Tiktok: ஆன்லைன் தொல்லைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
டிக்டாக் பயனர்கள் தேவையற்ற உரையாடல்களை, அத்துமீறலைத் தவிர்க்க உதவும் 5 வழிகள் இதோ...
ஆன்லைன் என்பது, ஒரே சமயத்தில் பல்வேறு வடிவங்களில், அதிகப்படியான தகவல் எந்தவொரு நேரத்திலும் கிடைக்கப்பெறும் ஒரு சிக்கலான உலகமாகும். ஒருவரது படைப்பாற்றலை வெளிப்படுத்துவது, ஒத்தக் கருத்துடைய தனிநபர்களுடன் இணைவது மற்றும் பல்வகைப்பட்ட தலைப்புகளில் மக்களுக்கு அறிவு மற்றும் கற்றலை வழங்குவது ஆகியவைகள், சமூக ஊடக அடித்தளங்களைத் துடிப்பானதாகவும் மற்றும் ஆர்வமூட்டுவதாகவும் மாற்றுகின்றன.
எனினும் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் தொல்லைகள் தடை செய்யப்பட்டுள்ளன. விரும்பத்தகாததொரு மோசமான கருத்து முதல், அதிகப்படியான கிண்டல்கள் மற்றும் தீவிர அச்சுறுத்தல்கள் வரை, சைபர்ஸ்பேஸில் பயனர்களுக்கு நேரிடலாம். ஆப்பைப் பயன்படுத்துகையில் எச்சரிக்கையாக இருப்பது மற்றும் பொருத்தமான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவது ஒரு பாதுகாப்பான மற்றும் அறிவார்ந்த விஷயமாகும்.
டிக்டாக் சமூகத்தில் பயனர்கள் தேவையற்ற உரையாடல்களை தவிர்ப்பதற்காக ஐந்து வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பிரைவசி இஸ் எ பிளிஸ் (Privacy is a Bliss): இது உங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இருத்தல் இரண்டிற்கும் பொருந்தும். உங்களைப் பின்தொடர்பவர்களை ஃபில்டர் செய்வது, விஷயங்களை சுத்தமாக பராமரிப்பதையும் மற்றும் எந்த வகையிலான தொல்லைகளையும் தவிர்ப்பதையும் சாத்தியமாக்கும். உங்கள் கணக்கை பிரைவேட்டாக மாற்றுவது, எந்த ஒரு பயனரின் கோரிக்கையையும் ஏற்கும் அல்லது மறுக்கும் திறனை வழங்கும் மற்றும் நீங்கள் அப்லோடு செய்யும் உள்ளடக்கம் நீங்கள் விரும்பும் மற்றும் இணையும் நபர்கள் மட்டுமே காண கிடைக்கப்பெறும்.
2. சரியான டூயட் செய்திடுங்கள்: உங்கள் டூயட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், படைப்பாற்றலுடன் சற்று எச்சரிக்கை தன்மையையும் கொண்டிருப்பது, தேவையற்ற விஷயங்கள் மற்றும் வீடியோ விளைவுகளை நீங்கள் பெறுவதை தடுக்கும். உங்களுடன் யாரால் டூயட் மேற்கொள்ளமுடியும் என்பதை தீர்மானிக்கும் தேர்வை இந்த ஆப் கொண்டுள்ளது. இது மேலும் ஃபில்டர் செய்யப்பட்டு, அனைத்து வீடியோக்களுக்கும் ஒரே அமைப்பாகவோ அல்லது ஒவ்வொரு வீடியோவிற்கும் தனித்தனியாகவோ அமைக்கப்படலாம். மிக முக்கியமாக, தங்களது வீடியோவிற்கு யார் ரியாக்ட் செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் திறனை, டிக்டாக் அதன் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
3. டெலிட் பட்டனை பயன்படுத்துங்கள்: உங்கள் வீடியோக்களில் யார் கமெண்ட் செய்யமுடியும் என்பதை கட்டுப்படுத்தும் தேர்வு உங்களுக்கு இருந்தாலும், உங்களை பின்தொடர்பவர்களில் எவரேனும் பின்னால் உங்களுக்குத் தொல்லை கொடுக்க வாய்ப்புள்ளது. அத்தகைய தேர்வுகளில், உங்கள் வீடியோக்களில் வழங்கப்பட்டுள்ள அக்கருத்துக்களை வெறும் டேப் மற்றும் ஹோல்டு செய்து கமெண்டை தேர்ந்தெடுத்து, “டெலீட்” என்பதை அழுத்தலாம். மேலும், எந்தவொரு ரசிகரையும் எந்தவொரு நேரத்திலும் டெலீட் செய்யவோ அல்லது உங்களது உள்ளடக்கங்களை அவர்கள் பார்வையிடுவதை அல்லது உங்களுக்கு மேசேஜ் செய்வதைத் தடை செய்யவோ முடியும்.
4. தரவு அமைப்பு: ஆன்லைன் உலகில் நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரேனும் உங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தாலோ அல்லது முறை தவறி நடந்தாலோ, உங்களது ஆப் செட்டிங்கை மாற்றிய பின்பும் நீங்கள் அதுகுறித்து எங்களது மாடரேஷன் அணியினரிடம் புகார் செய்யலாம். அத்தகைய கருத்து அல்லது சூழ்நிலை மீள்பார்வை செய்யப்படும் மற்றும் அத்துமீறல் இருப்பின் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெரிய அளவிலான டிக்டாக் சமூகத்திற்கு ஆதரவினை வழங்குவதோடு இத்தகைய தொல்லைகளை சந்திக்கும் பிற பயனர்களுக்கும் நீங்கள் உதவலாம்.
பெற்றோர்கள் அவர்களது பதின்ம வயதினருடன் அமர்ந்து, அவர்களது கணக்கு அமைப்புகளை நிர்வகிக்க உதவலாம் மற்றும் அவர்களது ஆன்லைன் அனுபவங்களை பார்வையிடலாம். கூடுதலாக, இவை அனைத்தையும் மீறி, எவரேனும் உங்களுக்கோ அல்லது பிற பயனருக்கோ உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், உடனடியாக காவல்துறை அல்லது உள்ளூர் சட்ட அமலாக்க முகமைகளின் உதவியை நாடவும்.
5. டவுன்லோடு வீடியோவை டிசேபிள் செய்தல்: டிக்டாக்கின் ‘பிரைவசி மற்றும் சேஃப்டி’ செட்டிங்கின் ஒரு பகுதியாக ’ஹூ கேன் டவுன்லோடு மை வீடியோ’ என்னும் தேர்வு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இங்கு உங்களது வீடியோவிற்கான டவுன்லோடு தேர்வுகளை நீங்கள் எவ்ரிஒன் என்பது முதல் நோபடி என்பது வரை அமைக்கலாம். இந்த வசதி, உள்ளடக்கத்தின் தவறான பயன்பாட்டினை தவிர்க்கும்.
டிக்டாக்கின் நடப்பு உறுதிப்பாடான, இந்தியாவின் ஆன்லைன் பாதுகாப்பு என்பதற்காக, இந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்த வீடியோ ஒன்றையும் டிக்டாக் வெளியிட்டுள்ளது.