Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தன் கிராமத்தை ‘மினி இஸ்ரேல்’ ஆக்கி, விவசாயத்தில் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் ஈட்டும் விவசாயி!

தன் கிராமத்தை ‘மினி இஸ்ரேல்’ ஆக்கி, விவசாயத்தில் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் ஈட்டும் விவசாயி!

Tuesday March 31, 2020 , 3 min Read

ராஜஸ்தானின் விவசாயி கேமராம் வெற்றிக்கான புதிய கதையை எழுதியுள்ளார். இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


கேமராம் விவசாயத்தில் கோடி லாபம் ஈட்டுகிறார் என்றால் நம்புவீர்களா? அவர் எவ்வாறு விவசாயத்தை லாபகரமான வணிகமாக மாற்றினார் என்பதையும், அவரது வருமானம்  கோடியை எட்டிய தந்திரம் என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

1

விவசாய உலகில் இஸ்ரேல் மிக உயர் தொழில்நுட்ப நாடாகக் கருதப்படுகிறது. அங்கு பாலைவனம், பனித் துளிகளால் பாசனம் செய்யப்படுகிறது, கோதுமை சுவர்களில் வளர்க்கப்படுகிறது, நெல் பயிரிடப்படுகிறது. இன்னும் இந்தியாவின் மில்லியன் கணக்கான மக்களுக்கு இது ஒரு கனவுதான். ஆனால் இதற்கு மத்தியில், ராஜஸ்தானின் விவசாயி ஒருவர் இஸ்ரேலின் பாணியில் விவசாயம் செய்யத் தொடங்கினார். அவரது வருடாந்திர வருவாய் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது.

 

தலைநகர் ஜெய்ப்பூரை ஒட்டியுள்ள குடா குமாவதன் என்ற கிராமத்தில் வசிக்கும் விவசாயி கேமராம் சவுத்ரி (45 வயது), சினெர்ஜி தொழில்நுட்பத்தை அவரது அறிவைக் கொண்டு செயல்படுத்தி, வெற்றி கண்டு மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு இன்று ஒரு முன்மாதிரியாக மாறிவிட்டார்.


அவர் இன்று லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகிறார். கேமராம் சவுத்ரி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலின் பாணியில் பாதுகாக்கப்பட்ட விவசாயத்தை (பாலி ஹவுஸ்) செய்யத் தொடங்கினார்.

இன்று சுமார் 200 பாலி ஹவுஸ்கள் அவரின் பராமரிப்பின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இப்போது மக்கள் இந்தப் பகுதியை ‘மினி இஸ்ரேல்’ என்று அழைக்கிறார்கள். கேமராம் தனது விவசாயத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடி லாபம் ஈட்டுகிறார்.


இஸ்ரேலில் 2012 இல் பயிற்றுவிப்பாளராக இருந்த கேமராம் 


விவசாயி கேமராம் சவுத்ரிக்கு அரசாங்கத்திடமிருந்து இஸ்ரேலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இஸ்ரேலில் இருந்து திரும்பிய பின்னர், அவரிடம் எந்த வைப்பு மூலதனமும் இல்லை, ஆனால் அங்குள்ள விவசாயத் தொழில்நுட்பத்தைப் பார்த்த பிறகு, அவர் தங்கள் விவசாயத்திலும் அந்த யுக்திகளைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார்.

இஸ்ரேல் விவசாயி

மானியத்தில் முதல் ‘பாலி ஹவுஸ்’

 

விவசாயி கேமராம்  அரசு மானியத்துடன் முதல் பாலி ஹவுஸை நான்காயிரம் சதுர மீட்டரில் நடவு செய்தார். இது பற்றி கேமராம் கூறியதாவது,

 "பாலி ஹவுஸ் அமைப்பதற்கு ரூ.33 லட்சம் செலவாகும், அதில் 9 லட்சம் நான் வங்கியில் கடன் வாங்கியிருந்தேன், மீதமுள்ளவை மானியமாகப் பெற்றேன். சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகும் வெள்ளரிக்காயை முதல் முறையாக பயிரிட்டேன். நான்கு மாதங்களில் 12 ஆயிரம் வெள்ளரிக்காய் விற்கப்பட்டது, இது விவசாயத்தில் எனது முதல் அனுபவம்,” என்றார்.

"வங்கியின் கடனை இவ்வளவு சீக்கிரம் திருப்பிச் செலுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நான்கு மாதங்களில் எனக்கு நல்ல லாபம் கிடைத்தவுடன், உடனடியாக வங்கியின் கடனை திருப்பச் செலுத்தினேன். இது நான்காயிரம் சதுர மீட்டரிலிருந்து தொடங்கியது இன்று முப்பதாயிரம் சதுர மீட்டரில் பாலி ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது." இதனால் எங்கள் கிராமம்  மினி இஸ்ரேலானது.


இந்த இஸ்ரேலிய பாணியை  ராஜஸ்தானில் அறிமுகப்படுத்திய முதல் விவசாயி கேமராம் சவுத்ரி. இன்று அவரிடம் சொந்தமாக 7 பாலி ஹவுஸ், 2 குளங்கள், 4 ஆயிரம் சதுர மீட்டர் பேன் பேட்ஸ்(fan pads) , 40 கிலோவாட் சோலார் பேனல்கள் உள்ளன. இன்று, அருகிலுள்ள 5 கி.மீ தொலைவில் சுமார் 200 பாலி ஹவுஸ்  கட்டப்பட்டுள்ளன.


இந்த மாவட்ட விவசாயிகள் இப்போது பாதுகாக்கப்பட்ட விவசாயம் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டுகின்றனர். பாலி ஹவுஸின் முழுப் பகுதியையும் மினி இஸ்ரேல் என்று மக்கள் இப்போது அழைக்கிறார்கள்.

விவசாயி

பயனுள்ள சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தழைக்கூளம் முறை 

 

சொட்டு நீர் பாசனத்தில் நிறைய பணம் மிச்சப்படுத்துகிறது மற்றும் தழைக்கூளம் முறை  களைகள் மற்றும் வானிலையிலிருந்து பயிரை சேமிக்கிறது, இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும். தர்பூசணி, வெள்ளரி, டிண்டே மற்றும் மலர் வளர்ப்பில் நல்ல லாபம் உள்ளது. இதில் அரசாங்கம் நல்ல மானியத்தை அளிக்கிறது, செலவு செய்தவுடன் நல்ல விளைச்சலைப் பெற முடியும்.

 

குளம் நீர் மூலம் ஆறு மாதங்களுக்கு நீர்ப்பாசனம்

 

கேமராம் தனது அரை ஹெக்டேர் நிலத்தில் இரண்டு குளங்களைக் கட்டியுள்ளார், அதில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இந்த நீரை கொண்டு ஆறு மாதங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். சொட்டு நீர் பாசனம் மற்றும் குளம் நீர் பயிர்களுக்குத் தேவையான முழுமையான நீர்ப்பாசனத்தை வழங்குகிறது. பாலி ஹவுஸின் கூரையில் உள்ள மைக்ரோ ஸ்ப்ரிங்க்ளர்கள் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. பத்து அடியில் உள்ள நீரூற்றுகள் பயிரை ஈரப்பதத்துடன் பராமரிக்கின்றன.


2015 ஆம் ஆண்டு தேசிய விருதைப் பெற்றார்கள்


சிறந்த விளைச்சலுக்காக மஹிந்திரா சார்பாக விவசாயி கேமராம் சவுத்ரிக்கு 2015 ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை அமைச்சர் ராதா மோகன் சிங் விருது வழங்கினார். வேளாண்மைத் துறை சார்பில் சோலார் பேனல்களை நிறுவியதற்காகவும் அவர் கௌரவிக்கப்பட்டார்.