Gold Rate Chennai: புதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரன் ரூ.56,000-க்கு விற்பனை!
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் கிராம் விலை ரூ.7,000 ஆகவும், சவரன் விலை ரூ.56,000 ஆகவும் இருப்பது நகை வாங்குவோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் கிராம் விலை ரூ.7,000 ஆகவும், சவரன் விலை ரூ.56,000 ஆகவும் இருப்பது நகை வாங்குவோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.6,980 ஆகவும், சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.55,840 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.7,615 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.60,920 ஆகவும் இருக்கிறது. இப்போது புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (24.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.7,000 ஆகவும், சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.56,000 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.7,636 ஆகவும், சவரன் விலை ரூ.168 உயர்ந்து ரூ.61,088 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை (24-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.98,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை சமீபத்தில் குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கு நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,000 (ரூ.20 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,000 (ரூ.160 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,636 (ரூ.21 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,088 (ரூ.168 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan