Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ரூ.66,000-ஐ எட்டியது தங்கம் விலை - மீண்டும் உச்சம் ஏன்?

கடந்த இரு வர்த்தக தினங்களில் சற்றே சரிந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, சவரன் விலை மீண்டும் ரூ.66,000-ஐ எட்டியது நகை வாங்குவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Chennai: ரூ.66,000-ஐ எட்டியது தங்கம் விலை - மீண்டும் உச்சம் ஏன்?

Tuesday March 18, 2025 , 2 min Read

கடந்த இரு வர்த்தக தினங்களில் சற்றே சரிந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, சவரன் விலை மீண்டும் ரூ.66,000-ஐ எட்டியது நகை வாங்குவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் புதிய உச்சம் நோக்கி நகருமா என்ற அச்சமும் வலுத்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.8,210 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.65,680 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.8,956 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.71,648 ஆகவும் இருந்தது. தற்போது தங்கம் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க் கிழமை (18.3.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.8,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.66,000 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 உயர்ந்து ரூ.9,000 ஆகவும், சவரன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.72,000 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (18.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.113 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,100 உயர்ந்து ரூ.1,13,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold rate chennai

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக மீண்டெழுந்துள்ளது. அதேபோல், பங்குச் சந்தையும் சரிவுகளில் இருந்து மீண்டு வருகிறது. எனினும், சர்வதேச பொருளாதார போக்குகளின் தாக்கமாக, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான முதலீடாகவே தங்கத்தை மக்கள் பார்த்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலையும் கூடி வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,240 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,000 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,000 (ரூ.44 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,000 (ரூ.352 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,240 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,000 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,000 (ரூ.44 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,000 (ரூ.352 உயர்வு)


Edited by Induja Raghunathan