Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ‘அமைதி’ காக்கும் தங்கம் விலை - இனி ஏறுமா? இறங்குமா?

கடந்த சில தினங்களாக வெகுவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது மாற்றமின்றி தொடர்வது, நகை வாங்க விழைவோருக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

Gold Rate Chennai: ‘அமைதி’ காக்கும் தங்கம் விலை - இனி ஏறுமா? இறங்குமா?

Tuesday January 21, 2025 , 2 min Read

கடந்த சில தினங்களாக வெகுவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது மாற்றமின்றி தொடர்வது, நகை வாங்க விழைவோருக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தாக்கம் தெரிய வரலாம்.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,450 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.59,600 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.12 உயர்ந்து ரூ.8,123 ஆகவும், சவரன் விலை ரூ.96 உயர்ந்து ரூ.64,984 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (21.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,450 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.59,600 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,123 ஆகவும், சவரன் விலை ரூ.64,984 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (21.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,04,000 ஆகவும் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவதும் ஆபரணத் தங்கத்தின் விலை குறையாததற்கு காரணம். குறிப்பாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது பொருளாதார நடவடிக்கைகளை வர்த்தக உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,450 (மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,600 (மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,123 (மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,984 (மாற்றம் இல்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,450 (மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,600 (மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,123 (மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,984 (மாற்றம் இல்லை)


Edited by Induja Raghunathan