Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

விதைபோட்ட தந்தை; விடா முயற்சியால் கிடைத்த பலன்: ஐஏஎஸ் ஆன விவசாயியின் மகள்!

நான்காவது முறை வெற்றிபெற்ற ஹிமானி மீனா!

விதைபோட்ட தந்தை; விடா முயற்சியால் கிடைத்த பலன்: ஐஏஎஸ் ஆன விவசாயியின் மகள்!

Tuesday October 12, 2021 , 2 min Read

யூபிஎஸ்சி தேர்வில் 761 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பலர் தேர்வாகி இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக கடின உழைப்பும் உறுதியும் கொண்டு வெற்றிபெற்றவர் ஹிமானி மீனா.


இந்தத் தேர்வில் 320வது ரேங்க் பெற்றவர் ஹிமானி மீனா. ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஹிமானி மீனா நொய்டாவின் ஜெவர் தெஹ்சிலின் சிர்சா மச்சிபூர் கிராமத்தில் வசிக்கிறார்.


ஹிமானியின் தந்தை இந்திரஜித் ஒரு விவசாயி மற்றும் அவரது தாய் ஒரு இல்லத்தரசி. இந்திரஜித்தே ஹிமானியின் மீனாவின் ஐஏஎஸ் கனவுக்கு விதைபோட்டது அவரின் தந்தையே. அவர் மூலமாக குழந்தைப் பருவத்திலிருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.

ஹிமானி

இதற்காக படிப்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். ஜெவார் நகரத்தில் உள்ள பிரக்யான் பப்ளிக் என்ற பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஹிமானி, பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பிஏ (எச்) அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று மேல் படிப்புக்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இணைத்துள்ளார்.


பிஎச்.டி வரை அரசியல் அறிவியலில் முடித்தவர் கடந்த சில வருடங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முயற்சித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முறை தேர்வு எழுதியிருந்தாலும், நான்காம் முறை தேர்ச்சிபெற்று சாதித்துள்ளார். இதனால், தற்போது மச்சிபூர் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் ஹிமானி. 


சாதாரண விவசாயியின் மகளாக இருந்து இந்த நிலையை எட்டியுள்ள ஹிமானி தனது பயணம் தொடர்பாக பேசுகையில்,

“யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு என்னை ஊக்குவித்தவர் எனது தந்தைதான். சிறுவயதில் அவர் கொடுத்த ஊக்கம் படிப்படியாக எனது கனவாகவும் மாறியது,” என்றார்.

கனவை நோக்கிய பயணத்தில் பெற்றோரிடமிருந்து நிதி ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு பெரும் ஆதரவு இருந்தது. அவர்கள் எந்த தடைகளையும் உருவாக்க முயற்சிக்கவில்லை, மாறாக அவர்கள் என்னை எந்தவிதமான சமூக அழுத்தங்களிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாக மாறினர்.

“எனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து எனக்கு எப்போதும் உதவியும் ஆதரவும் இருந்தது, அதனால்தான் தேர்வில் மூன்று முறை தோல்வியுற்ற பிறகும் அதில் இருந்து பின்வாங்க வேண்டும் என்ற எந்த உணர்வும் ஏற்படவில்லை," என்றுள்ளார்.
ஹிமானி மீனா

வெற்றிக்கான ரகசியம் பற்றி பேசும்போது, கடின உழைப்பைத் தவிர வேறு இரகசியம் இல்லை, அது சிவில் சர்வீசஸ் அல்லது வேறு எந்தத் தேர்வாக இருந்தாலும் உங்களால் ஈர்க்கப்பட்டதை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குறிப்பாக யூபிஎஸ்சிக்கு, விடாமுயற்சி மற்றும் பொறுமை என்பது முக்கியம்.

தோல்வியை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதிலிருந்து மீளத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் படிப்பேன். முதல் மூன்று முயற்சிகளில் முதல் கட்டத்தை என்னால் தாண்ட முடியவில்லை. அதில் தீவிர பயிற்சி எடுத்தேன். அது பலன் கொடுத்தது," என்றுள்ளார்.

தகவல் உதவி: Indian nation | தொகுப்பு: மலையரசு