Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆன்லைன் கல்வி: ஆசிரியர்களுக்கு தமிழில் பயிற்சி அளிக்கும் ‘வித்யா விதை’

ஆன்லைனில் வகுப்பெடுக்கும் வழிமுறைகள் மற்றும் செயலிகள் பயன்பாடு குறித்த காணொளிகளை வெளியிட்டுள்ளனர் இந்த குழுவினர்.

ஆன்லைன் கல்வி: ஆசிரியர்களுக்கு தமிழில் பயிற்சி அளிக்கும் ‘வித்யா விதை’

Monday August 10, 2020 , 2 min Read

2020-ஆம் வருடம் தொடங்கும் சமயத்தில் இப்படி ஒரு கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று நாம் யாருமே கற்பனைகூட செய்திருக்கமாட்டோம். COVID-19 நோய் உலகளவில் பரவ ஆரம்பித்த தருணங்களில் கூட நாம் அனைவரும் மாதக்கணக்கில் இப்படி வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வரும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று அதுதான் நிதர்சனம்.


கொரோனோ வைரஸ் வர்த்தகம், போக்குவரத்து, தொழிற்சாலை தொடங்கி உலக பொருளாதாரம் வரை அனைத்தையும் முடக்கிவிட்டது. இதற்கு பள்ளி, கல்லூரிகளும் விதி விலக்கல்ல.


மார்ச் மாதமே பள்ளிகள் அடைக்கப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் பள்ளிகள் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட சாத்தியமே இல்லை என்று தீர்மானிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதற்காக பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில் முதன்மையாக இருப்பது இணையதள வழிக் கல்வி

vidhya vidhai

வித்யா விதை குழு

கோவிட் சூழலில் நாம் வகுப்பறைக் கற்றலில் இருந்து இணையவழிக் கல்விக்கு மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.


இணையம் மூலம் கற்றல் என்பது மாணவர்களுக்கும், கற்பித்தல் என்பது ஆசிரியர்களுக்கும் ஒரு புதிய தளம். கணினி, செல்போனிலுள்ள மென்பொருள்கள், செயலிகள் ஆகியவற்றின் வாயிலாக ஆசிரியர்கள் மாணவர்களைத் தொடர்புகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.


எந்த ஒரு செயலியையும் புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கும்போதும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவை செயல்படும் விதம் குறித்து முழுமையாக தெரியாத நிலையில் தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான்.

அவற்றைப் பயன்படுத்தும் முறை மற்றும் நெளிவு சுளிவுகளை முழுமையாக அறிந்து கொண்டால் மிகச்சிறப்பாக பயன்படுத்த முடியும். இதனை மனதில் கொண்டு ‘வித்யா விதை’ என்னும் தொண்டு நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் எளிய முறையில் காணொளிகள் வடிவமைத்தும் பயிற்சியளித்தும் வருகிறது.

ஆசிரியர்கள் மாணவர்களைத் தொடர்புகொள்வதற்கும் மாணவர்களின் கற்றல் தொடர்வதற்கும் Zoom, Google Meet, Earth போன்ற செயலிகள் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் விதம், இதிலுள்ள ஆப்ஷன்கள், கையாளும் விதம் போன்றவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வீடியோக்களாக வழங்கப்படுவதே இந்த காணொளிகளின் சிறப்பம்சம். இந்த விளங்கங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்படுகின்றன.  

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் எளிமையாகப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்தும் வகையில் இந்தக் வீடியோ பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
1

இதுவரை 40 (தமிழ் மற்றும் ஆங்கிலம்) காணொளிகள் இவர்களுடைய யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யத் தயார்நிலையில் உள்ளன.

அத்துடன் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்குக் காணொளிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நேரடியாகவும் சமூக பக்கங்கள் மூலமாகவும் சென்றடைந்துள்ளனர் வித்யா விதை குழுவினர்.

கடந்த மாதம் நடந்த காணொளி பயிற்சியில் மட்டும் 36 வெவ்வேறு பள்ளிகள் மற்றும் அமைப்பைச் சார்ந்த ஆசிரியர்கள் பங்குகொண்டு பயிற்சிபெற்றுள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று காணொளிகளைப் பார்த்து பயன்பெறலாம் அல்லது இந்த QR code scan செய்தும் பயன்பெறலாம்.

Tamil videos: https://bit.ly/VVtamiltech

English Videos: https://bit.ly/VVEngTech Hindi: https://bit.ly/Hindi_Videos

வித்யா விதையின் பற்றி தெரிந்து கொள்ள [email protected]