‘மோசடியை தேசியவாதம் கொண்டு மறைக்க முடியாது’ - அதானி குழும பதிலுக்கு Hindenrburg பதிலடி!
இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என தனது அறிக்கை தொடர்பாக அதானி குழுமம் அளித்துள்ள பதிலை ஹிண்டன்பர்க் நிறுவனம் நிராகரித்துள்ளதோடு, மோசடியை தேசியவாதம் கொண்டு மறைக்க முடியாது என தெரிவித்துள்ளது.
அமெரிக்க முதலீட்டு ஆய்வு நிறுவனம் Hindenrburg ரிசர்ச், தனது அறிக்கை இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்னும் அதானி குழமத்தின் பதிலை நிராகரித்து, மோசடியை, தேசியவாதம் அல்லது முக்கியக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத மிகையான எதிர்வினையால் மூடி மறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
ஞாயிறு மாலை அதானி குழுமம் வெளியிட்ட 413 பக்க எதிர்வினைக்கு பதில் அளித்துள்ள ஹிண்டன்பர்க் ரிசர்ச்,
இந்தியா துடிப்பான ஜனநாயகம் மற்றும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட வளர்ந்து வரும் வல்லரசு என நம்புவதாகவும், அதன் முன்னேற்றத்தை அதானி குழுமம் திட்டமிட்ட கொள்ளை மூலம் பிடித்து இழுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம், மிக மோசமான பங்கு கையாள்வது மற்றும் தணிக்கை மோசடியில் கடந்த இருபது ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக, தனது இரண்டு ஆய்வின் அடிப்படையில் கூறிய குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் பணக்காரரான கவுதம் அதானியால் நடத்தப்படும் அதானி குழுமத்தின் எதிர்வினை, நாங்கள் தான் மான்ஹட்டனின் மேடோப்கள் எனும் பரபரப்பான குற்றச்சாட்டுடன் துவங்குவதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
பொருந்தக்கூடிய பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை விதிகளை நாங்கள் மீறியிருப்பதாகவும் அதானி குழுமம் குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள Hindenrburg ரிசர்ச்,
“இத்தகைய சட்டம் எதையும் அதானி குழுமம் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த தீவிரமான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்கிறோம் என்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.”
அதானி குழுமம் தனது பதிலில்,
ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் இந்தியா மீதும், அதன் நிறுவனங்கள் மற்றும் வளர்ச்சிக்கதை மீதும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்றும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
பங்கு விலையை சரிய வைப்பதன் மூலம், நிதி லாபம் பார்க்க அமெரிக்க நிறுவனங்களுக்கு வழி வகுக்கும் வகையிலான போலிச்சந்தையை உருவாக்கும் உள்நோக்கம் கொண்ட அறிக்கை என்றும் ஹிண்டன்பர்க் புகார்கள் பற்றி அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
உள்நோக்கத்திற்கு ஏற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட பிழைத்தகவல்கள் மற்றும் மூடி மறைக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஆதாரமில்லாத, பொருந்தாத குற்றச்சாட்டுகளை கொண்ட அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
"இது ஆதாய முரண்களை கொண்டுள்ளதோடு, ஒப்புக்கொள்ளப்பட்ட ஷார்ட்ச்செல்லரான ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு சாதகமாக பொய்யான சந்தையை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தவறான வழியில் பெரும் ஆதாயம் பார்க்கவும் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.
Hindenrburg மறுப்பு அறிக்கை
முக்கியப் பிரச்சனைகளில் இருந்து திசைத்திருப்ப தேசியவாத சொல்லாடலை அதானி குழுமம் கையாள்கிறது என இந்த புகாருக்கு ஹிண்டன்பர்க் மறுப்பு தெரிவித்துள்ளது.
"அதானி குழுமம், தனது வளர்ச்சி மற்றும் நிறுவனரின் செல்வத்தை இந்தியாவின் வெற்றியோடு இணைக்க முயற்சிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இதில் நாங்கள் முரண்படுகிறோம். நிச்சயமாக, இந்தியா துடிப்பான ஜனநாயகம் மற்றும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட வளர்ந்து வரும் வல்லரசு என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
”மேலும், இந்திய தேசியக்கொடியை போர்த்திக்கொண்டு, திட்டமிட்டு தேசத்தை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் இந்தியாவின் வளர்ச்சியை பிடித்து இழுப்பதாகவும் நம்புகிறோம்,” என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய செல்வந்தரால் மேற்கொள்ளப்பட்டாலும் ஒரு மோசடி, மோசடியே என குறிப்பிட்டுள்ள நிறுவனம், அதானி குழுமத்தின் 413 பக்க பதிலில் 30 பக்கங்கள் மட்டுமே அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 330 பக்கங்கள், நீதிமன்ற ஆவணங்கள், 53 பக்க விவரமான நிதித் தகவல்கள், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, பாதுகாப்பான காய்கறிகள் தயாரிப்பது போன்ற பொருத்தமில்லாத தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
"அதானி குழுமத்திடம் எங்கள் அறிக்கை 88 குறிப்பிட்ட கேள்விகளை கேட்டிருந்தது. அதன் பதிலில் குழுமம், 62 கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தவறியுள்ளது. மாறாக, கேள்விகளை ஒன்றாக இணைத்து, மழுப்பலான பொதுவான பதில்களை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பதில் எப்படி குற்றச்சாட்டுகளுக்கு போதுமானதாக இல்லை,” என தெரிவித்துள்ளது.
ஷார்ட் செல்லிங்கில் ஈடுபடும் நியூயார்க் நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர், வெளியிட்ட அறிக்கைம் காரணமாக அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
செய்தி : பிடிஐ
அதானியால் எல்.ஐ.சி.க்கு ஏற்பட்ட பரிதாபம் - இரண்டு நாட்களில் ரூ.16,580 கோடி இழப்பு!
Edited by Induja Raghunathan