Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மாற்றுதிறனாளிகளுக்கான நட்பை வளர்க்கும் தளத்தை உருவாக்கிய இரு தாய்மார்கள்!

கோபிகா கபூர் மற்றும் மோனிஷா காந்தி ஆகியோர் அவர்களது மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு கிடைத்த நட்பு, வளர்ச்சி சவால்களுடனான மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு அவர்களுக்கான நட்புறவை வளர்க்கும் Buddy Up எனும் தளத்தை உருவாக்கி, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மாற்றுதிறனாளிகளுக்கான நட்பை வளர்க்கும் தளத்தை உருவாக்கிய இரு தாய்மார்கள்!

Tuesday November 05, 2024 , 3 min Read

கோபிகா கபூர் மற்றும் மோனிஷா காந்தி ஆகியோர் அவர்களது மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு கிடைத்த நட்பு, வளர்ச்சி சவால்களுடனான மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு அவர்களுக்கான நட்புறவை வளர்க்கும் "Buddy Up" எனும் தளத்தை உருவாக்கி, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான மோனிஷா காந்தி, டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட அவரது மிஹான் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும் கட்டத்தில் இருப்பதால் மிகவும் கவலையுற்றார்.

ஏனெனில் மிஹான் கல்வியில் சிறந்து விளங்கினாலும், அவரது நண்பர்கள் அடுத்தக்கட்டமாக அவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டால், ​​மிஹானின் சமூகத் தொடர்பு குறைந்துவிடும் என்பதால் ஏற்பட்ட கவலை அது. அச்சமயத்திலே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பெற்றோர் அமைப்பு ஒன்றில், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமால் பாதிக்கப்பட்ட கூச்சச் சுபாவமுள்ள பையனான வீரின் தாயான கோபிகா கபூரை சந்தித்தார்.

buddy up

மோனிஷாவின் கவலையை கோபிகாவும் எதிரொலித்தார்.

"வீர் ஒரு அமைதியான பையன், அவர் மனம் திறந்து பேச நேரம் எடுக்கும். அவனுடைய சகோதரி கல்லுாரிக்கு சென்றபின், அவன் தனிமையை உணருவான்," என்றுக் கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையிலே, தற்செயலாக ஒரு பேக்கிங் ஆக்டிவிட்டி நிகழ்வில், மிஹானும் வீரும் சந்தித்தனர். ஆச்சரியம் என்னவெனில் ​​அவர்களுக்கிடையே இன்ஸ்டன்ட் பாண்டிங் உருவாகியது. நாட்கள் கடக்க அது ஆழமான நட்பாகவும் பரிணமித்தது.

சிறுவர்களிடையேயான நட்புறவு இருவரது தாய்மார்களையும் மகிழ்வித்தது. அதே வேளை, மிஹான் மற்றும் வீர் போன்ற மற்ற பதின்ம வயதான மாற்றுதிறனாளிகளுக்கும் இதுபோன்றதொரு நட்பு உறவையும், இணைப்புகளையும் உருவாக்கும் ஒரு தளத்தை உருவாக்கும் யோசனையை அளித்தது. அதன் தொடர்ச்சியாய், 2019ம் ஆண்டு டவுண் சிண்ட்ரோம், ஆட்டிசம் போன்ற மாற்றுதிறனாளிகளிடையே அர்த்தமுள்ள நட்பை வளர்ப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'Buddy Up' எனும் நிறுவனத்தை அவர்கள் இணைந்து நிறுவினர்.

"மிஹானும் வீரும் நண்பர்களானவுடன், அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவதை நாங்கள் கண்டோம். நான்கு வருடங்களாக அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து கேம்பிங் செல்கிறார்கள். கான்சர்ட்களில் பங்கேற்கிறார்கள். ஏன், ஒரு இசைக்குழுவிலும் இணைந்து இருக்கிறார்கள். இந்த மாற்றம் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே சமூகப் பிணைப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது," என்றனர்.

2022ம் ஆண்டு வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 10.8% மனநலக் கோளாறுகளுக்கு அறிவுசார் இயலாமை பங்களிக்கிறது. மனநலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஆதார அடிப்படையிலான மனநலச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதே இந்தியாவில் மனநலக் கோளாறுகளின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த அணுகுமுறை என்பதை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இருப்பினும், அறிவுசார் குறைபாடுகளுக்கான ஆதார அடிப்படையிலான தரவுகளை உருவாக்குவது கடினம். வலுவான சமூக உறவுகளைக் கொண்ட நபர்கள் குறைந்த அளவிலான பதட்டம் மற்றும் மனச்சோர்வினை அடைகின்றனர். மேலும், சிறந்த உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட சுயமரியாதை ஆகியவற்றை அனுபவிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு வலைத்தளம்!

ஆரம்பத்தில், Buddy Up ஒரு Facebook குழுவாகத் தொடங்கப்பட்டது. இது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உறவுகளை உருவாக்குவதற்கும், உளவியல் துயரங்களைக் குறைப்பதற்கும், வாழ்வில் மனநிறைவை மேம்படுத்துவதற்கும் ஒரு ஆதரவான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

இருப்பினும், கோவிட்-19 நோய்தொற்றால் அமலாகிய லாக்டவுண் சமயத்தில், ​​சமூக இணைப்புக்கான தேவை அதிகரித்ததால், அதை முழு அளவிலான செயலியாக உருவாக்க இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, ஆப்பினை பயனர்களுக்கான தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைத்தனர்.

பயனாளர்கள் செயலியை பயன்படுத்தி குரூப் சேட் செய்யலாம். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மற்றும் ஆப்`பின் மூலம் கிடைக்கும் நண்பர்களை சந்திக்கவும் வழிவகுக்கிறது. மற்ற செயலிகளை போன்றே பயனாளர்கள் அவர்களது வயது, பொதுவான ஆர்வங்கள் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் புரோஃபைலை உருவாக்கலாம். இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கானது.

மேலும், இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் அம்சமும் உள்ளது. இந்த அம்சத்தினை முக்கியமாக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பயனரின் அடையாளத்தை கண்டறிவதன் மூலம் தவறான பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தியதாக நிறுவனர்கள் தெரிவித்தனர். மிஹானைப் பொறுத்தவரை, Buddy Up ஒரு கேம் சேஞ்சர். வீர் உடனான நட்பைப் பற்றி அவர் சோஷியல் ஸ்டோரியிடம் கூறுகையில்,

"வீர் சுதந்திரமானவர். யார் உதவியுமின்றி சாலைகளை கடந்து தனியாக பயணம் செய்கிறார். ஒன்றாக இசை நிகழ்ச்சிக்கு, நைட் டின்னருக்கு செல்கிறோம். ஆப்பின் உதவியுடன் பிற நண்பர்களையும் கண்டறிந்துள்ளோம். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு என் நண்பர்களை இழந்துவிடுவேன் என்று கவலைப்பட்டேன். ஆனால் இன்று இந்தியா முழுவதும் எனக்கு நண்பர்கள் உள்ளனர்," என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

பயனாளர்கள் அவர்களது இயலாமையை பொருட்படுத்தாமல், ஒருவருக்கொருவர் நட்பை உருவாக்கக்கூடிய ஆதரவான சூழலை வழங்குவதே ஆப்பின் நோக்கமாகும். பார்வைக் குறைபாடுள்ள பயனர்களுக்கும் ஆப்பினை உபயோகிக்க வழிசெய்துள்ளனர்.

ஆப்`பினை நிறுவி சுமார் ஐந்து வாரங்கள் ஆகியுள்ள நிலையில், Buddy Up 1,184 பதிவுகளைப் பெற்றுள்ளது, இதில் 43% கணக்குகள் பராமரிப்பாளர்களாலும் 57% மாற்றுத்திறனாளிகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

"முழுமையாக எங்களது சொந்த நிதியிலிருந்து இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். மேலும் அதை ஒரு சுய-நிலையான வணிகமாதிரியாக மாற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்," என்று கூறினார் கோபிகா.