10 லட்சம் மணிநேரம் நிறைவு - கருடா ஏரோஸ்பேஸின் வேளான் ட்ரோன்கள் சாதனை!
ஒவ்வொரு 2 நிமிடத்துக்கு ஒரு ட்ரோன் டேக் -ஆப். கருடா ஏரோஸ்பேஸின் அக்ரி கிசான் ட்ரோன், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு மூலம் இந்திய விவசாயத்தில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
2,000 க்கும் மேற்பட்ட அக்ரி-ட்ரோன்களைக் கொண்ட 'கருடா ஏரோஸ்பேஸ்' கடந்த ஆண்டில் சராசரியாக இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ட்ரோன் வீதம் 10 லட்சம் மணிநேரம் பறந்து நிறைவு செய்துள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் மற்றும் இந்தியாவில் ட்ரோன்களின் அதிகரித்து வரும் தாக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக
இந்த 10 லட்ச மணி நேர பறத்தல் சாதனை நிறைவடைந்துள்ளது.
கருடா ஏரோஸ்பேஸின் அக்ரி கிசான் ட்ரோன், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு மூலம் இந்திய விவசாயத்தை தொடர்ந்து மாற்றுகிறது. இந்த உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மற்றும் ஜிபிஎஸ் வழிகாட்டுதல்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் விவசாயிகளுக்கு விளையும் நன்மைகள் என்று பட்டியிட்டுள்ளது கருடா ஏர்ஸ்பேஸ்:
துல்லியமான விவசாயம்: பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் இலக்கு சிகிச்சைகளை வழங்குதல், வளப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு ட்ரோன்கள் உதவும், எனத் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தாக்கம் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்: சுற்றுச்சூழல் பாதிப்பில்லா நீடித்த விவசாய நடைமுறைகள் கழிவுகளைக் குறைக்கின்றன, விவசாயிகளுக்கு பாதுகாப்பான வேலைச் சூழ்நிலைமைகளை உருவாக்குகின்றன.
நிகழ்நேர கண்காணிப்பு: பயிர் ஆரோக்கியத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, பூச்சிகள், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
இது குறித்து கருடா ஏர்ஸ்பேஸ் இணை நிறுவனர் ரித்திகா மோகன் கூறும்போது,
“நாங்கள் பாரம்பரிய விவசாய முறையை மாற்றி, இந்திய விவசாயத்தை நிலையானதாகவும், மீட்டெடுக்கவும், மாற்றவும் உதவுகிறோம்,” என்றார்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான அக்னீஷ்வர் ஜெயப்பிரகாஷ் கூறும்போது,
“10 லட்சம் மணிநேர விவசாய ட்ரோன் செயல்பாடுகளின் எங்கள் சாதனை இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஒவ்வொரு விவசாயிக்கும் புதுமையான, அணுகக்கூடிய தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் ஆழ்ந்த உறுதியுடன் இருக்கிறோம், மேலும் இந்த மைல்கல் இந்தியாவின் விவசாய நிலப்பரப்பை சுற்றுச்சூழல் தாக்கத்தினால் பாதிக்கப்படாத ஒரு நீடித்த எதிர்காலத்திற்காக மாற்றுவதில் நாம் செய்து வரும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது,” என்றார்.