Gold Rate Chennai: குறைந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.80 சரிவு!
கடந்த சில வாரங்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை சற்றே குறைய ஆரம்பித்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைய ஆரம்பித்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (27/03/2023)
கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த சனிக்கிழமை முதலே தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று சற்றே சரிந்த தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது இனியும் நகை வாங்க முடியுமா? என ஏக்கத்துடன் காத்திருந்த நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,550 ரூபாய்க்கும், சவரன் 44.400 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,540 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 44,320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 6,061 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 48,488 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 76 ரூபாய்க்கும், ஒரு கிலே 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தொடர் சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சரிவில் இருந்த டாலர் மதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திற்கு பதிலாக டாலர் மீது திரும்பியுள்ளது, அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,540 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,320 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,061 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,488 (மாற்றம்: ரூ.80 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,475 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,800 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,973 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 47,784 (மாற்றம்: ரூ.80 குறைவு)