டி மக்களை வாக்களிக்க வைத்த தேர்தல் அதிகாரிகள்!

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடியை அடையமுடியாத வண்ணம், செல்லும் பாதையில் வெட்டப்பட்ட மரங்களை மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு போட்டிருந்தனர். படை வீரர்கள் வரும் வரை சுமார் 16 மணி நேரம் காட்டில் மறைந்திருந்தனர் தேர்தல் அதிகார்கள் குழுவினர்.

மாவோயிஸ்ட் பகுதிகளின் ஆபத்துகளைத் தாண்டி மக்களை வாக்களிக்க வைத்த தேர்தல் அதிகாரிகள்!

Tuesday April 23, 2019,

2 min Read

இந்தியாவின் பரபரப்பான தேர்தல் சூழலில் மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்கவேண்டும் என்று ஊக்குவிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

தேர்தல் நியாயமான முறையில் நடப்பதற்குத் தேவையான பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்து வந்தாலும் ஒவ்வொரு முறையும் நாட்டின் பல பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்தரம் பழுதாவது, வன்முறை சம்பவங்கள் நடப்பது என பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது.

இது மட்டுமின்றி தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்ய உதவுவதற்கு அவர்களது இருப்பிடத்தைச் சென்றடைவது தேர்தல் குழுவினருக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.

உதாரணத்திற்கு அருணாச்சலப் பிரதேசத்தின் அன்ஜா மாவட்டத்தில் ஒற்றை வாக்காளரின் வாக்கைப் பதிவு செய்ய தேர்தல் குழுவினர் மலையேற்றம் மேற்கொண்டும் காடுகளில் நடந்தும் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

கரடுமுரடான நிலப்பரப்புகள், உயரமான மலைப்பகுதிகள் போன்றவற்றைச் சென்றடையும் சிக்கல்களைத் தாண்டி சண்டிகர், ஒடிசா போன்ற சில மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் மாவோஸ்டுகளைக் கையாளவேண்டிய சூழலும் ஏற்படுகிறது. தாக்குதல்களில் இருந்து தப்பித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி இயந்திரங்களை மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இருந்த சுமார் 36 தேர்தல் அதிகாரிகள் நீண்ட தூரம் நடக்கவேண்டியிருந்தது.

ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கந்தாமல் மாவட்டம் ஃபிரிங்கியா தெஹ்சில் பகுதியின் கீழ் உள்ள பரஹலா கிராமத்தில் பூத் எண் 12-ல் வாக்குப்பதிவு முடித்த பிறகு குழுவினர் காடுகளின் வழியே நடந்து சென்றதாக ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.

குழுவினர் வாக்குச்சாவடி அமைக்க அடுத்த பகுதிக்கு நடந்து செல்கையில் வெட்டப்பட்ட மரங்கள் சாலைகளில் திட்டமிட்டு போடப்பட்டிருந்ததைக் கவனித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையின் பாதுகாப்பின்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் குழுவால் மேற்கொண்டு செல்ல முடியாமல் போனது. எனவே காட்டில் இரவு முழுவதும் தங்கினர். 16 மணி நேரத்திற்குப் பிறகு உதவி கிடைத்தது.

தேர்தல் குழுவிற்கு தலைமை தாங்கிய சுதான்ஷு சேகர் மெஹர் அவர்கள் சந்தித்த சூழல் குறித்து ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடன் விவரிக்கையில்,

”நாங்கள் இரவு உணவாக பிஸ்கெட்டும் தண்ணீரும் எடுத்துக்கொண்tடோம். மழையிலும் நனைந்தோம்,” என்றார்.

அடுத்த நாள் காலை இக்குழுவினர் அருகிலிருந்த பாராமிலிட்டரி முகாம் வரை செல்ல பாதுகாப்பிற்கு 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்தனர். பின்னர் அவர்களது பாதுகாப்புடன் குழுவினர் 15 கி.மீ வரை நடந்து சென்றனர்.

காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சீப் பாண்டா ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடன் உரையாடுகையில்,

”ஒரு நாள் முன்பு தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததால் தேர்தல் அதிகாரிகள் வேறு வழியின்றி காத்திருந்தனர். ஒருவேளை அவர்கள் முன்னேறிச் செல்லத் தீர்மானித்திருந்தால் அவர்கள் மீது தோட்டாக்கள் பாய்ந்திருக்கும்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA