Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வணிக வளர்ச்சியில் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்களின் கலந்துரையாடல்!

ஸ்டார்ட் அப்'கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு வணிகங்களை வளர்ச்சியடையச் செய்ய வழிகள் என்ன என்று யுவர்ஸ்டோரி மாஸ்டர்கிளாசில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வணிக வளர்ச்சியில் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்களின் கலந்துரையாடல்!

Wednesday October 09, 2019 , 2 min Read

ஸ்டார்ட் அப்'கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு வணிகங்களை வளர்ச்சியடையச் செய்ய உதவும் வகையில் தொழில்முனைவு மேம்பாடு மையம் (EDII-TN – Entrepreneurship Development and Innovative Institute – Government of Tamil Nadu) உடன் இணைந்து யுவர்ஸ்டோரி 'மாஸ்டர்கிளாஸ்’ அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘Secrets of Scaling Up Masterclass' என்ற தலைப்பில் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலர் ஆர்வமாகப் பங்கேற்றனர்.


தொழில்நுட்பம் குறித்த தொழில்முனைவோர்களின் உந்துதலளிக்கும் உரை, குழு விவாதம், தொழில்நுட்பத்தைக் கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும் விதம், வெற்றிகரமான தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் போன்றவை இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தது.

Masterclass

சிறப்புப் பேச்சாளர்கள்

கோகுல் - Botminds AI Technologies, இணை நிறுவனர்

தொழில்நுட்பம் பற்றிய விளக்கத்துடன் உரையைத் தொடங்கிய கோகுல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு மாட்யூல் குறித்தும் விரிவாக விளக்கினார். கோகுல் Botminds நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து விரிவாக பகிர்ந்து கொண்டது சுவாரஸ்யமாகவும் உந்துதலளிக்கும் வகையிலும் இருந்தது.

பிரதீப் – Paypal India, மூலோபாய முயற்சிகள் தலைவர்

பிரதீப்; இந்தியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் டெலிகாம், கல்வி சேவைகள், மருந்து என பல்வேறு துறைகளில் தரம், ஆலோசனை, திட்ட மேலாண்மை மற்றும் வணிக வளர்ச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் பணியாற்றி ஆழந்த அனுபவம் பெற்றவர். இவருக்குக் கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் அதிகம். 10,000க்கும் அதிகமானோருக்கு இதுவரை பயிற்சியளித்துள்ளார்.

வெங்கட்நாதன் – Nesh Technologies, நிறுவனர் மற்றும் இயக்குநர்

வெங்கட்நாதன் ’Nesh Technologies’ துவங்குவதற்கு முன்பு அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த பொறுப்புகள் வகித்துள்ளார்.

விஜய் – Voice Gear, நிறுவனர் மற்றும் சிஇஓ

வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் எட்டாண்டுகளுக்கும் மேலாக தலைமைப் பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் தீவிரமாக பங்கேற்பவர். இவர் தலைமையில் நடைபெற்ற சில ப்ராஜெக்டுகள் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் திருட்டுகள் குறையவும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களைக் கண்டறியவும் உதவியுள்ளது.     


பேச்சாளர்கள் ஸ்டார்ட் அப்களுடன் கலந்துரையாடி அவர்களது வணிக வளர்ச்சிக்குப் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார்கள். அதேபோல் ஸ்டார்ட் அப் தரப்பில் சந்திக்கப்பட்ட சவால்கள் குறித்தும் சிக்கல்கள் குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்டபோது வல்லுனர்கள் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்கள்.


நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்குத் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த நுண்ணறிவை யுவர்ஸ்டோரியின் இந்நிகழ்வு வழங்கியது. மேலும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிடைக்கப்படும் தரவுகள் நிறுவனங்களின் செலவுகள் குறையவும் திறன் அதிகரிக்கவும் உதவுவது குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.


இந்த மாஸ்டர்கிளாஸ் பயனுள்ளதாக இருந்ததாகவும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சிறப்பாக புரிந்துகொள்ளமுடிந்தது என்றும் பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதேபோன்று மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


ஸ்டார்ட் அப்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குவதில் யுவர்ஸ்டோரி உடன் இணைந்துகொண்ட தொழில்முனைவு மேம்பாடு மையத்திற்கு யுவர்ஸ்டோரி சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.


தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல இத்தகைய நிகழ்வுகள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.