Gold Rate Chennai: அடுத்த அதிர்ச்சி... ரூ.59,000-ஐ கடந்தது தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்து, மீண்டும் சவரனுக்கு ரூ.56,000-ஐ தாண்டியுள்ளது நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
காணும் பொங்கல் தினமான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்து, மீண்டும் சவரனுக்கு ரூ.56,000-ஐ தாண்டியுள்ளது நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,340 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.58,720 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.8,007 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.64,056 ஆகவும் இருந்தது. இப்போது மீண்டும் வெகுவாக விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (16.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,390 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.59,120 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 உயர்ந்து ரூ.8,062 ஆகவும், சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.64,496 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (16.1.2025) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா உயர்ந்து ரூ.101.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 உயர்ந்து ரூ.1,01,100 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவதும், பண்டிகை காலம் என்பதாலும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,390 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,120 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,062 (ரூ.55 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,496 (ரூ.440 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,390 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,120 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,062 (ரூ.55 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,496 (ரூ.440 உயர்வு)
Edited by Induja Raghunathan