Gold Rate Chennai: புயலுக்குப் பின் அமைதி: தங்கம் விலையில் மாற்றம் இல்லை!
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.60,000-ஐ கடந்து வரலாறு காணாத உயர்வை எட்டிய நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அமைதி காத்துள்ளது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.60,000-ஐ கடந்து வரலாறு காணாத உயர்வை எட்டிய நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அமைதி காத்துள்ளது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.7,525 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 ரூ.60,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.86 உயர்ந்து ரூ.8,209 ஆகவும், சவரன் விலை ரூ.688 உயர்ந்து ரூ.65,672 ஆகவும் இருந்தது. இந்நிலையில், புயலுக்குப் பின் அமைதி என்பது போல இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (23.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,525 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.60,200 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,209 ஆகவும், சவரன் விலை ரூ.65,672 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (23.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,04,000 ஆகவும் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவது, ஆபரணத் தங்கத்தின் விலை குறையாததற்கு காரணம். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பொருளாதார கொள்கைகள் சார்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம். இந்த விலை உயர்வு போக்கு மேலும் நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,525 (மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,200 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,209 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,672 (மாற்றம் இல்லை)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan